ஈழத் தமிழர் முதலீட்டில் நடக்கும் ‘லைக்கா’ என்ற தொழில் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழர்களுக்கு குழிப் பறிக்கிறது. நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது வழியாக தமிழ்நாட்டில் தனது மூலதனத்தை முதலிடத் துடிக்கிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத் தீர்மானத்தையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் நசுக்குவதற்கு கொல்லைப்புற வழியாக நுழையும் இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன? முதலாவது: சிங்கள இனவெறி அரசு நடத்திய காமன் வெல்த் மாநாட்டுக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கியது. அதாவது உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் அம்மாநாட்டை புறக் கணிக்கக் கோரி போராட்டங்கள், உண்ணா விரதங்கள் நடத்தி வந்த வேளையில் அதுவும் ஈழத் தழிழர்களாக இருந்துகொண்டு அம்மாநாட்டை பலப்படுத்த அதி உயர்ந்த “கோல் °பான்சர்” செய்துள்ளது “லைக்கா மொபைல்” நிறுவனம். இரண்டாவது: பிரித்தானியாவில் உள்ள சிங்கள அரசின் நிதி உதவியுடன் இயங்கும் புத்த பிக்குகள் நடத்தும்...
மனித உயிர்கள் இங்கே மலிவானவை; அதுவும் ஜாதியில், பொருளாதாரத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் உயிர் மதிப்பில்லாதவை. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் நடந்திருக்கும் நிகழ்வு ‘மனிதம்’ இந்த சமூகத்தில் மரணித்து விட்டதா என்று கேட்கத் தூண்டுகிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இசக்கி யம்மனின் கோயில் திருவிழாவுக்காக கிராமத் தில் பல ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் கூடியிருக்கிறார்கள். முதல் நாள் இரவு, அந்த ஏழை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கோயில் மைதானத்திலேயே கழிக்க அவர்களின் குழந்தைகள் அதற்கு அருகே கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு மைதானத்தில் விளையாடப் போய் விட்டார்கள். அங்கே நிறுத்தபட்டிருந்த ஒரு கார், இவர்களின் விளையாட்டுக் கருவியானது. கார்கள் – இந்தக் குழந்தைகளின் நிஜ வாழ்க்கையோடு நெருங்க முடியாது. அது அவர்களுக்கு கனவுலக குதூகலம். கடனைத் திருப்பித் தராதவரிடமிருந்து ஒரு வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து, நிறுத்தி வைத்திருந்த கார் அது. முள் வேலியைத் தாண்டிய நான்கு குழந்தைகள். காரைக் கண்ட...
‘லைக்கா’ நிறுவனம் தயாரிக் கும் ‘புலிப் பார்வை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மாண வர்கள் தாக்கப்பட்டதை திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிக்கிறது. சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம், தமிழ் நாட்டில் மிகப் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பாலச்சந்திரனை விடுதலைப் புலியாகவே சித்தரித்தும், அவருக்கு புலிகள் சீருடை அணிவித் தும் இப்படத்தில் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன், நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். சத்யம் தியேட்டரில் நடந்த விழாவின்போது ஈழத் தமிழர்களுக்காக போராடி வரும் மாணவர் அமைப்பினர், விழாவில் இந்தப் படம் குறித்து தங்களுக்கு சில சந்தேகம் இருப்பதாகக் குரல் எழுப்பினர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான படம் என்று சந்தேகப்படுவதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து விழாவுக்கு...
சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கி, சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது நச்சு வாயுவில் சிக்கி, தொழிலாளர்கள் மரணமடைவது சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இழிவும் ஆபத்தும் நிறைந்த வேலைக்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமாக ‘தலித்’ தொழிலாளர்கள் இந்த வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சென்i னமயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இதேபோல் சாக்கடைக்குள் இறங்கிய ஜனார்த் என்ற மாநகராட்சி ஊழியர் நச்சு வாயுக்கு 27.8.2013 அன்று பலியானார். மீண்டும் அதே பகுதியில் சாய்பாபா கோயிலருகே கடந்த ஆக°டு 16, 2014 அன்று தொழிலாளர்கள் சாக்கடை குழிக்குள் இறக்கப்பட்டனர். செய்தி அறிந்த மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், மாரிமுத்து, மனோகர் உள்ளிட்டடோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் இழி தொழிலை உடனே நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 124 ஆவது வட்ட மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்...
‘விநாயக சதுர்த்தி’ எனும் மதப் பண்டிகை வீடுகளில் நம்பிக்கையாளர்களால் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த நிலை மாறி, ‘விநாயகன் ஊர்வலம்’ அரசியலாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து ‘இந்து’ மதவெறி அரசியலை ஊதிவிடவும் பயன்படுத்தப்படும் ‘விநாயகன்’ சிலை ஊர்வலங்களுக்கு ‘மத உரிமை’ என்ற போர்வையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ‘சுற்றுச் சூழலை’ பாதிக்கும் விதமாக ‘இராசயனக் கலவையில்’ உருவாக்கப்பட்டு கடல் நீரில் கொண்டுபோய் போட்டு நீரை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் உருவாக்கப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாடு வாரியம், இரசாயன விநாயகன்களுக்கு தடை போட்டுள்ளது. அத்துடன் நகரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் வைக்கப்படுகின்றன. பெரியார் இயக்கங்களின் பகுத்தறிவு – அறிவியல் பரப்புரை களுக்கு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போடும் காவல்துறை ‘விநாயகன்’ அரசியலுக்கு சட்டங்களை மீறி உதவிடுவதுதான் வேடிக்கை. இதில் தமிழக அரசும் உடந்தையாகவே செயல்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் இராமசாமி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில்...
மயிலை கபாலீசுவரன் கோயிலில் பக்தர்கள் பயன் பாட்டுக்காக ஏற்படுத்தப் பட்ட கழிப்பறைகளை கோயில் ஊழியர்கள் மக்களுக்கு அனுமதிக்காமல், தங்கள் கட்டுப்பாட்டி லேயே வைத்துள்ளனர். – ‘தினத்தந்தி’ செய்தி கோயில் கர்ப்பக்கிரகம் – அர்ச்சகப் பார்ப்பனர் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கழிப்பறைகளாவது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல! வேதங்களில் கூறப்படும் ‘சரஸ்வதி’ நதி, பூமிக்கடியில் ஓடிக் கொண் டிருக்கிறதா என்பதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்டறியும். – அமைச்சர் உமாபாரதி நடிகர் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தார்! உமா பாரதி ஆற்றையே தேடு கிறார்! ‘இராமர்’ பாலத்தை இடிக்கா மல், சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்படும். – மத்திய அமைச்சர் கட்காரி இதேபோல, பாபர் மசூதியை இடிக்காம, இராமன் கோயிலைக் கட்டுவோம்னு சொன்னீங்களா? எனக்கே தெரியாமல் என் பெயரில் ‘மேனன்’ பட்டத்தை சேர்த்து விட் டார்கள். என் பெயர், இனி பார்வதிதான். –...
