Author: admin

சுற்றுச்சூழல் போராளி பியூஸ் மானுஸ் ஆதரவாக கழகம் சுவரொட்டி

தமிழக அரசே சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மற்றும் இருவர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெறு பியூஸ் மானுஸ் அவர்களை சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய் சம்மந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய் இயற்கையை நாசப்படுத்தும் லாப வெளி பெருமுதலாளிகள், துணை நிற்கும் அரசு, அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம், இயற்கையை பாதுகாப்போம் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம்

அமாவாசையில் பிறந்த பிள்ளை

அமாவாசையில் பிறந்த பிள்ளை

மாடு செத்தால் எடுத்துப் போய்தின்று விடுகிறார்கள். குதிரை செத்தால் சாப்பிடாமல் புதைதது விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன; நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்குத்தான் ஒட்ட வைத்து விட்டார்கள்.                                                   – பெரியார், ‘விடுதலை’ 22.11.1972 பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார் என்றால் இது குதிரைச் சாதகம், இது கழுதைச் சாதகம் என்று கூற மாட்டானே! உடனே பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்துக்கு வித்தியாசம் தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூற முடியும் என்று நம் மக்கள் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லையே!                                             – பெரியார், ‘விடுதலை’ 9.10.1964   அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று சோசியத்தில் நம்பிக்கையுள்ளவன் கருதினாலும் அவன் வீட்டில் ஒரு அமாவாசையில் பிறந்த ஒருவன்...

தீ மிதிப்பது பக்தியாலா?

தீ மிதிப்பது பக்தியாலா?

தீயில் மனிதன் நடப்பது என்பது ‘கடவுள் செயல்’ என்றும், கடவுள் மீது உள்ள பக்தியின் காரணமாகவே நடக்க முடிகிறது என்றும் மக்கள் நம்பி னார்கள். மதவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்ப இம்முறையைத் தங்கள் மத விழாவாகப் பயன்படுத்தினார்கள். இம்முறை இந்தியாவிலும், மலேசியா விலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், பரவலாக இந்துக்களும், சில இடங்களில் முகமதியர்களும் தீமிதி விழாக்களை நடத்துகிறார்கள். தீ குழியின் அமைப்பு : தீ குழியின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டிருக்கும். சராசரியாக 15 அடி நீளமும், 5 அடி அகலமும், 2 அடி உயரமும் உடையதாக இருக்கும். பாற்குழி ஒன்று இருக்கும். (பசு அல்லது வெள்ளாட்டின் பால் நிரப்பப்பட்ட சிறிய குழி) முதலில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எரிய விடுகிறார்கள். அந்த மரக்கட்டைகள் எரிந்து தணல் கட்டிகளாக ஆன பின்னால் இரண்டு மூன்று பேர் நீளமான மூங்கிற் குச்சிகளைக் கொண்டு தணல் கட்டிகளைக் குத்தி உடைத்து தீ குழி...

முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை

முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம் உள்ளது. அதில் அருகிலுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராக இருக்கிறார். மழை வேண்டியும் மக்கள் நலனுக்காகவும் இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (சூன் 11, 2004) இரவு 8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்குள் தவம் இருக்கத் தொடங்கினார். ஞாயிறு காலை சரியாக 8 மணிக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள். இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழிதோண்டி குழிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடு வெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி’யை பக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முதலில் நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குன் முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப் பொருள்கள், பழங்கள், தண்ணீர் முதலியன வைக்கப்படும். அதன் பிறகு...

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

சென்னை மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் (மயிலாப்பூர் பகுதி) மற்றும் அனைத்து இயக்கங்கள் – பொது மக்கள் ஒருங்கிணைந்து 3.7.2016 பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை மயிலாப்பூர் செயின்மேரீஸ் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை (மதுபான) அகற்றக்கோரி, முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மயிலை பகுதி தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை பொருப்பாளர்கள் ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, முனுசாமி, நாகேந்திரன், தென் சென்னை மாவட்ட பொருப்பாளர்கள் வேழவேந்தன், சு. பிரகாசு, ஜான் மண்டேலா, எப்.டி.எல். செந்தில், வேலு, பகுதி பொருப்பாளர்கள் மாரி, மனோகர், சிவா, விழுப்புரம்அய்யனார்,  குமரன், நந்தா உள்பட இப்பகுதியை சார்ந்த முகிலன், சுரேஷ், கமலேஷ், பிரவின், பார்த்தா, பாஸ்கர், $தர், ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

