தூத்துக்குடி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 8-7-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.பொறிஞர்.சி.அம்புரோசு அவர்கள் தலைமைதாங்கினார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் தோழர்.நாத்திகம் முருகேசனார், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் தோழர் சா.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் தோழர்.அம்புரோசு அவர்கள் தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் மோடி அரசின் பார்ப்பன இந்துத்துவ போக்கை கண்டித்து பேசினார். தோழர்.அம்புரோசு அவர்களின் உரையை தொடர்ந்து ஆதித் தமிழர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.கண்ணன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
தோழர்.கண்ணன் அவர்களின் உரையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக துணைத் தலைவர் தோழர்.பால்ராசு அவர்கள் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.யூசுப் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார்.
தோழரின் உரையைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக தோழர் கோ.அ.குமார் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார். அவ்வுரையில், “சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து இந்த திராவிடக் கட்சிகள் ஏன் போராடவில்லை” என்று கேட்டு தமது கண்டன உரையை முடித்தார்.
தோழர் குமாரின் உரையை தொடர்ந்து பண்ணாட்டு தமிழர் உறவு மன்ற தோழர் தோழர்.மோ.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் தமிழ் மொழிக்கு திராவிடர் இயக்கங்கள் ஆற்றிய பங்களிப்பை ஆதாரத்துடன் விளக்கினார்.
இறுதியில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்பதை விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்கள் விளக்கவுரையாற்றினார். அவ்வுரையில் மோடியின் பார்ப்பன அரசு எந்தெந்த வகைகளிலெல்லாம் நம்மீது இந்துத்துவ கொள்கைகளை திணிக்கிறது எனபதை விளக்கி பேசினார். சமஸ்கிருத திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பல்ல. அது இந்துத்துவ கொள்கை திணிப்பு. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரியல்ல. ஆனால் எங்கள் மீது அம்மொழியை திணித்தால் திராவிடர் விடுதலைக் கழகத்துக்காரர்கள் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். வெறும் 1400 பேர் மட்டுமே பேசும் மொழியை 121கோடி மக்கள் மீது திணிப்பது எவ்வகையில் நியாயம் , செத்த மொழி சமஸ்கிருத்த்திற்கு எதற்கு இவ்வளவு முன்னுரிமை” என்று கடுமையாக பேசினார்.
தமிழ் தமிழர் என்று பேசும் தமிழ்தேசிய கம்பெனிகள் சமஸ்கிருத திணிப்பை கண்டுக்காமல் இருப்பது ஏன்?? எந்த திராவிடர் இயக்கம் தமிழர்களுக்கு எதிரானது என்று நீங்கள் சொன்றீர்களோ, அந்த திராவிடர் இயக்கங்கள்தான் இப்போது தெருவில் இறங்கி போராடுகின்றன. தமிழ், தமிழர் என்று பேசும் சுயநலவாதிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். திராவிடர் இயக்கங்கள் மட்டும்தான் தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம்” என்று கூறி தமது விளக்கவுரையை நிறைவு செய்தார்.
இறுதியில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் தோழர்.இரவி சங்கர் நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன், தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் தோழர்.அம்புரோசு, மாவட்ட செயலாளர் இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட துணை தலைவர் பால்ராசு, மாவட்ட துணை செயலாளர் பால சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு.அன்பரசு, தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர்கள் கண்ணதாசன், சூரங்குடி பிரபாகரன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் உதயகுமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாசிலாமணி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா, மற்றும் தூத்துக்குடி தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை, சந்திர சேகர், பிரபாகரன், கீழப்பாவூர் தோழர்கள் சத்தியராசு, சபாபதி, சூரங்குடி ஒன்றிய தோழர்கள் அன்பு செல்வம், பெரியசாமி, அறிவழகன், சங்கர், திலீபன், மாணவர் கழக தோழர்கள் மாணிக்கம், சந்தணம், ஆதித் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.சண்முகவேல், ஆதித் தமிழர் கட்சி தோழர் ஜெயக்குமார் மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.