வினாக்கள்… விடைகள்…!
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெற்றி பெற கோயில் களில் சிறப்பு பிரார்த்தனை நடத்த அற நிலையத் துறை சுற்றறிக்கை. – தினமலர் செய்தி
ஓகோ; அப்ப, இந்த வழக்கை ஜெயலலிதா, சசிகலா வுக்காக தமிழக அரசாங்கமே நடத்துதுங்களா… சொல்லவே இல்லையே.
மற்ற மதங்களைவிட கழிப்பறையைப் பயன் படுத்தாதவர்கள் எண்ணிக்கை (41 சதவீதம்) இந்து மதத்தில்தான் அதிகம். – பெங்களூர் ஆய்வு நிறுவனம்
ஆகமப்படி கோயில்களுக்கு கழிப்பறை கிடையாது. வா°துப்படி வீடுகளுக்கு கழிப்பறை கிடையாது; ஆச்சாரப்படி வாழ வேண்டாங்களா?
2004இல் போபாலில், 20,000 பேர் சாவதற்குக் காரணமாக இருந்த விஷ வாயுக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாததைக் கண்டித்து மக்கள் போராட்டம். – செய்தி
இப்ப, இதுக்குத்தான் அவசரமா? முதலில் கங்கையை சுத்தப்படுத்தி புண்ணியம் தேடு வோம்; அப்புறம் போபால் பிரச்சினை தானாக சரியாகி விடும்!
மாநில அரசுகள் விதவைகளைக் காப்பாற்றும் பொறுப்பை தட்டிக் கழித்து பிருந்தாவன் நோக்கி குவிய அனுமதிக்கக் கூடாது. – தொகுதி உறுப்பினர் ஹேமமாலினி
இதைத் தொகுதிப் பிரச்சினையாகத்தான் பார்ப்பீங் களா? சமூகப் பிரச்சினையாக எப்பத்தான் பார்க்கப் போறீங்க?
குரு பூஜை நடக்கும் இடங்களுக்கு அரசியல் தலைவர்கள் செல்வதை தவிர்த்தால் அதுவே மக்களுக்கு செய்யும் சேவை. – மதுரை உயர்நீதிமன்றம்
தலைவர்களே! இந்த ஒரு சேவையையாவது செய்வதற்கு முயற்சியுங்களேன்!
அனைவருக்கும் தெரிந்த பிரபலமானவரை தமிழக காங்கிரசுக்கு தலைவராக்க வேண்டும். – ப. சிதம்பரம்
சரி; ஆக்கிடலாம். பிரபலத்தை எந்தக் கட்சியி லிருந்து, எந்த நாட்டிலிருந்து தேடிப் பிடிக்க வேண்டும் என்பதையும் சொல்லுங்க.
சுப்பிரமணியசாமி, மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இராஜபக்சேயிடம் பேசியதை வெளியே சொல்லியிருக்க வேண்டாம். – ‘துக்ளக்’கில் சோ
இப்படி சோ, வெளியே சொல்லியிருப்பதைவிட, சு.சாமி வெளியே சொன்னது, எவ்வளவோ மேலானது!
காந்தி பிறந்த நாளில், ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி. – கல்வித் துறை உத்தரவு
இந்த தலைப்பில் ஒருவர் கட்டுரை எழுதி விட்டால் அதற்கு நோபல் பரிசுகூட கொடுக்கலாம்! தப்பே இல்லை!
பெரியார் முழக்கம் 25092014 இதழ்