பரப்புரைப் பயணம்:  சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

பரப்புரைப் பயணம்: சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16, ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் கமலக் கண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. எழிலன் தலைமை வகித்தார். கழகப் பொருப்பாளர்கள் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 89 வயதான மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சித்தோடு பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது. கழகப்பரப்புரைப் பயணத்தை நடத்துவது குறித்தும் கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பு குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தோழர்களுக்கு கமலக்கண்ணன் சிற்றுண்டிவழங்கினார். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’. மனநல மருத்துவர் டாக்டர் கோவூர் சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)   காலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண் டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமை வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்ன விஷயம்’ என்று கேட்டார். தன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரி என்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன் வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப் பியூனின் வீடு இருப்பதாகவும்...

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூலால் இணைந்த பெரியாரியல் தோழர்கள் முகநூலையும் தாண்டிய களப்பணிக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாய் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் 9-7-2016, 10-7-2016 இரண்டுநாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்தியனர். தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், பேராசிரியர் நடராஜன் வகுப்புகளை எடுத்தனர். கோபால் இராமகிருஷ்னன், இரா. செந்தில் குமார் (குனுடு), வைரவேல், ஆனந்த் பொள்ளாச்சி, அருள்குமார், சோமசுந்தரம், அருள் நாராயணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பகுத்தறிவாளர் பாசறை பெரியாரியலை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு. பெரியார் முழக்கம் 22072016 இதழ்

வாட்டி வதைக்கும் ‘வாஸ்து’ நம்பிக்கை

‘வாஸ்து’ நம்பிக்கை, இப்போது படித்தவர்கள், அரசியல்வாதிகள், மேல்மட்டத் தினரிடம் வேகமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள்,  இப்போதெல்லாம் மக்களை நம்புவதைவிட யாகங்களையும் வாஸ்துக்களையும், சோதிடர்களையும் நம்பத்துவங்கிவிட்டனர். இந்த ஆலோசகர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால், மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். சென்னை கடற்கரைச் சாலையில் கையில் சிலம்புடன் ஆவேசத்துடன் நீதி கேட்கும் கண்ணகிசலை, கடந்தகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால்  2002இல் அகற்றப்பட்டது. போக்குவரத்துப் பிரச்சினைதான் காரணம் என்று பொருந்தாத ஒரு சமாதானம் சொல்லப்பட்டாலும், ‘வாஸ்து’ நம்பிக்கையின்படிதான் அது அகற்றப்பட்டது என்று செய்திகள் வந்தன. தமிழக முதலமைச்சர் அந்த வழியாகக் கோட்டைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இப்படி ஒரு சிலை நிற்பது முதலமைச்சருக்கு நல்லது அல்ல என்று சில வாஸ்து பண்டிதர்கள் கூறியதால், சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் பிரதமர்கள், முதலமைச்சர்கள், தலைவர்கள், உயர் அதிகாரிகள், இந்த வாஸ்து மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்கி, தங்கள் அலுவலகக் கட்டிடங்களை...

சுற்றுச் சூழல் போராளி பியூஸ் மீதான சிறை தாக்குதலுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, சேலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திர வதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை சிறையில் தாக்கி சித்திரவதை செய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர...

“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது?”

தெரு ஓரத்தில் மக்களைக் கூட்டி தாயத்து விற்கும் மந்திரவாதிகளின்மோசடிகளைக்கூட நம்பிக் கொண்டிருந்தவர்கள் நாம். இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி திரைப்படங்களில்கூட காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு திரைப்படத்தில் நடிகர் மயில்சாமி தாயத்து விற்பார். கூட்டத்தோடு கூட்டமாக தனது ஆளையே நிற்க வைத்து, பிறகு அந்த ஆளையே மந்திரத்தால் மயங்கி விழுந்தவர்போல நடிக்க வைத்து படுக்க வைப்பார். சூழ்ந்து நிற்கும் கூட்டம் பற்றி நன்றாக புரிந்த அந்த ஆசாமியை படுக்கவைத்து உடலையும் முகத்தையும் துணியால் மூடி, மயில்சாமி கூட்டத்தினர் பற்றி கேள்வி  கேட்பார். மயங்கி படுத்திருப்பது போல் நடிக்கும் ஆசாமியிடமிருந்து சட்டென்று பதில்கள் வரும். வேடிக்கைப் பார்ப்பவர்கள் சட்டைப் பையில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து போடா விட்டால் ‘இரத்தம் கக்கி சாக வேண்டி வரும்’ என்று மந்திரவாதி மிரட்டுவார். கூட்டத்தில் நிற்கும் நடிகர் வடிவேலு பையில் உள்ள பணம் முழுவதையும் போடாமல் 10 ரூபாய் மட்டுமே போட, மயங்கிக் கிடக்கிற மனிதன், அந்த ஆள் பணம் முழுவதையும் போடவில்லை என்று...

