Category: திவிக
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 30042017
30042017 அன்று மாலை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டன்பாளையத்தில், பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலைசெய்யப்பட்ட தோழர் கோவை ஃபாரூக்கின் படத்தை தோழர்கள் சஜீனா,மீனாட்சி ஆகியோர் திறந்துவைத்தனர். தோழர்கள் முத்துபாண்டி, திருச்செங்கோடு வைரவேல், மாவட்டத் தலைவர் சாமிநாதன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோரைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி நகைச்சுவை பொங்க ஒரு மணி நேரம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் காட்டிய வழியில் பணியாற்றி சமூக விடுதலை பெறுவோம் என்றார். இளைஞரணித் தோழர் கா.யுவராசு நன்றி கூற கூடம் நிறைவுற்றது.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புதுச்சேரி 26042017
26042017 அன்று மாலை புதுச்சேரி, தவளக்குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் சார்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 6-00 மணியளவில் ஏம்பலம் அடவு கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வுக்கு அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன் தலைமை வகித்தார்.த.பெ.தி.க. அமைப்பாளர் வீர மோகன், கிராமப்புற மக்கள் மேம்பாட்டு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், மக்கள் உரிமை இயக்கத் தலைவர் செகநாதன், வழக்கறிஞர் இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் சிரீதர் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து ஆதி தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் வினோத், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சேலம் மாநகர விசிக கடிகாரம் அன்பளிப்பு 26042017
சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 56ஆவது கோட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.ஏ. ஆர்ட்ஸ் முத்துராசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் வைப்பதற்காக, கிரானைட் கல்லில் பெரியார்-அம்பேத்கர் ஆகியோரின் உருவப் படங்களுடனும், கடிகாரம் பொறுத்திய முகவரிக்கல்லை 26042017 அன்று காலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். கழகத் தோழர் எல்.ஐ.சி. தனசேகரன் உடனிருந்தார்.
இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம் -நூல் அறிமுக விழா ஈரோடு 23042017
பகத்சிங் மக்கள் சங்கம், டாக்டர் அம்பேத்கரின் ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற நூலின் இறுதி அத்தியாயமான ’இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்’ என்கிற பகுதியை ”இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம்” என்ற நூலை பதிப்பித்துள்ளது. அந்நூலின் அறிமுக விழா 23042017 ஞாயிறு அன்று மாலை 6-00 மணிக்கு, ஈரோடு ரீஜென்சி ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலை தொகுத்து வெளியிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் இரத்தினம் தலைமை தாங்கினார். நூல்குறித்த மூத்த வழக்கறிஞர்கள் திருமலைராஜன், ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி ஆகியோரின் அறிமுக உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை ஆற்றினார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி கூறினார்.
கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம் – கழக தலைவர் நேரில் ஆய்வு
ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து சட்ட, மகாள் திரள் போராட்டங்கள் போன்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அத ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் வி.பி.குணசேகரன் ஆகியோருடன் கனிராவுத்தர் குளப் பணிகளைப் பார்வையிட்டனர். கழக மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன் உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்தனர்.
வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கழக தலைவர் பாராட்டு
சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர் 23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற Dr.B.R. AMBEDKAR SPORTS FOUNDATION திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் இனியன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன் பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி திரு.புண்ணியமூர்த்தி அவர்கள் வழங்கினார். வெற்றிபெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார்.
விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் 25042017
விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் தோழர் கொளத்தூ மணி அவர்கள் தலைமையில் 25042017 அன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையிலும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் கழக தலைவரால் அறிவிக்கப்பட்டது தோழர் அல்லப்பட்டி பாண்டி, மாவட்ட தலைவர் தோழர் ப.வினோத், மாவட்ட செயலாளர் தோழர் பொறிஞர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் தோழர் பெ. இராமநாதன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர், தோழர் செயக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், செய்தி தோழர் பன்னீர்செல்வம் சூலூர்
மாட்டிறைச்சிக்கு ஆதரவாக மதுரையில் கழக சுவரொட்டிகள்
மதுரையில் மாட்டிறைச்சிக்கு எதிராக இந்துத்வா கும்பலால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகிலேயே மாட்டிறைச்சியை ஆதரித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் செய்தி மணி அமுதன்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா குமரி மந்தாரம் புதூர் 23042017
திராவிடர் விடுதலைக்கழகம், பெரியார் தொழிலாளர் கழகம், குமரி மாவட்டம் சார்பாக அம்பேத்கர், காரல் மார்க்சு பிறந்த நாள் விழா மற்றும் தொழிலாளர் தினவிழா மந்தாரம் புதூரில் நடைப்பெற்றது. தோழர் பாரூக் வீரவணக்க கொடிக்கம்பம் நடப்பட்டு தோழர் பால்பிரபாகரன் கழகக்கொடியேற்றி வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினார். பொதுக்கூட்டத்தில் தோழர் நீதி அரசர், தலைமையுரையாற்றினார். தோழர் ஜாண் மதி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தமிழ் மதி, ஜாண் முறே ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்) சாதி ஒழிப்பில் பெரியாரும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பால் பிரபாகன் பேசிய உரையிலிருந்து வினா விடைப் போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் பரிசு ரூ.1000-ம், பெரியார் கோப்பையும் ஆதிராவும், இரண்டாவது பரிசு ரூ.500-ம், பெரியார் கோப்பையும் அனுசிகாவும் பெற்றனர். கைப்பந்து போட்டிகளில் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிக்கொணரும் தோழர் சிவசங்கரி அவர்களைப் பாராட்டி பெரியார் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் புத்தகங்களும் பரிசாக வழங்ப்பட்டது. பள்ளிப்பிள்ளைகள் 10...
“ஜாதி ஒழிப்புப் போராளி” புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை 23042017
“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை பெரம்பூர் சடையப்ப தாஸ் தெருவில் அமைந்துள்ள தாய் ராம்பாய் பவன் 23042017 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது. இந்நிகழ்வில் கருத்துரை தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அம்பேத்கரை திசை திருப்பும் சதி என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம் பற்றியும் மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை வழங்கினர் அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள் ஆழமான புரிதலோடு அனைவரும் அறிந்து சென்றார்கள்.
“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் நினைவு நாள் – குழந்தைகள் பழகு முகாம் சென்னை 30042017
“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள்…. ” ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்” வருகிற ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது…. இடம் : விஜய் திருமண மண்டபம், லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை -600014 பயிற்சியாளர்கள் : ஆசிரியர்.வீ.சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர்.ஜெ.சியாம் சுந்தர், சமூக கல்வி நிறுவனம். சிறப்பு அழைப்பாளர் : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக வருங்கால இளைய சமுதாய தோழர்கள், தோழிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற வாரீர்….. குறிப்பு : * காலை 8 மணியளவில் தோழர்.செ.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த இயக்கம் சார்ந்த தோழர்கள் அனைவரும் வரவும்….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை
அன்பு தோழர்களே, வணக்கம். சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில்...
ஜாதி ஒழிப்பு போராளி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் பெரம்பூர் 23042017
“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்… கருத்துரை : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எழுத்தாளர். வே.மதிமாறன் ‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’ நாள் : 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் : தாய் ராம்பாய் பவன், 37, சடையப்ப தாஸ் தெரு, பெரம்பூர் பெரம்பூர் மேம்பாலம் அருகில். அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்…… ஆழமான புரிதலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்……. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதுச்சேரி 26042017
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 125 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சார்பில்.. நாள் : 26.04.2017. புதன் கிழமை. நேரம் : மாலை 6.00 மணி. இடம் : கடலூர் சாலை,தவளகுப்பம், நல்லவாடு சாலை சந்திப்பு,புதுவை. தலைமை : தோழர் ஆ.பாவாடை ராயன், மாநில தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை. கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள்.
