விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: அடுத்து என்ன?
விடுதலைப் புலிகள் மீதான தடையை அய்ரோப்பிய ஒன்றியங்களுக்கான நீதிமன்றம் தடைக்கு கூறப் பட்ட காரணங்கள் நியாய மற்றவை என்று கூறி தடையை நீக்கியுள்ளது. இலக்சம்பர்க்கில் உள்ள இந்த நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக் கறிஞர் விக்டர் கோப் வாதாடினார். தீர்ப்புக்குப் பிறகு அளித்துள்ள பேட்டியில் தமிழ் ஈழப் பிரச்சினையை அரசியல் ரீதியாக நகர்த்து வதற்கு இந்த தீர்ப்பு பயன்படும்; சட்டரீதியான இந்த வெற்றியை அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி யுள்ளார்.
இந்தியாவிலும் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது.
இந்தப் பின்னணியில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டது இனப்படுகொலை என்பதற்கான சான்றுகளைத் தொகுத்து பேராசிரியர் இராமு. மணிவண்ணன் உருவாக்கியுள்ள ஆவணத்தின் உள்ளடங்கங்கள் சுருக்கத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்துள்ளது.
பெரியார் முழக்கம் 23102014 இதழ்