கிரகங்களிலும் ஜாதி

கிரகங்களைப் பற்றிய ஜோதிடர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. கிரகங்களை ஆண், பெண் என்று மட்டுமல்ல ‘அலி’ என்றுகூட வகைப்படுத் தியிருக்கிறார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் அது நிஜமே. சூரியன், செவ்வாய், குரு ஆண்கள்! சந்திரன், சுக்ரன், ராகு பெண்கள்! புதன், சனி, கேது ‘அலி’கள்! மனிதர்களைப் போல் கிரகங்களைப் பாவிக்க  ஆரம்பித்து விட்டால் பிறகு சகல கல்யாண குணங்களையும் கொடுத்துவிட வேண்டியது தானே. எந்தக் கிரகம் உயரம், குட்டை, சமம்? எது வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை? எது எதற்கு என்ன உடைவாகனம் யாது? என்றெல்லாம்   பட்டியலிட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சாதிப் பாகுபாடுகூட வகுத்து விட்டார்கள்!  குரு, சுக்ரன் – பிராமண ஜாதி; சூரியன், செவ்வாய்- ஷத்திரிய ஜாதி; சந்திரன், புதன் – வைசிய ஜாதி; சனி – சூத்திரஜாதி; ராகு, கேது – சங்கிரம ஜாதி – என்று எழுதி வைத்திருக்கிறார்கள். படுமோசமான கிரகம் என்றும், ஏழரை...

படித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை?

பேய், பிசாசு உண்மையா? அறிவியல் ரீதியான ஒரு அலசல். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’ உலவுவதாகப் பொதுவாக யாரும் அதேபோல் நம்புவதில்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் யாரை தொந்தரவு செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களை தொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு...

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள் இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு …………………… 540 மணி எமகண்டம் 1 மாதத்திற்கு…. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு………………….. 540 மணி அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்) ஒரு ஆண்டிற்கு… 48 ஒ 12=576மணி நவமி (மாதத்திற்கு 2 நாள்) ஒரு ஆண்டிற்கு ………………….. 48 ஒ 12=576 மணி மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45 ஒரு ஆண்டிற்கு 540 மணி (மாதத்தில் 3 நாட்கள்) கரிநாள் ஒரு ஆண்டிற்கு…. 864 மணி (பாட்டிமை மாதம் 2 நாட்கள்) பிரதமை ஒரு ஆண்டிற்கு….. 48 ஒ 12=576 மணி சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு ஒரு நாள்.. .. 24 மணி சந்திர கிரகணம் ஒரு ஆண்டிற்கு ஒரு நாள் 24 மணி மதம் சார்ந்த...

சோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை!

பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கை களிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து. ஜோதிடம் ஓர்அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு – ஜோதிடருக்கு – ‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே’ என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. எனினும் பலரது நெஞ்சங்களிலும் எழுகிற ஒரு கேள்வி என்னவென்றால் ‘கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு தானே சோதிடம் கணிக்கிறார்கள். நாம் வாழுகிற இந்த பிரபஞ்சத்தில்தானே கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அவற்றின் நிலை மாற்றங்கள் மனிதனை பாதிக்காதா?’ என்பதாகும். இது சற்று விரிவாக விசாரணை நடத்த வேண்டிய விஷயம். முதலில் கிரகங்கள் குறித்து இந்த  ஜோதிட வித்வான்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்போம். ‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின்...

அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

சந்திரன் ஒரு தெய்வம் அல்ல; அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர் ஆனக்ஸாகரஸ். ஏதன்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதன்சு நகர மன்னர் பெரிக்ளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர். சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக, சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார், கோபர்நிகஸ். மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்; கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட்  மதத்தை நிறுவிய மார்ட்டின் லூதர், கோபர்நிகசை ‘முட்டாள்!’ என்று கூறி  இழிவுபடுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத  கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போதும் தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார். விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக்...