23.8.2014 சனிக்கிழமை மேட்டூர் சதுரங்காடியில் கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘நாத்திகர் விழா’ பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: • 1989 முதல் மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கத்தை நிறுவி நடத்தி வந்தவரும், மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான நரேந்திர தபோல்கர் முதலாமாண்டு நினைவு நாள் 20.08.2014 ஆகும். கடந்த ஆண்டு அவர் இறந்த சில நாள்களில் 24.08.2014 அன்று மராட்டிய மாநில ஆளுநர் – பேயோட்டுதல், மந்திரவாதிகளின் செயல்கள், தேள், பாம்பு கடிக்கு பாடம் போடுதல், குட்டிச்சாத்தான், குறளி வித்தை போன்றவற்றை தடைசெய்யும் மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தும் அதைத் தொடர்ந்து 14.12.2013 அன்று மராட்டிய சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் 18.12.2013 அன்று சட்டமாக்கப்பட்டது. தமிழகத்திலோ 1925 முதல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, 1973 டிசம்பர் இறுதி வரை சுற்றிச் சுழன்று, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வீச்சான போராட்டத்தை நடத்ஃதி வந்த பெரியார் மறைந்து 40...
இந்து ஆலயங்கள், திருமடங்களுக்கு தமிழக அரசும் காவல் துறையும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். – இராமகோபாலன் அப்படின்னா, மத பிரச்சினைகளில் ஆட்சி தலையிடக் கூடாதுன்னு சொல்வீங்களே… அந்தக் கொள்கையை கை விட்டாச்சா? பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். – மருத்துவர் இராமதாசு ஒரு சந்தேகம்…. ஜாதி மாறி திருமணம் செய்யும் பெண் களுக்கும் இது பொருந்துங் களா? சங்கர்ராமன் கொலை வழக்கு: விடுதலையான ஜெயேந்திரனை எதிர்த்து மேல் முறை யீடு இல்லை. – மத்திய அரசு வழக்கறிஞர் அரும்பாடுபட்டு சுவாமிகள் சங்கர்ராமனை ‘மேல் உலகம்’ அனுப்பியிருக்காரு; இதைப் பாராட்டாமல் மேல்முறையீடு செய்வது ‘அதர்மம்’! சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்களை முந்தைய பா.ஜ.க. ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி இரண்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. – உச்ச நீதிமன்றம் அப்பாடா… இனிவரும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் அமளிகள், மைக் உடைப்புகள், ஒத்தி வைப்புகள் எதுவுமே இருக்காது! விநாயகன் சிலைகளை நிறுவுதில் விதிகளை...
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து, உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. வினாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்து பதிவு செய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப்படுத்துவதற்கான இழையோட்டத்தை வழங்கியிருக்கிறது. எனவே இதுபோன்ற ஊர்வலங்களும் (நாத்திகப் பேரணி) சமூக செயல்பாடுகளுக்கான பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது” – என்று நீதிபதி வி.இராம சுப்பிரமணியன் அனுமதிக்கான ஆணையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமூக மாற்றத்துக்கு முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டத்தை கூர்மையடையச் செய்தல் அவசியம் என்ற கண்ணோட்டத்தோடு உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ‘வேதம்’ ஆரிய பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட காலத்திலிருந்தே வேத...
மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...
இந்தியா முழுதும் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று குஜராத் மாநிலத்திலிருந்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டவிரோதமாக போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் உச்சநீதி மன்றம் கேட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் 70,000 கோயில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்தக் கோயில்களை அகற்ற உச்சநீதிமன்றம் விதித்த ‘கெடு’ முடிந்த நிலையிலும் கோயில்கள் அகற்றப்பட வில்லை. இந்த நிலையில் மேலும் புதிய சட்ட விரோதமான கோயில்களைக் கட்டுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். அதையும் மீறி ஆங்காங்கே பொது இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத் தோடு கோயில்கள் எழுப்பப்பட்டு வரு கின்றன. இந்த முயற்சிகளை வாய்ப் புள்ள இடங்களில் எல்லாம் கழகத் தோழர்கள் தலையிட்டு தடுத்து வருகிறார்கள். சென்னை மந்தைவெளி பகுதியில், மந்தைவெளி தொடர்வண்டி நிலையம் பின்புறத்தில் விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டது. அதேபோல்...
• பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். • சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. • தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். அடுத்து ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, விநாயகன் ஊர்வலம் நடத்த அனுமதியே தந்துவிட்டது. இப்போது விநாயகன் ஊர்வலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன....
‘சமஸ்கிருத வாரத்தை’த் திணித்த பா.ஜ.க. ஆட்சி, இப்போது ஆசிரியர் நாளை ‘குரு-உத்சவ்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணையிட்டுள்ளது. இந்தியாவை “சமஸ்கிருத மயமாக்கும்” முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயரை இப்போது சமஸ்கிருதமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே நடந்த “திருப்பணிகள்”தான் இப்போது மீண்டும் தூசி தட்டி அமுல்படுத்துகிறார்கள். அப்போது ‘வித்யா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசு நிதி உதவியோடு நாடு முழுதும் ‘இந்துத்துவ’ கல்வித் திட்டத்தை செயல்படுத்தியது. ‘வித்யா பாரதி’யின் பொதுச் செயலாளராக இருந்த தீனானாத் பட்டா என்பவர், இந்துத்துவ கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒரு மாற்றுக் கல்வி முறையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ‘வித்யாபாரதி’ நாடு முழுதும் நர்சரி முதல் கல்லூரி வரை, 14000...
திரையுலகில் ஜாதி ஒழிப்புப் பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புவதையே இலட் சியமாகக் கொண்டவர் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘நாகரிகக் கோமாளி’ என்று தன்னை அவர் அடை யாளப் படுத்தினாலும் அதற்குள்ளே சமுதாய மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளே மணம் வீசிப் பரப்பின. அவரது திரைப்படத் திலிருந்து சில காட்சிகள். காமெடியன் என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கோமாளி என்று பொருள். கலைவாணரும் தன்னை ஒரு கோமாளி என்றே ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் வெறும் கோமாளி என்று தன்னைக் கூறி கொள்ளவில்லை., “சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தேனய்யா” என்று கூறிக் கொண்டார். இது அவர் ‘நல்ல தம்பி’ என்ற திரைப்படத்தில் கோமாளி வேடம் புனைந்து நடிக்கும்போது பாடுகின்ற பாடல். ஆம்! அவர் ஒரு சீர்திருத்தக் கோமாளிதான். பழைமைக் கொள்கைகள், கடவுள், மதம் பற்றிய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியன குறித்துப் பகுத்தறிவு இயக்கத்தினர் மேடையேறிப் பேசிய நேரத்தில் பக்த கோடிகள்...
