வினாக்கள்… விடைகள்…!

சேது சமுத்திர திட்டத்துக்காக – ‘ராமன் பாலத்தை’ ஒரு போதும் இடிக்க மாட்டோம்.
– அமைச்சர் கட்காரி
ஆனால், ‘ராமன்’ கோயிலுக்காக பாபர் மசூதியை இடிப்பீங்க… நல்லா, இருக்குப்பா, உங்க நியாயம்?

மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க. சிவசேனை மோதல். – செய்தி
‘இந்து ஒற்றுமை’ பேசுற நீங்களே, இப்படி மோதிகிட்டா, எப்படிங்க?

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் குறை தீர்க்கப்படும். – நிர்வாக அதிகாரி
அப்ப, ஒரு ‘யோசனை’ ஊர்தோறும் ஏழுமலை யான் சலூன்களை திறந்துடுங்க; காத்திருக்க வேண்டியதில்ல…

அய்தராபாத்தில் காந்தி வேடம் போட்ட பிச்சைக் காரர் சிகரெட் பிடித்ததால் கைது. – செய்தி
அப்ப, காந்தி வேடம் போட்டு பிச்சை எடுக்குறது தப்பில்லை; புகைப் பிடிப்பதுதான் தப்புங்குறீங்க.

ஆஸ்திரேலியா அருங்கட்சியகத்திலிருந்து மீட்கப் பட்டு, தமிழகம் கொண்டுவரப்பட்ட நடராசன் சிலை மதிப்பு ரூ.33 கோடி. – செய்தி
திருட்டு போவதற்கு முன்பு கோயில்ல கடவுளாக இருந்தப்ப நடராஜனுக்கு எவ்வளவு மதிப்பு போட்டீங்கய்யா…

காஞ்சி ஜெயேந்திரன் தனது 80 ஆவது பிறந்த நாளில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார். – செய்தி
அடுத்த பிறந்த நாளில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த சாட்சிகளுக்கும் – ஏதாவது விருது ஏற்பாடு செஞ்சு ‘ஆசீர்வாதம்’ வழங்குங்க சாமி…!

பெரியார் முழக்கம் 18092014 இதழ்

You may also like...

Leave a Reply