‘மாட்டுக்கறி’ சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகலாம்!

அருணாசலப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் 3000 பேரில் பெரும்பாலோர் மாட்டுக் கறி சாப்பிடுவோர் என்ற தகவல் வெளி வந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களே இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பிரச்சார செயலாளராக உள்ள (பிரச்சார் பிரமுக்) மன்மோகன்  வைத்யா, 2015 டிசம்பர் 8 – அளித்த பேட்டியில் “மாட்டிறைச்சி சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. மாட்டிறைச்சி உண்ணுவோருக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ்.மீது உருவாக்கப்படும் தவறான ‘பிம்பத்தை’ நீக்குவதற்கு நாங்கள் தீவிரமாக முயன்று வருகிறோம். இந்தியாவை முதன்மையான நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு மத அமைப்பு அல்ல. அது ஒரு சமூக அமைப்பு. மாட்டிறைச்சியை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தவில்லை. மக்களின் உணவுப் பழக்கங்களில் தலையிடுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. தேச விரோதிகள் மட்டுமே எங்களின் எதிரிகள்” என்று...

கழகம் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டறிக்கை காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கி விட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை.  2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிரு க்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி                            (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய  இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க...

சோதிடத்தை மறுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள்

கடவுள் நம்பிக்கையாளர்களே சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள் – சோதிடம் ஒரு மோசடி என்று கூறியிருக்கிறார்கள்.   அப்துல் கலாம் : இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தை மக்களின்  பாராட்டுகளோடு முடித்துக் காட்டினார். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் பதவிக்கு  அவரை வாஜ்பாய்பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சி தேர்வு  செய்த போது கூட பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைச்சர் எந்த நாளில் பதவியேற்பு  விழாவை வைத்துக் கொள்ளலாம்; சோதிடப்படி உங்களுக்கு  ‘நாள் நட்சத்திரத்திற்கு’ ஏற்ற நல்ல நாள் எது என்று கேட்டார். அதற்கு அப்துல்கலாம் இவ்வாறு பதில் அளித்தார். “பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டி ருக்கிறது. காலம், நேரம் இரண்டுக்குமே இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாள்களும் நல்ல...

கல்வி வள்ளல் காமராசர் 114 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருட்டிணகிரி 24072016

24-7-2016 அன்று மாலை 6-30 மணியளவில், கிருட்டிணகிரி, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பழனி நினைவுமேடையில், கிருட்டிணகிரி நுகர்வோர் சேவை சங்கத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின் 114ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நுகர்வோர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளருமாகிய இராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். நுகர்வோர் சேவை சங்கத்தின் தலைவர் தட்டக்கல் கோவிந்தசாமி, செய்தியாளர் கிருஷ்ணமூர்த்திராவ், சக்தி மனோகரன் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் காமராசரின் கல்வி சேவைகளை, தனது முதல் அமைச்சரவையை பார்ப்பனர் பங்கேற்காத அமைச்சரவையாய் அமைத்த பாங்கினை, அறநிலைய பாதுகாப்பு அமைச்சராகவும்ம், உள்துறை அமைச்சராகவும் தாழ்த்தப்பட்டோரை நியமித்த சமூகநீதி சிந்தனையையும், இந்த்துத்துவ மதவாத வன்முறையாளர்கள் தனது வீட்டுக்குத் தீ வைத்து சூறையாடியபோதும் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றுவதை அனுமதிக்காத துணிச்சலையும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்குரைஞர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்புரையாற்றார்....

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் பெற்றோருக்கு ஆறுதல்

23-7-2016 அன்று இரவு 7-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருலாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செய்லாளர் முகில் ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் மருத்துவர் சரவணின் இல்லம் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்களோடு உரையாடி வந்தனர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின்...