‘புனித’ நகரமான காசியை ‘நவீன நகரமாக்க’ ஜப்பான் நாட்டுடன், மோடி ஒப்பந்தம். – செய்தி அப்படீங்களா… இப்பவாவது இந்தப் புரோகிதர்களையெல்லாம் ஒரு மேல் சட்டையை மாட்டச் சொல்லுங்க! நவீன நகரத்தில் சட்டை இல்லாம திரிஞ்சா, எப்படி? தமிழக அரசியல் களத்தில் எங்களுக்கு எதிரிகளே இல்லாமல் போய் விட்டார்கள். – முதல்வர் ஜெயலலிதா எப்போ, இப்படி சிந்திக்க ஆரம்பிச்சாங்களோ, இந்த சிந்தனையே இவங்களுக் கெல்லாம் மிகப் பெரிய எதிரியா வந்து நிக்கப் போவது உறுதி! வேற எதிரியே வேணாம்! “இராமஜென்ம பூமி”யான அயோத்தியில் கங்கா பவன் கோயில் தலைமை நிர்வாகியான சாமியார் ஒருவரை கோயில் பார்ப்பன அர்ச்சகர் பாண்டேயும் அவரது சீடர்களும் வெட்டிக் கொலை செய்தார்கள்.- செய்தி ‘இராமராஜ்ய’த்தில் ‘சம்பூகன் வதை’ தொடங்கிடுத்து. மு.க. ஸ்டாலின் முன் அனுமதி யின்றி, அவரது பெயரில் ‘விநாயகர் சதுர்த்தி’க்கு வாழ்த்துச் செய்தி வெளியிடப் பட்டுவிட்டது. – தி.மு.க. தலைமைக் கழகம் இந்த மறுப்புக்காவது ஸ்டாலின் முன்...
19 பேர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்ததைத் தொடர்ந்து, சட்ட ஆணையம் இந்தியாவில் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக பொது மக்கள் கருத்துகளைக் கேட்டுள்ள சட்ட ஆணையம், தூக்குத் தண்டனை குறித்து ஆவணம் ஒன்றையும் வெளியிட்டு, மக்கள் பதிலளிக்க வேண்டிய வினாக் களையும் தயாரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 132 தூக்குத் தண்டனைகளை விசாரணை நீதிமன்றங்கள் விதித்துள்ளன. இதே காலகட்டத்தில் உச்சநீதி மன்றத்தால் உறுதிப் படுத்தப்பட்ட தூக்குத் தண்டனை ஆண்டுக்கு 3 அல்லது 4 மட்டுமே! சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கில் போடப் பட்டவர்கள் எண்ணிக்கை 54 பேர். 2012இல் அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து “ici-dia@nic.in” என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. காஞ்சி ஜெயேந்திரனை...
ஆடம்பர விழாக்களில் மீத மாகும் உணவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டுவதைப் பார்த்தால் கோபம் வருகிறது. – ‘தினமணி’ கட்டுரை இதே கோபம் – சிலைகளுக்கு ‘பாலாபிஷேகம்’ யாகங்களில் உணவுப் பொருள்கள் எரிப்பு நடக்கும்போதும் ஏன் வர மறுக்கிறது என்பதை நினைத் தால் இரட்டிப்பு கோபம் வருகிறது. சமூகத்தில் சமத்துவமின்மை நீடிக்கும் வரை இடஒதுக்கீடு முறை தேவை. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத் அப்படி, சமத்துவம் உருவாகும் காலம் வரை மத ஒதுக்குதல் முறையும் தேவை என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க! சென்னையில் ஊர்வலத்தில் விநாயகர் சிலை முன்பு போதையில் நடனமாடிய போலீஸ்காரர் மீது நட வடிக்கை. – செய்தி ‘நேர்த்திக் கடனாக’ இருந்தா லும் இருக்கும். அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துடாதீங்க! பெங்களூரு மருத்துவமனை யில் உச்சநீதிமன்ற ஆணைப் படி நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை நடந்தது. – செய்தி வேறு வழி இல்லை சுவாமி! ‘காயமே (உடலே) இது பொய்யடா’ என்று சொன் னால்,...
விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அப்போது முதலமைச்சராக...
அணுமின் திட்டங்கள் பாதுகாப்பானவை என்கிறார்கள் அணுசக்தி விஞ்ஞானிகள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி 4 பிரிவுகளைக் கொண்டு வந்துவிட்டார்கள். முதல் இரண்டு பிரிவுகளை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற கட்சிகளே, 3 மற்றும் 4ஆவது பிரிவுகளை எதிர்க்கத் தொடங்கியிருக் கிறார்கள். இப்போது அணுக்கதிர் வீச்சால் புற்று நோய் பரவி வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திகள் வந்துள்ளன. 1995 ஆம் ஆண்டிலிருந்து 2014 மார்ச் வரை, 19 அணுசக்தி மய்யங்களில் பணியாற்றும் 3887 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 70 சதவீத மரணங் களுக்கு காரணம் புற்றுநோய். அதாவது 2600 பேர் புற்றுநோய்க்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை 258. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். புற்றுநோய் அல்லாமல், இருதயம் பாதிப்பு, ஒரே நேரத்தில் பல உறுப்புகள் பாதிப்பு, ஆஸ்த்மா, காசநோய்,...
சேது சமுத்திர திட்டத்துக்காக – ‘ராமன் பாலத்தை’ ஒரு போதும் இடிக்க மாட்டோம். – அமைச்சர் கட்காரி ஆனால், ‘ராமன்’ கோயிலுக்காக பாபர் மசூதியை இடிப்பீங்க… நல்லா, இருக்குப்பா, உங்க நியாயம்? மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க. சிவசேனை மோதல். – செய்தி ‘இந்து ஒற்றுமை’ பேசுற நீங்களே, இப்படி மோதிகிட்டா, எப்படிங்க? திருப்பதியில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் குறை தீர்க்கப்படும். – நிர்வாக அதிகாரி அப்ப, ஒரு ‘யோசனை’ ஊர்தோறும் ஏழுமலை யான் சலூன்களை திறந்துடுங்க; காத்திருக்க வேண்டியதில்ல… அய்தராபாத்தில் காந்தி வேடம் போட்ட பிச்சைக் காரர் சிகரெட் பிடித்ததால் கைது. – செய்தி அப்ப, காந்தி வேடம் போட்டு பிச்சை எடுக்குறது தப்பில்லை; புகைப் பிடிப்பதுதான் தப்புங்குறீங்க. ஆஸ்திரேலியா அருங்கட்சியகத்திலிருந்து மீட்கப் பட்டு, தமிழகம் கொண்டுவரப்பட்ட நடராசன் சிலை மதிப்பு ரூ.33 கோடி. – செய்தி திருட்டு போவதற்கு முன்பு கோயில்ல...
பார்ப்பன வேத மதம் – தீண்டப்படாத பார்ப்பனரல்லாத மக்களுக்கு காலம் காலமாக சம உரிமைகளை மறுத்தும் வர்ணம் – ஜாதியமைப்புகளைத் திணித்தும் அடிமைப்படுத்தியது. அப்படி மறுக்கப்பட்ட உரிமைகளுக்குப் போராடியவர் பெரியார். அரசியலில் – கல்வியில் – உத்தியோகங்களில் – இந்த மக்களுக்கு உரிய பங்கினை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். காங்கிர° கட்சி ஏற்க மறுத்தது. 1925இல் காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறினார். அதே 1925இல் தான் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பார்ப்பனர்கள் “இராஷ்டிரிய சுயம் சேவக் சங்” (ஆர்.எ°.எ°.) என்ற அமைப்பை நாக்பூரில் தொடங்கினார்கள். “இந்தியா இந்துக்களின் நாடு; இந்துக்களை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று கூறு போடக் கூடாது” என்ற கொள்கைகளை உருவாக்கி, ஜாதியமைப்பு வர்ணா°ரமப் பிரிவுகளை நியாயப்படுத்தினார்கள். தொடர்ந்து, ஆர்.எ°.எ°.சின் அரசியல் அமைப்பு களான ஜனசங்கமும், அதற்குப் பிறகு உருவான பாரதிய ஜனதாவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற...
