வினாக்கள்… விடைகள்…!
காவிரியை எடுத்துக் கொள்; எங்கள் அம்மாவை கொடுத்து விடு. – அ.தி.மு.க. சுவரொட்டி
அம்மா விடுதலைக்கும் லஞ்சம் தான் தருவாங்க போல; அப்படி ஒரு கொள்கை உறுதி!
காந்தி ஜெயந்தியில் பிரதமர், அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் துடைப்பம் எடுத்து பொதுவிடங்களில் குப்பைகளை கூட்டினார்கள். – செய்தி
இனி, அடுத்த ‘காந்தி ஜெயந்தி’ வரும்வரை ‘தீண்டப்படாத’ துப்புரவுத் தொழிலாளர்கள் தான் துடைப்பத்தை ‘தீண்டி’க் கொண் டிருக்க வேண்டும்.
தில்லை நடராசன் கோயில் உண்டியல் வசூல் உரிமையை உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று அரசு மீண்டும் தீட்சதர்களிடமே ஒப்படைத்தது. – செய்தி
அப்படியே தில்லை நடராசன் கோயிலையும் தீட்சதர்களுக்கே எழுதிக் கொடுத்துடுங்க; ‘பகவா னுக்கு’ நன்னா தொண்டு செய்வா…
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. – தூர்தர்ஷன்
மதக் கலவரம் செய்யும் போதும் சொல்லி அனுப்புங்க; கேமிராவை தூக்கிக்கிட்டு ஓடி வந்துடறோம்!
கடவுளுக்கே தண்டனையா? திரைப்பட நடிகர்கள் போராட் டத்தில் ‘பேனர்’. – செய்தி
என்ன செய்யுறதுங்க! ‘கடவுள்’ கவர்னர் மாளிகையில் ‘எழுந்தருளி’ பதவிப் பிரமாணம் எடுக்காமலிருந்தால் இப்படி ஒரு தொல்லையே வந்திருக்கா துங்களே. தண்டனையும் ‘கடவுள் செயல்’தான்னு நினைச்சுக்குங்க…
‘அம்மா’வை விடுதலை செய்ய பல்வேறு ஊர்களில் யாகம். – செய்தி
அநேகமாக, இந்த யாகங்கள் எல்லாம் தண்டனைக்கு முன்பு நடத்தப்பட்ட யாகங்கள், பயனற்றுப் போய்விட்டதை வன்மையாகக் கண்டித்து நடத்தப்படுற யாகங்களாகத் தான், இருக்கும் போலிருக்கு!
ஆம்னி பேருந்து பயணிகளிடம் கொள்ளை அடித்த வட மாநில கும்பல் கைது. – செய்தி
அதே பயணிகளிடம் கட்டணக் கொள்ளை அடிக்கும் சொந்த மாநிலக் கும்பல் எப்போது பிடிபடப் போவுது சார்?
பெரியார் முழக்கம் 09102014 இதழ்