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016

கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே!  காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம் ஈரோடு 24072016

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம். நாள் : 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை. இடம் : பெரியார் JCP சர்வீஸ் சென்டர், சூரம்பட்டி வலசு,ஈரோடு. தலைமை : தோழர் பால்.பிரபாகரன்,பரப்புரை செயலாளர். முன்னிலை : தோழர் ரத்தினசாமி,அமைப்புச் செயலாளர். தோழர் திருப்பூர் துரைசாமி,பொருளாளர். பொருள் : 1) பரப்புரை பயணத்தில் பேசுவதற்கான செய்திகளை திட்டமிடல். 2) மந்திரமா?தந்திரமா? செயல் விளக்கம் குறித்து அறிதல். 3) பயணத்திட்டங்களை வகுத்தல். பரப்புரை பயண திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கழக தோழர்கள் அவசியம் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : பரப்புரை பயணத்தில் பேசுபவர்கள் தாங்கள் பேசவிருக்கும் செய்திகளை தயார் செய்து கொண்டு வரவும். தொடர்புக்கு : 98650113393 – 9842712444

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 23072016 திருப்பூர்

நாளை 23.07.2016 அன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். நாள் : 23.07.2016 சனிக்கிழமை மாலை 4 மணி. இடம் : மாநராட்சி அலுவலகம் முன்பு,திருப்பூர். கண்டன உரை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் துரை.வளவன், மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் கனகசபை, வழக்கறிஞர் அணிச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை. தோழர் சு.மூர்த்தி. ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக்குழு. தோழர் மா.பிரகாசு, மாவட்ட செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை. நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் கழகம்.

எழுச்சியுடன் உருவாகும் விருதுநகர் மாவட்ட திவிக

விருதுநகர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக அறிமுக பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றோடு மாவட்ட பொறுப்பாளர்கள்  நியமித்தல் என்பதற்கேற்ப கழக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி ஆர்வமுடன் மக்களை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்னெடுத்தார்கள். எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம் இந்த தலைமுறைக்கு வேலை வேண்டும் என்ற பரப்புரை துண்டறிக்கையை வைத்து இன்று நிதி திரட்டினார்கள். மேலும் அடுத்த கட்டமாக “நம்பங்க அறிவியல, நம்பாதிங்க சாமியார்கள” என்ற அறிவியல் பரப்புரை பயண துண்டறிக்கையை கொண்டு அடுத்த கட்ட பரப்புரை நிதி சேர்த்து எழச்சியுடன் மாவட்ட திவிக கட்டமைக்க உறுதியேற்றுள்ளார்கள். தோழர்கள்  செயக்குமார், செந்தில், சுந்தர் மற்றும் கணேசமூர்த்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள்  

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...

சூழலியல் போராளி பியூஷ் கைதுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, ஏஎலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை நிறையில் தாக்கி சித்திரவதை நெய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர செயலாளர் பரமேஸ் உள்ளிட்டோர் சுமார் 300 பேர் கூடியிருந்தனர். சிறையில் பியூஷைச் சந்தித்துவந்திருந்த வழக்குரைஞர்...

பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...

திருப்பூரில் பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு 24072016 அழைப்பிதழ்

காலை 10 மணிக்கு பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு மதியம் 2.30 மணிக்கு கௌதம் கோஷ் இன் அந்தர் ஜாலி ஜாத்ரா வங்காள படம் திரையிடல் மாலை 5.30 மணிக்கு நூல்கள் அறிமுகம்  

மாட்டுக் கறி உண்ணும் 3000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள்

  கேட்ச்நியூஸ் என்னும் இணையதள செய்தி சுட்டிக்கு    திசம்பர் 13, 2015 மூன்று நாள் பயணமாக அருணாச்சல பிரதேசம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் அனைத்திந்திய பிரச்சார செயலர் மன்மோகன் வித்யா டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ் பீப் உ உண்ணுவதற்கு எதிராக இருக்கும் தோற்றத்தை போக்குவதற்காக செய்யப்படும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராவதற்கு பீப் உண்ணுவது ஒரு தடையாக இருக்க கூடாது. இங்கே 3000 சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பீப் உணவை எடுத்துகொள்வோர். மேலும் ஆர்.எஸ்.எஸ் பீப் தடைக்கு எவ்விதத்திலும் காரணமில்லையென்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரான இயக்கமென்றும் கூறினார். முத்தாய்ப்பாக மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என்றார். (இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி ஆள்சேர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது நிரூபணமாகிறது)

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி… பாமரன்

காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...

காஷ்மீரிகளின் தனித்துவம்….. பாமரன்

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம் ”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.” – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ…… அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்….. நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும். பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…....

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...

இந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீரை விட்டு வெளியேறு!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை. 2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி...

நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … சென்னை திவிக சுவர் விளம்பரங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … ” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை ” பயணத்திற்கு சென்னை மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதும் பணி துவங்கியது … மாவட்ட செயலாளர் இரா .உமாபதி தலைமையில் தோழர். விழுப்புரம் அய்யனார், தோழர். இருதயராஜ், தோழர். தமிழரசன், தோழர். இராவணன், தோழர். வேலு, தோழர் .ஆட்டோ தர்மா ,தோழர் இரா.செந்தில குமார், தோழர் பா.அருண், தோழர். இலட்சுமனன், தோழர். க.ஜெயபிரகாசு, தோழர். நாத்திகன் மற்றும் பல தோழர்கள் களப்பணியில் இரவு முழுவதும் …

அறிவியல் பரப்புரை பயண விபரம் நாள்வாரியாக

7.8.2016 சத்திய மங்கலம் அணி மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம். சென்னை அணி காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல். மயிலாடுதுறை அணி மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம். திருப்பூர் அணி இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்     8.8.2016 சத்திய மங்கலம் அணி காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக்...

‘நம்புங்க-அறிவியல; நம்பாதீங்க-சாமியார்கள’ – அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’

4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி,‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல்பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால் சமூகத்தின் பாதிப்புகளையும் விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின் உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள்...

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் – கொளத்தூர் மணி வேண்டுகோள்

//ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் நடைபெற்ற, பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்தும், தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் உரை குறித்தும் இன்றைய “தமிழ் இந்து” நாளிதழில் வந்துள்ள செய்தி//

தூத்துக்குடி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 8-7-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.பொறிஞர்.சி.அம்புரோசு அவர்கள் தலைமைதாங்கினார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் தோழர்.நாத்திகம் முருகேசனார், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் தோழர் சா.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தோழர்.அம்புரோசு அவர்கள் தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் மோடி அரசின் பார்ப்பன இந்துத்துவ போக்கை கண்டித்து பேசினார். தோழர்.அம்புரோசு அவர்களின் உரையை தொடர்ந்து ஆதித் தமிழர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.கண்ணன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தோழர்.கண்ணன் அவர்களின் உரையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக துணைத் தலைவர் தோழர்.பால்ராசு அவர்கள் உரையாற்றினார். இதனை தொடர்ந்து தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.யூசுப் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார். தோழரின் உரையைத் தொடர்ந்து தூத்துக்குடி...

மேட்டுபாளையத்தில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! நடுவண் அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு 09.07.2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், முன்னிலை- கள்ளகரை சுந்தரமூர்த்தி கண்டன உரை- தோழர்கள் நிர்மல்குமார், பன்னீர்செல்வம், சுதாகர் இயற்கை நல் வாழ்வு சங்கம், தோழர்மூர்த்தி தலைவர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , sdpi நகர தலைவர் பாருக்அப்துல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் பீர் முகமது, நே்ருதாஸ், கலந்துக்கொண்ட தோழர்கள் கிருஷ்ணன், கணேஷ், இனியவன், அலெக்ஸ்,விஷ்ணுபிரசாந்த், தேவபிரசாத், வசந்தகுமார், தேவா ஆகியயோர் கலந்துகொண்டனர் முருகேஷ் நன்றி தெரிவித்தார்

சமஸ்கிருத திணிப்பை மோடி அரசு கைவிடவேண்டும் – மன்னார்குடி திவிக ஆர்பாட்டம்

மன்னார்குடி ஜூலை 9 மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துக்கள் ஏராளம் இருப்பதாக கூறி, ஐஐடிகளிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளது. இவற்றை கைவிட வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மனிதநேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர்...

திருப்பூர் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,பல்லடம் நகர தலைவர் கோவிந்த ராசு, பல்லடம் ஒன்றிய தலைவர் சண்முகம்,அகிலன், தனபால்,மாதவன், சங்கீதா,முத்து, ராமசாமி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்,பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமை தாங்கினார். ,அ.முத்துப்பாண்டி மாவட்டச் பொருளாளர், மு.சாமிநாதன் மாவட்ட தலைவர் ,மா வைரவேல் மாவட்ட அமைப்பாளர் ,நன்றியுரை மு சரவணன் நகரச் செயலாளர் ,ஆ.பிரகாஷ் நகரச் தலைவர்,வெங்கட் ,குப்புசாமி மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்

சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி 08072016

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்க பாலம் அருகில் (நாகநாதர் டீ கடை எதிரில்), நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி,த.பெ.தி.க,ஆதித்தமிழர் பேரவை,சிந்தனையாளர் கழகம்,புதிய தமிழகம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மா.பெ.பொ.கட்சி,பெரியார் பாசறை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.