காஞ்சிபுரம் புறநகரையொட்டிய செங்கொடியூர் (மேல் கதிர்பூர்) கிராமம், தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த ஊர். அங்குதான் காஞ்சி மக்கள் மன்றம் இயங்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும், போர்க் குணமிக்க பெண் தோழர்கள் இந்த மன்றத்தின் செயல்பாட் டாளர்கள், ஆண் தோழர்களும் உண்டு. அதிகார அடக்குமுறை களுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்கள் வழியாக மக்களின் கவனத்துக்கு வந்தது இந்த அமைப்பு. அரசு அமைப்புகளை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்காக இந்தப் பெண் போராளிகள் கொடுத்த விலை அதிகம். பொய்யாக புனையப் பட்ட கொலை முயற்சி வழக்குகளையும் சந்தித்து சிறை புகுந்தவர்கள். பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்களின் அடையாளமாக களத்தில் நிற்கிறது இந்த அமைப்பு. செங்கொடியூரில் மக்கள் ஆதரவுடன் இவர்கள் நிறுவியுள்ள மக்கள் மன்றம்தான் இந்தத் தோழர்களின் குடியிருப்பு. குடும்ப உறவுகளை விட்டு விலகி, தங்களுக்கான கொள்கைக் குடும்பத்தை ஜாதி, மதம், பால் வேறுபாடுகளைக் கடந்து இவர்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். உருவாக்கியது மட்டுமல்ல,...
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெற்றி பெற கோயில் களில் சிறப்பு பிரார்த்தனை நடத்த அற நிலையத் துறை சுற்றறிக்கை. – தினமலர் செய்தி ஓகோ; அப்ப, இந்த வழக்கை ஜெயலலிதா, சசிகலா வுக்காக தமிழக அரசாங்கமே நடத்துதுங்களா… சொல்லவே இல்லையே. மற்ற மதங்களைவிட கழிப்பறையைப் பயன் படுத்தாதவர்கள் எண்ணிக்கை (41 சதவீதம்) இந்து மதத்தில்தான் அதிகம். – பெங்களூர் ஆய்வு நிறுவனம் ஆகமப்படி கோயில்களுக்கு கழிப்பறை கிடையாது. வா°துப்படி வீடுகளுக்கு கழிப்பறை கிடையாது; ஆச்சாரப்படி வாழ வேண்டாங்களா? 2004இல் போபாலில், 20,000 பேர் சாவதற்குக் காரணமாக இருந்த விஷ வாயுக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாததைக் கண்டித்து மக்கள் போராட்டம். – செய்தி இப்ப, இதுக்குத்தான் அவசரமா? முதலில் கங்கையை சுத்தப்படுத்தி புண்ணியம் தேடு வோம்; அப்புறம் போபால் பிரச்சினை தானாக சரியாகி விடும்! மாநில அரசுகள் விதவைகளைக் காப்பாற்றும் பொறுப்பை தட்டிக் கழித்து பிருந்தாவன் நோக்கி...
ஸ்காட்லாந்து நாட்டில் நடத்திய வாக்கெடுப்பில் (செப். 18, 2014) அந்நாடு, பிரிட்டனுடன் இணைந்து நிற்பதற்கு ஆதரவாக 55 சதவீத மக்களும், தனி நாடாக வேண்டும் என்று 45 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு முறையை ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் பெரும்பான்மை மக்களின் முடிவே இறுதியானது. சில ஏடுகள் ‘பிரிவினை வாதம்’ தோற்றுப் போய்விட்டது என்று கொச்சைப்படுத்துகின்றன. உலகில் பல்வேறு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தும் போராட்டங்களுடன் முடிச்சுப் போட்டு, இனி எங்கும் பிரிவினையே கூடாது என்று தங்கள் நாட்டாமை தீர்ப்புகளை வழங்குகிறார்கள். உண்மையில், ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பு “தேசிய சுயநிர்ணய உரிமை” என்ற கொள்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி. தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ‘ஸ்காட்லாந்து’ மக்கள், முறையான வாக்கெடுப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முடிவு, பிரிந்து செல்வதாகவும் இருக்கலாம் அல்லது இணைந்திருப்பதாகவும் இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கே உண்டு! இதில் முக்கியமாக ஒரு கருத்தை சுட்ட வேண்டும். 650...
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு பதவி விலகிய பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தினார். பீகார் ஆட்சி, இந்தியாவிலேயே தொழில்-பொருளியல் வளர்ச்சியில் முதல் மாநிலமாக முன்னேறியிருப்பதை அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின. பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பர்மேஸ்வரிஸ்தான் மாவட்டத்திலுள்ள கோயிலுக்கு முதல்வர் வழிபடச் சென்றார். அவர் வழிபட்டுவிட்டு திரும்பியவுடன் ‘சாமி’ தீட்டாகிவிட்டது என்று கூறி, பார்ப்பன புரோகிதர்கள் கோயிலையும் கோயில் உள்ள சிலைகளையும் ‘சுத்தம்’ செய்து தீட்டுக் கழித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், “மக்கள் தான் என்னை அந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து நான் கிளம்பிய பிறகு, ‘சிலைகள்’ சுத்தம் செய்யப் பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் செயலைச் செய்தவர்களை நான் கண்டிக்க மாட் டேன். இது...
அரசியலில் தனக்கு எதிரிகளே இல்லாமல் காணாமல் போய் விட்டார்கள் என்று சில வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, ஊழல் தடுப்புச் சட்டம் தனக்கு எதிரியாக வந்து நிற்கப் போகிறது என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 18 ஆண்டுகாலம் பல்வேறு தடைகளைத் தாண்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார். ரூ.100 கோடி அபராதத் தொகை. அவருடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று பதவி இழக்கும் முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான். 4 ஆண்டுகால தண்டனைக் காலத்துடன் சேர்த்து அடுத்த 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட சட்டம் தடை...
கொஞ்ச காலமாகவே பெரியார் மீது பல்வகை திறனாய்வுக் கணைகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. தூற்றுதலாக இல்லாமல் திறனாய்வாக வந்தால் வரவேற்க வேண்டியது தான்; திறனாய்வு உள்நோக்கமின்றி வந்தால் வரவேற்க வேண்டியது தான்; உள்நோக்கத்தோடு வந்தாலும் ஆதாரத்தோடு இருந்தால் வரவேற்கவேண்டியது தான். என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக் கின்றனர்; பலபட எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றாக, “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது. அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார். 1. “1916ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சம°கிருதத்தையும், ஆரியப்...
‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்’ இதழில் வெளியான தோழர் வெ.மணியரசன் கட்டுரைக்கு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி. தமிழர் வாழ்க்கை நிகழ்வுகளில் புரோகிதர்களை நீக்கிட வேண்டும் என்ற இயக்கத்தை 1916 ஆம் ஆண்டிலேயே மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிவிட்டது என்றும், அதற்குப் பிறகு 1926இல் தான், பெரியார் அதைக் கையில் எடுத்தார் என்றும் தோழர் பெ.மணியரசன், ‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்தில்’ (2014, மே 15) எழுதியிருந்தது உண்மைக்கு மாறானது என்பதை கடந்த இதழில் விளக்கியிருந்தோம். ‘புரோகிதர் விலக்கு’ பெரியாருக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று நிலைநாட்ட பெ.மணியரசன் செய்த ‘ஆராய்ச்சி’யை மறுத்து கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைத்தோம். முதலாவதாக ‘புரோதர் விலக்கை’ 1916இல் தொடங்கிய மறைமலையடிகள் 1927இல் நடந்த அவர் மகளின் திருமணத்தை பார்ப்பன புரோகிதரை வைத்தே நடத்தினார். இரண்டாவதாக பார்ப்பனப் புரோகிதர்கள் என்பவர்களே ஆதித் தமிழர்கள்தான் என்பதே மறைமலை அடிகளின் கருத்து. ‘பார்ப்பன புரோகிதர்கள்’ ஆதித் தமிழர்கள் என்று...
சைவம் பேசிய தமிழறிஞர்கள், புரோகிதர்களை நீக்கக் கோரிய பெரியார் கொள்கைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள் என்று பெ.மணியரசன் எழுதியதற்கு மறுப்பாக, ‘சைவம்’ மதத்துக்கான கடவுளே பார்ப்பனி யத்தைத் தழுவியதாகவே இருப்பதை விளக்கி பெரியார் எழுதிய ‘குடிஅரசு’ தலையங்கத்தையும் அது தொடர்பான சில கருத்துகளையும் கடந்த இதழில் எழுதியிருந்தோம். மறைமலை அடிகள் போன்ற ‘தனித் தமிழ் இயக்கம்’ நடத்திய சைவர்களுக்கு எதிராக பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையேற்று அவர் வழி நின்ற சுயமரியாதை ‘சைவர்’கள் இருந்தார்கள். அவர்கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் புரோகித எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்புக் கருத்துக்களை ஏற்று பரப்பி வந்தனர். இது எப்போது நடந்தது? தோழர் பெ. மணியரசன் கூறுவதுபோல் பெரியாருக்கு முன்னால் அல்ல; பெரியாருக்குப் பின்னர்தான் என்பது வரலாறு. இது குறித்து சில செய்திகளையும் பார்ப்போம். 22.11.1925 அன்று காஞ்சிபுரம் காங்கிர° மாநாட்டில் காங்கிர° பார்ப்பனர்களின் கூடாரமாகி விட்டது; அதை ஒழிப்பதே இனி என் வேலை என்று...
3ஆம் பகுதி படிக்க புரோகித விலக்கு – இந்தி எதிர்ப்பு – தனிநாடு கோரிக்கைகளுக்கு பெரியாருக்கு முன்னோடியாக செயல்பட்டவர்கள் சைவத் தமிழறிஞர்கள் என்று எழுதிய தோழர் பெ.மணி யரசன் கட்டுரைக்கான மறுப்பு. ‘புரோகித நீக்கம்’ என்ற கொள்கைக்கு முன்னோடியாக செயல்பட்ட பெரியார் இயக்கம் – சுயமரியாதைத் திருமணங்களில் ‘புரோகித நீக்கம்’ என்பதையும் தாண்டி முன்னோக்கிச் சென்றதை 10.7.2014 இதழில் குறிப்பிட்டோம். 28.5.1929இல் அருப்புக்கோட்டை அருகே சுக்கில நத்தத்தில் ஒரே மேடையில் 3 புரோகித மறுப்பு திருமணங்கள் நடந்தன. அது குறித்து ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த செய்தி இது: சாதாரணமாய் அணிந்திருக்கும் நகையன்றி, திருமணத்துக்கென வேறு நகை எதுவுமின்றி, பட்டாடை விலக்கி, கதராடை அணிந்து (அதுவும் புத்தாடை அன்று…. பெரியாரும் அதுவரை கதரை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார்) ஒரு முழு சுயமரியாதைத் திருமணமாக அருப்புக்கோட்டை சுக்கிலநத்தத்தில் 28-5-1928 அன்று மூன்று திருமணங்கள் ஒரே மேடையில் நடந்தேறியது, அந்தத் திருமணத்தில் ஒரு வயதான மூதாட்டி...
4ஆம் பாகம் தொடர்ச்சி இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா? 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் என்பதை ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது. அது 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடை முறைக்கு வந்தது. அச்சட்டத்தின் அடிப்படையில் நடந்த தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு பெரும்பான்மைப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு சட்டத்தில் ஆளுநர்களுக்கு சட்டமன்ற தீர்மானங்களை நீக்கறவு (இரத்து) செய்தல், நெருக்கடி காலச் சட்டங்களைப் பயன்படுத்துதல் முதலிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. (இவ்வதிகாரங்கள் இப்போது குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளன) ‘மேற்கண்ட அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என்று ஆளுநர் உறுதிமொழி வழங்கினால் மட்டுமே பதவி ஏற்பேன் என்று இராஜ கோபாலாச்சாரி (இராஜாஜி)யும், அவரது அமைச்சர் களும் வீராப்பு பேசி வந்தார்கள். அத்தகைய உறுதி மொழி வழங்க ஆளுநர் உடன்பட வில்லை. ஓரிரு மாதங்கள் மட்டும்...
சென்ற 5ஆம் பாகம் படிக்க இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா? ஆனால், தான் கடந்த அய்ந்தாண்டுகளாக ஒவ்வொரு மாகாண காங்கிரசு மாநாடுகளிலும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த வகுப்புவாரி தீர்மானம் ஏற்கப்படாததையும், இறுதியாக காஞ்சி புரம் மாநாட்டிலும் விதிகளின்படி 30 உறுப்பினர் களுக்கு மாறாக எழுபது உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொடுத்தும் விவாதத்துக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் சூழ்ச்சியாக கைவிடப்பட்டதையும் கண்ட பெரியார், காங்கிர° மாநாட்டில் இருந்து வெளியேறுகிறார். வெளியேறிய பெரியார், தான் காங்கிரசில் இருந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்த காங்கிரசு-காந்தி கொள்கைகளை மீளாய்வு செய்யத் தொடங்குகிறார். முதலில் அவரால் திறனாய்வுக்கு உள்ளானக் கொள்கை காந்தியின் ‘இந்தி’ கொள்கை தான். 1925 நவம்பர் இறுதியில் வெளியேறிய பெரியார், 1926 மார்ச் மாதம் தனது ‘குடிஅரசு’ இதழில், “தமிழிற்குத் துரோகமும், ஹிந்தி பாஷையின் இரகசியமும்” என்ற தலைப்பிட்டு...
