மாட்டுக் கறி உண்ணும் 3000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள்

 

கேட்ச்நியூஸ் என்னும் இணையதள செய்தி சுட்டிக்கு 

 

திசம்பர் 13, 2015

மூன்று நாள் பயணமாக அருணாச்சல பிரதேசம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் அனைத்திந்திய பிரச்சார செயலர் மன்மோகன் வித்யா டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ் பீப் உ உண்ணுவதற்கு எதிராக இருக்கும் தோற்றத்தை போக்குவதற்காக செய்யப்படும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராவதற்கு பீப் உண்ணுவது ஒரு தடையாக இருக்க கூடாது.

இங்கே 3000 சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பீப் உணவை எடுத்துகொள்வோர்.

மேலும் ஆர்.எஸ்.எஸ் பீப் தடைக்கு எவ்விதத்திலும் காரணமில்லையென்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரான இயக்கமென்றும் கூறினார்.

முத்தாய்ப்பாக மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என்றார்.

(இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி ஆள்சேர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது நிரூபணமாகிறது)

You may also like...