நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் !

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை!
அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்!

ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்….
தொலைக்காட்சிகளைப் பார்த்தால்….
நெஞ்சம் பதறுகிறது.!

அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா?

• சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க…

• பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க.

• “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க.

• குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகாமல் பேய் பிடிச்சிருக்குன்னு கூறி, ‘மந்திரவாதி’களை வரவழைத்து அடிச்சு சித்திரவதை செய்யுறாங்க.

• தொழிலில் இழப்பு; குடும்பத்தில் பிரச்சினை என்றால் குடியிருக்கும் வீட்டுக்கு வாஸ்து சரியில்லைன்னு நம்பிகிட்டு கடனை வாங்கி வீட்டை மாற்றி மாற்றி இடிச்சுக் கட்டுறாங்க.

• குழந்தைகளை சுதந்திரமா வளரவிடாம அறிவியலை முடக்கும் நம்பிக்கைகளைத் திணிக்கிறாங்க…
• எதற்கெடுத்தாலும் ‘பரிகாரம்’, ‘சடங்குகள்’ செய்தால் எல்லாம் சரியாயிடும் என்று நம்பி, பிரச்சினைகளிலிருந்து மீளவே முடியாம தவிக்கிறாங்க…

காலம் காலமாக நம் மீது திணிக்கப்பட்ட பல நம்பிக்கைகள் வாழ்க்கையை பாழாக்கி வருவதை நாம் உணர வேண்டாமா?

நாம் அறிவியலை ஏற்று வாழத் தொடங்கிவிட்டால்…
மூடநம்பிக்கைகளை விட்டுத் தொலைத்தால்…
அப்போது பாருங்கள்….

– வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மாறும்;
– வாழ்க்கையில் குழப்பங்கள் வராது;
– அறிவியல் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும்;
– நம் சக மக்களையும் நம் சமூகத்தையும் அன்போடு அது அரவணைக்கச் செய்யும்.

அந்த அறிவியல் சிந்தனையை நம் மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த முன் வந்திருக்கிறது.

ஆகஸ்ட் 7இல் தொடங்கி 12ஆம் தேதி வரை….
நான்கு முனைகளிலிலிருந்து புறப்பட்டு 6 நாள்களில் பரப்புரை….

சமூகக் கவலையுள்ள அத்தனை நெஞ்சங்களும் இந்த பரப்புரையை ஆதரிக்க உதவிக்கரம் நீட்ட முன் வாருங்கள்; இது நம்முடைய மக்களுக்காக நம்முடைய அறிவியல் வாழ்க்கைக்காக..
.
– திராவிடர் விடுதலைக் கழகம்

கொளத்தூர் மணி,
தலைவர்

விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்

00ec79fa-fd3d-4d51-8f4d-79c704d95388

You may also like...