சென்ற இதழ் தொடர்ச்சி இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா? “நமது தமிழ்ப் பண்டிதர் கம்ப ராமாயணத்தில் கருப்பொருள் தேடவும், திருவிளையாடல் புராணத் துக்கு 77 ஆவது உரை எழுதவும், பெரிய புராணத் துக்கு 113 ஆவது உரை எழுதவும் தான் தகுதி யுடையவர்களாகவும் கவலை உடையவர் களாகவும்” உள்ளதைக் கண்டிக்கிறார். “இந்த நாட்டில் உண்மைத் தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது” என்கிறார், பெரியார் தோழர் மணியரசன் பெருமிதத்தோடு குறிப் பிடுவதைப்போல, தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்புக்கு வழிகாட்டியிருந்தால் இந்தக் கோபம் பெரியாருக்கு எப்படி வந்திருக்க முடியும்? “ஆகையால், ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் பொதுக் கூட்டம் போட்டு, இந்த சூழ்ச்சியைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு மேன்மை தங்கிய கவர்னருக்கும், தமிழ் வேளாள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும், ஆரிய மந்திரி...
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19.04.2014 அன்று நடந்த உலகத் தமிழ்க் கழகத்தின் அய்ந்தாம் பொது மாநாட்டில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில், சுயமரியாதைத் திருமணம், இந்தி எதிர்ப்புப் போர் பற்றிக் கூறியிருந்த செய்திகள் குறித்த நமது மறுப்பை “புரட்சிப் பெரியார் முழக்க”த்தின் முந்தைய (கடைசியாக 21.8.2014) இதழ்களில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக தோழர் மணியரசன் அவ்வுரையில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் முதன்முதலில் எழுப்பியது பற்றி பேசியுள்ளதைக் குறித்தும் சில விளக்கங்களைத் தர விரும்பு கிறோம். “முதலில் தோழர் மணியரசன் கூறுவதைப் பார்ப்போம். “1938-ல் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் ’தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. அந்நிகழ்வு பற்றி தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நாவலர். இரா.நெடுஞ்செழியன் எழுதிய ‘தி.மு.க’ என்ற தலைப்பில் உள்ள நூலில் கூறுவதைப் பாருங்கள். இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி...
சென்ற இதழ் தொடர்ச்சி பெரியார் கொள்கைகளுக்கு நேர் முரணாக செயல்பட்டதே தி.மு.க. என்பதற்கு மேலும் வரலாற்றுச் சான்றுகளை அடுக்கிக் காட்டுகிறார் கட்டுரையாளர். “1959-ல் கும்பகோணத்தில் நடந்த நிதியளிப்புக் கூட்டத்தில், “ஒரு கடவுள் உண்டு என்றும், அதனைக் கும்பிடுங்கள்” என்றும் பெரியார் கூறியதாக ஒரு தி.மு.க. ஏடு எழுதியது. அதற்குக் ‘கண்ணீர்த் துளி’ (தி.மு.க.) பத்திரிக்கை ஒன்று, “அண்ணா பாதையில் பெரியார் வந்து விட்டார்” என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது. “கண்ணீர்த் துளிகள் அதுவரை ஒரு கடவுள் என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்று தான் தவறை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன் களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத் தான் ஆகிவிடுகிறான். நானும் மானங் கெடத் தான் இவர்களைப் பற்றிப் பேசுகிறேன். ஒருவனுக்காவதுமான ஈனத்தைப் பற்றிக் கவலையே இல்லையே!” (‘விடுதலை’ 24.11.1959) என்று பெரியார் கடுமையாகச் சாடினார்....
சென்ற வார தொடர்ச்சி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தீர்மானத்தை முன் மொழிந்ததே மறைமலைஅடிகள் என்றும், பெரியார் பின் தொடர்ந்தார் என்றும் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ‘தி.மு.க.’ என்ற நூலிலிருந்து தோழர் பெ.மணியரசன் ஆதாரம் காட்டுகிறார். இது, திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் இடையே ‘முரண்பாடுகள்’ நிறைந்த காலகட்டத்தில் எழுதப் பட்ட நூல். இது குறித்து மேலும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம்: 1956-லிருந்து 1960 வரை நாவலர் இரா.நெடுஞ் செழியன் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தார். 1961இன் தொடக்கம் தி.மு.க.வில் ஈ.வெ.கி. சம்பத், கலைஞர் கருணாநிதி ஆகியோரிடையே தொடங்கிய உரசல் உச்சத்தை அடைந்த கால கட்டம். பொதுச் செயலாளராக வர எண்ணியிருந்த கலைஞர் வரக் கூடாது என்பதற்காகப் பதவியில் இருப்பவர்கள் (அப்போது கலைஞர் சட்டமன்ற உறுப்பினர்) பொதுச் செயலாளராகக் கூடாது என்ற தீர்மானத்தைத் தீர்மானக் குழு தலைவராக இருந்த ஈ.வெ.கி.சம்பத் கொண்டு வந்தார் (அப்போது ஈ.வெ.கி.சம்பத் நாடாளுமன்ற உறுப்பினர்). எனவே சம்பத் மதியழகனை...
வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த தலைவர்களை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதியதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். மேலும், 8.9.1929 குடிஅரசு தலையங்கத்தில் வல்லபாய் பட்டேலின் உரைகளைக் குறித்து எழுதுகிறார். தமிழ்நாடு வந்த பட்டேல், “இங்கு பிராமண வகுப்புக்கே விரோதமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரமானது பிராமணர்களைத் தாக்குவதாக மாத்திரமல்லாமல் நம்முடைய ஆரிய நாகரிகத்தில் சிறந்தவற்றை எல்லாம் தாக்குவதாகத் தெரிகிறது. ஒரு பிராமணரை (திரு.இராஜ கோபாலாச்சாரியாரை) ‘சைத்தான் சொரூபம்’ என்று ஒரு சாரார் துவேஷிக்கின்றனர். இது தேசிய தற்கொலையேயாகும். வகுப்பு துவேஷத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் சிறந்த தேசிய வேலை வேறு கிடையாது” என்றெல்லாம் பேசிய பட்டேலைப் பார்த்து பெரியார் எழுப்பும் கேள்வி இது தான். “திராவிட தேசத்துக்கு வந்த இவருக்கு ஆரிய தர்மத்தைப் பற்றிய பிரச்சாரத்தில் கவலை எதற்காக வேண்டும்?” என்று கேட்டுவிட்டு, இந்த நாட்டில் ஏற்பட்டிருக்க வேண்டிய சீர்திருத்தங்களுக்கு எல்லாம் இது வரையில் முட்டுக்கட்டையாக...
தமிழறிஞர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தை பெரியார் தனதாக்கிக் கொண்டார் என்ற அடிப்படை யில்லாத வாதங்களை ஏராளமான வரலாற்றுத் தகவல்களுடன் மறுத்து தொடராக வெளிவந்த கட்டுரையின் நிறைவுப் பகுதி இது. 11ஆம் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும் தொடர்ச்சியாக தமிழ்நாடு தனிநாடு, வடநாடு வெளிநாடு என்ற சிந்தனையையும், இந்தியா ஒரே நாடல்ல; பலநாடுகளின் கூட்டமைப்பே என்ற கருத்தையும், வடநாட்டார் பிடியில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து தனிநாடாக அமைத்துக் கொண்டால் ஒழிய, பார்ப்பன, பனியா முதலாளிகள் சுரண்டலிலிருந்து நாம் மீளவே முடியாது என்ற கருத்தையும் 1937இலேயே பெரியார் கொண்டிருந்தார் என்பதை எவர் ஒருவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், பெரியாருக்குத் தமிழ் மக்களிடையே உள்ள புகழ், பெருமை ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், அல்லது தாம் விரும்பும் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவற்றை ஏற்க வைக்க முடியாதவர்கள், பெரியார் பெற்றிருந்த நம்பிக்கையை மக்களிடம் பெற முடியாதவர்கள், “ஆடத் தெரியாதவள் கூடம் கோணல்” என்று...
திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். குழப்பம் தலைமை கழக அறிவின்படி 29.9.2014 திங்கள் மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் திருச்சி மரக்கடை அருகில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவரங்கம் நகரத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.முத்து தலைமையில், மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி, மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார், வழக்கறிஞர் சந்துரு மற்றும் ஆதித் தமிழர் பேரணி மாநில மகளிரணி பொதுச் செயலாளர் செங்கை குயிலி ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் குணா, திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், திராவிட மணி, மாணவர் பாரத், மாநகர அமைப்பாளர் தமிழ்முத்து, ஆதித் தமிழர் பேரவை மலர் மன்னன், அருந்ததி மைந்தன், கமலா அம்மாசி மேலும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு: மண்டல அமைப்புச் செயலாளர் த. புதியவன். ஆர்ப்பாட்ட முடிவில் 4 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘பாரத் மாதா...
பீகார் தலித் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, மதுபானி மாவட்டத்திலுள்ள கோயிலுக்கு கடந்த மாதம் சென்றபோது கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று பார்ப்பன அர்ச்சகர்கள் ‘தீட்டு கழித்த’ செய்தியை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கடந்த வாரம் வெளியிட்டது. இது குறித்து அரசு விசாரணைக்கு மாநில அரசு செப்டம்பர் 29ஆம் தேதி உத்தரவிட் டுள்ளது. “பீகாரில் தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது ஆக°டு 18 ஆம் தேதி ஊர் மக்கள் அழைத்ததினால் பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றேன். நான் சென்று வந்த பிறகு கோயிலுக்குள் ‘தீட்டுக் கழிப்பு’ சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்ட செய்தியை மாநில கனிம வளத்துறை அமைச்சர் இலக்கன் ராம் ராமன் என்னிடம், ஒருமுறை அல்ல, இரண்டு முறை கூறினார். தேர்தல் நேரத்தில் இப்பிரச்சினையை அரசியலாக்கிடக் கூடாது என்ற நோக்கத்தில், இதை வெளிப்படுத்தாமல் தவிர்த்தேன். ஆனால், அதே அமைச்சர், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இப்போது மறுப்பதற்கான காரணம் எனக்கு தெரிய வில்லை....
ஆர்.எஸ்.எஸ். தசரா கொண்டாட்டத்தையும் அதன் தலைவர் மோகன் பகவத் பேச்சையும் நேரடியாக ஒளிரப்பியது அரசு தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’. இதற்குப் பதிலளித்த தொலைக்காட்சி இயக்குநர், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் உரையைக் கேட்பவர் எண்ணிக்கை அதிகம் என்பதால், தொலைக்காட்சியின் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தவே ஒளிபரப்பினோம்” என்று கூறியுள்ளார். உண்மையில் ‘தூர்தர்ஷன்’ பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முயற்சிக்கிறதா? அதன் யோக்கியதை என்ன? ஒரு தமிழ் நாளேட்டில் வந்துள்ள தலையங்கம் இது: “நியூயார்க்கில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்தியை ஒளிபரப்பியது தூர்தர்ஷன். மோடியின் கோப்புப் படங்களை ஒளிபரப்புவதற்குப் பதில், முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புப் படங்களோடு! தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையின் இந்த அபத்தம் ஒரு முறை இரு முறை அல்ல; பல முறை தொடர்ந்தது. பார்வையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு, தொலைக்காட்சி நிலையத்துக்கே தொடர்பு கொண்டு பேசிய பின் மாற்றியிருக்கறார்கள். அமெரிக்க ஊடகங்களுக்கு இப்போது இதுவும் ஒரு செய்தி. அப்படியானால், செய்திகள் ஒளிபரப்பாகும்போது செய்திக் குழுவினர்,...
இந்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தசரா விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் உரையை நேரடியாக ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பியது. அக்டோபர் 3ஆம் தேதி இந்த செய்தி வந்தவுடன் அடுத்த நாள் அக்.4 ஆம் தேதியே சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், சென்னை தூர்தர்ஷன் முன் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. தூர்தர்ஷன் வாயிலிலேயே இந்தப் போராட்டம் நடந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். தூர்தர்ஷன் வரலாற்றிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது இதுவே முதன்முறையாகும். ‘தூர்தர்ஷன்’ – ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதற்கான தலைமை இயக்குனர் மத்திய அமைச்சரவை யால் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒளிபரப்பை பிரதமர் மோடியும் தொலைக்காட்சி இயக்குனரும் நியாயப்படுத்தியுள்ளனர். “சமூகத்துக்கு நல்ல செய்திகளை தந்ததால் ஒளிபரப்பப்பட்டது” என்று மோடி கூறுகிறார். நேரடி ஒளிபரப்புக்கு சென்ற தூர்தர்ஷன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எந்தக் கருத்துகளைப் பேசப் போகிறார், அது சமூகத்துக்கு...
காவிரியை எடுத்துக் கொள்; எங்கள் அம்மாவை கொடுத்து விடு. – அ.தி.மு.க. சுவரொட்டி அம்மா விடுதலைக்கும் லஞ்சம் தான் தருவாங்க போல; அப்படி ஒரு கொள்கை உறுதி! காந்தி ஜெயந்தியில் பிரதமர், அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் துடைப்பம் எடுத்து பொதுவிடங்களில் குப்பைகளை கூட்டினார்கள். – செய்தி இனி, அடுத்த ‘காந்தி ஜெயந்தி’ வரும்வரை ‘தீண்டப்படாத’ துப்புரவுத் தொழிலாளர்கள் தான் துடைப்பத்தை ‘தீண்டி’க் கொண் டிருக்க வேண்டும். தில்லை நடராசன் கோயில் உண்டியல் வசூல் உரிமையை உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று அரசு மீண்டும் தீட்சதர்களிடமே ஒப்படைத்தது. – செய்தி அப்படியே தில்லை நடராசன் கோயிலையும் தீட்சதர்களுக்கே எழுதிக் கொடுத்துடுங்க; ‘பகவா னுக்கு’ நன்னா தொண்டு செய்வா… ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. – தூர்தர்ஷன் மதக் கலவரம் செய்யும் போதும் சொல்லி அனுப்புங்க; கேமிராவை தூக்கிக்கிட்டு ஓடி வந்துடறோம்! கடவுளுக்கே தண்டனையா? திரைப்பட நடிகர்கள் போராட் டத்தில் ‘பேனர்’....
