அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை நிறுத்தக் கோரி கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். குழப்பம்
தலைமை கழக அறிவின்படி 29.9.2014 திங்கள் மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் திருச்சி மரக்கடை அருகில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவரங்கம் நகரத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.முத்து தலைமையில், மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி, மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார், வழக்கறிஞர் சந்துரு மற்றும் ஆதித் தமிழர் பேரணி மாநில மகளிரணி பொதுச் செயலாளர் செங்கை குயிலி ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் குணா, திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், திராவிட மணி, மாணவர் பாரத், மாநகர அமைப்பாளர் தமிழ்முத்து, ஆதித் தமிழர் பேரவை மலர் மன்னன், அருந்ததி மைந்தன், கமலா அம்மாசி மேலும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு: மண்டல அமைப்புச் செயலாளர் த. புதியவன்.
ஆர்ப்பாட்ட முடிவில் 4 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என முழக்கமிட்டனர். காவல் துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர். “மதவெறி அழியட்டும்-மனித நேயம் மலரட்டும்” என்ற முழக்கத்தோடு தோழர்கள் அவர்களை எதிர்கொண்டனர்.
நாகர்கோவில்
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் எவ்வித மத விழாக்களும் கொண்டாடக் கூடாது என்ற அரசானையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்குரைஞர் வே.சதா தலைமை யிலும் மாவட்ட செயலாளர் சூசையப்பா முன்னிலை யிலும், மாவட்ட தலைவர் தமிழரசன், சு.க.சங்கர் (மாநில கொள்கைப் பரப்பு செயலாளர்-ஆதித் தமிழர் பேரவை), போ° (மாவட்ட தலைவர் ஆதித்தமிழர் பேரவை), குமரேசன் (மாவட்ட செயலாளர் ஆதித் தமிழர் பேரவை), அம்பேத் ரமேஷ் (ஆதி பேரவை), நீதியரசர் (மாவட்ட தலைவர் நேஷ்னல் பேந்தர்° பார்ட்டி), வழக்கறிஞர் ஜவஹர் (மாவட்ட தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி), வழக்கறிஞர் ஜெரால்டு, வழக்கறிஞர் சக்திவேல், வழக்கறிஞர் சிவராச பூபதி (மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்), பந்தல் முருகன், பெரியார் பிஞ்சுகள் கீர்த்தனா, பிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
திராவிடர் விடுதலைக் கழக தோழர்களின் முயற்சியால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் ஆயுத பூசை தடுக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலகங்களில் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்பதை வலியுறுத்தி அதற்கான அரசாணை இணைத்து, கடிதம் தொலை நகலில் அனுப்பட்டது. அதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங் கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மல்ல சமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் முந்தைய காலங் களில் படுவிமரிசையாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை இந்த ஆண்டு கொண்டாடப்பட வில்லை. மாவட்ட செயலாளர் வைரவேல், மாவட்ட தலைவர் சாமிநாதன் மற்றும் அந்தந்த பகுதி தோழர்கள் பணியாற்றினார்கள்.
சேலத்தில்
அரசு அலுவலகங்களில் மதவழிபாடுகள், ஆயுத பூஜை கொண்டாட்டங்களைத் தடுக்கக் கோரி கழகம் சார்பாக சேலம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் 29.9.2014 அன்று காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது.
அரசு அலுவலகமா? கோயில் கூடாரமா?
பூஜை எதற்கு? பூஜை எதற்கு?
காவல் நிலையத்தில் பூஜை எதற்கு?
குற்றத்தை குறைக்கவா? குற்றத்தை பெருக்கவா?
என்ற ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர தலைவர் மூனாங்கரடு சரவணன், மாநகர செயலாளர் பரமே°குமார், மேற்கு மாவட்ட தலைவர் சூரிய குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ, மேற்கு மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, டைகர் பாலன், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமரப்பா, இளைஞரணி செயலாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மேட்டூர் நகர செயலாளர் சம்பத்குமார், நகர தலைவர் பா°கர், நகர பொருளாளர் கதிரேசன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், மேலும் மேட்டூர், கொளத்தூர், இளம்பிள்ளை, சேலம், ஆத்தூரிலிருந்து சுமார்
60 தோழர்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டத்துக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது.

பெரியார் முழக்கம் 09102014 இதழ்

You may also like...

Leave a Reply