ஜனார்த்தன் பூஜாரி என்ற பெயர் நினைவிருக் கிறதா? ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சர்; வங்கியில் ‘கேட்பாரற்று’ முடங்கிக் கிடக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியதன் வழியாக பிரபலமானவர்; ‘பில்லவா’ என்ற தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சார்ந்தவர்; அவர் மகத்தான புரட்சி ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். கருநாடக மாநிலம் மங்களூரில் குத்ரோலியில் உள்ள கோகர் நந்தீசுவரன் கோயிலின் அர்ச்சகர்களாக இரண்டு பெண்களை அவர் நியமித்துள்ளார். அந்த இரண்டு பெண்களும் ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, கணவர்களை இழந்தவர்கள். இந்தப் பெண்களை கண்களால் பார்ப்பதே தீங்கானது என்று இந்து மத ஆச்சாரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இப்போது லட்சுமி (65), சந்திரவதி (45) என்ற அந்த இரண்டு பெண்களும் அர்ச்சகர்கள் என்று அறிவித்துள்ளார், கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜனார்த்தன் பூஜாரி. செப்டம்பர் 24, 2014 அன்று, இந்தப் புரட்சி நடந்துள்ளது. இரண்டு பெண்களையும் அன்று கோயிலுக்குள்ளும் கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ளும் அழைத்துச் சென்றார் ஜனார்த்தன் பூஜாரி....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16 செப்டம்பர் 1996ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். 2 ஆண்டுகள் கழித்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் புதிதாக முழு உருவ பெரியார் சிலை அமைக்கப்பட்டு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ திறந்து வைத்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் இந்துத்துவா சக்திகளின் தொடர் சதி செயல்களால் பல்வேறு மத கலவரங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. வருடா வருடம் இந்து முன்னணி பா.ஜ.க. சார்பில் வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். தந்தை பெரியார் சிலையை எப்படியேனும் அகற்ற பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வந்தனர்....
இந்துத்துவம் – புனைவுகளை வரலாறுகளாக கட்டமைக் கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை நிலைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். வர்ணக் கலப்பில் பிறந்தவர்கள் மீண்டும் வர்ணத்தின் கீழ்கொண்டுவரப்பட முடியாததால், ஜாதிகளாக பிரிக்கப்பட்டனர். ஜாதிப் பிரிவுகள் ஜாதியமைப்பாகி அதுவே தீண்டாமைக்கும் வழி வகுத்தது. இந்த வரலாற்று உண்மைகளை புறந்தள்ளிவிட்டு, ‘தீண்டாமை’ உருவாக்கியதே இஸ்லாமியர்கள் என்ற புதிய கதைகளை கட்டமைக்கிறார்கள். உ.பி.யில் பா.ஜ.கவைச் சார்ந்த விஜய் சாங்கர் சாஸ்திரி என்ற முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் (இவர் ஒரு தலித்), பட்டியல் இனப் பிரிவினரின் “வரலாறுகளை” மூன்று தொகுதிகளாக எழுதியுள்ளார். வால்மீகி, காதிக்ஸ் மற்றும் சாம்கர் ஆகிய தலித் மக்களின் வரலாறாக முன் வைக்கப்பட்ட மூன்று தொகுதிகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வில்தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது என்ற கருத்தை முதன்முதலாக வெளியிட்டார். முஸ்லிம் மன்னர்கள ஆட்சியில் கட்டாய மத மாற்றத்தை ஏற்க மறுத்தவர்களே...
திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 136வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முனைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம், அவருடைய கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். பெரியாரின் கொள்கைகள் நூற்றாண்டுகளை கடந்தும் இன்றைக்கும் மக்களுக்கு தேவையான கொள்கைகளாக இருக்கின்றன. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நல்ல பயனை அடைந்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை வேகவேகமாக தனியார் மயமாக்கிவருகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் துறையிலும், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென இன்றைக்கு போராடுவதற்கும் பெரியாரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மறைந்த நரேந்திர தபோல்கருக்கு பெருமை...
இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ அனுப்பியது நாட்டுக்கு பெருமைதான் என்றாலும் இந்த நாட்டு மக்கள் அறிவியல் மனப்பான்மையில்லாத மூடநம்பிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள். இப்படி கூறுவது பெரியார் இயக்கமல்ல; ‘டைம்° ஆப் இந்தியா நாளேடு’ – இப்படி ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. 2014 அக்டோபர் 4 ஆம் தேதி அந்த ஏட்டில் சேட்டன் பகத் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் முன் வைத்துள்ள கருத்துகள்: நாம் நமது குழந்தைகள், விஞ்ஞானப் பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெற வேணடும் என்று விரும்புகிறோம். ஆனால், வாழ்க்கையில் இதற்கு நேர்மாறாக மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறோம். மற்ற நாடுகளைவிட நமது நாட்டில்தான் மூடநம்பிக்கைகள் அதிகம். விஞ்ஞான தேர்வை எழுதச் செல்வதற்கு முன்பு தயிரில் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டால் தேர்வு எளிமையாக இருக்கும் என்று ஒரு மூடநம்பிக்கை. ஏதோ, மேலே ‘கடவுள்’ ஒரு தணிக்கை அலுவலகத்தை வைத்துக் கொண்டு எந்தக் குழந்தை எதைச் சாப்பிட்டு விட்டு தேர்வு...
“இலங்கை : யானையை மறைக்கும் முயற்சி” என்ற ஆங்கில நூலை சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், “இறுதித் தீர்வு”க்காக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர், நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற மூன்று தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், தேசிய இனங்களுக்கான உரிமைகள், ‘இறையாண்மை’க் குரிய அரசுக்கு வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ற பார்வையில் அற்புதமாக விளக்குகிறார். இவற்றோடு, இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப் பட்டோர், நேரில் கண்டவர் சாட்சியங்கள், கொலைக் களமாக மாற்றப்பட்ட ‘போரில்லாத பகுதி’; அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை; கடமை தவறிய அய்.நா. அமைப்புகளை அம்பலப்படுத்தும் அய்.நா. உள்ளக அறிக்கை; (அந்த அறிக்கையில் பல பகுதிகள் – கறுப்பு மையிட்டு அழிக்கப்பட்டுள்ளன)...
விடுதலைப் புலிகள் மீதான தடையை அய்ரோப்பிய ஒன்றியங்களுக்கான நீதிமன்றம் தடைக்கு கூறப் பட்ட காரணங்கள் நியாய மற்றவை என்று கூறி தடையை நீக்கியுள்ளது. இலக்சம்பர்க்கில் உள்ள இந்த நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக் கறிஞர் விக்டர் கோப் வாதாடினார். தீர்ப்புக்குப் பிறகு அளித்துள்ள பேட்டியில் தமிழ் ஈழப் பிரச்சினையை அரசியல் ரீதியாக நகர்த்து வதற்கு இந்த தீர்ப்பு பயன்படும்; சட்டரீதியான இந்த வெற்றியை அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி யுள்ளார். இந்தியாவிலும் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது. இந்தப் பின்னணியில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டது இனப்படுகொலை என்பதற்கான சான்றுகளைத் தொகுத்து பேராசிரியர் இராமு. மணிவண்ணன் உருவாக்கியுள்ள ஆவணத்தின் உள்ளடங்கங்கள் சுருக்கத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்துள்ளது. பெரியார் முழக்கம் 23102014 இதழ்