தொட்டியபட்டி ஜாதி வெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் விருதுநகர் 20042017
தொட்டியபட்டியில் நாயக்கர் சாதி வெறியர்களால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மக்களை திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 20042017 அன்று சந்திந்து ஆறுதல் கூறினார் மாலை விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தோழர் ஃபாரூக் நிதியளிப்பு புதுச்சேரி 08042017
08042017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர். நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்றவற்றை விளக்கிப் பேசினார். அந்நிகழ்வில் ரூ.1,84,100-00 வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900-00 அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000-00மாக முழுமைப் படுத்தினர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆத்தூர் 14042017
புரட்சியாளர் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களின் 126 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழர்.மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது… பின்பு அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப்பட்டது….படிப்பகத்தை(வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரியர் தோழர் முருகேசன் அவர்களும், பேராசிரியர் தோழர் அம்பேத்கர் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர்….மேலும் அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும் படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது… செய்தி திவிக ஆத்தூர்.
இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன
“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...
கண்டனப் பொதுக்கூட்டம் ! தூத்துக்குடி 22042017
தொட்டியபட்டி அருந்ததியின மக்கள் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதி ஆதிக்க வெறியர்களைக் கண்டித்து நாள் : 22.04.2017 சனி. நேரம்: மாலை 5 மணி இடம்: வடக்கு சோட்டையன் தோப்பு, தருவைக்குளம் மெயின் ரோடு, தூத்துக்குடி. சிறப்புரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். சொ.சு.தமிழினியன், தென்மண்டலச் செயலாளர்ர், வி.சி.க. தொடர்புக்கு: 90036 95465 – 96268 61581
தோழர் ஃபாரூக் படுகொலை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
தோழர் ஃபாரூக் படுகொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை ! அதனால் கொலைக்கு “காரணமானவர்களை” கண்டறிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தோழர் ஃபாரூக்கை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த முஸ்லீம்கள், இசுலாமிய மதவெறி ஏற்றப்பட்ட வெறும் கருவிகளே. ஆக விரைவில், * ஃபாரூக் படுகொலைக்கு திட்டமிட்டு பின்னிருந்து இயக்கிய இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கம் கண்டறியப்பட வேண்டும். * அந்த இசுலாமிய மதவெறி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப் பட வேண்டும். * ஃபாரூக் கொலையை பின்னிருந்து செய்த இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பு “இசுலாமிய மத பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். செய்தி பரிமளராசன்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தூத்துக்குடி 14042017
அண்ணல் அம்பேத்கர் 126வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் தலைமையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை 14042017
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை சார்பாக அண்ணல் அம்பேத்கர் 126 ஆம் பிறந்தநாள் விழா அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கழகத் தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் டாக்டர்.அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் சென்னை மாவட்ட இயக்க தோழர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த கழக தோழர்கள் வாகன ஊர்வலமாக டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்….. டாக்டர்.அம்பேத்கருக்கு திராவிடர் விடுதலைக் கழக மயிலாப்பூர் பகுதி தோழர்கள் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி…..அந்த பகுதி மக்களுக்கு கேக் வழங்கப்பட்டது…. இறுதியாக ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் டாக்டர்.அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை 15042017
திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக….. “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்…. மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்து சைதாப்பேட்டை T.K. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்…. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 செய்தி ஜான் மண்டேலா
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருச்செங்கோடு 14042017
திருச்செங்கோட்டில்திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா… செய்தி தோழர் வைரவேல்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மேட்டூர் 14042017
மேட்டூர் மற்றும் நங்கவள்ளி பகுதிகளில் கழகத்தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்… சிறப்பு விருந்தினராக ஜோக்கர் திரைப்பட இயக்குநர் இராஜு முருகன் அவர்கள். மிதிவண்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கலைகட்டியது.
மாட்டுக்கறி உண்ணும் விழா – இந்துமகா சபாவின் அறிக்கைக்கு ஈரோடு மாவட்ட கழகம் பதிலடி
அன்பார்ந்த தமிழர்களே ! கீழ்கண்ட அழைப்பை பாருங்கள். _____ அகில பாரத இந்து மகாசபாவின் அறிக்கை : வரும் 23:04:2017 அன்று சேலத்தில் கொளத்தூர் மணியின் பெரியார் திராவிடர் விடுதலை கழகம் நடத்த இருக்கின்ற மாட்டுக்கறி உண்ணும் விழாவைக் கண்டித்து அன்றைய தினமே பெரியாரின் சிலைக்கு அவர் பிறந்த மண்ணில் (ஈரோடு) செருப்பு மாலை அணிவிக்கும் விழா…. அழைக்கிறோம்.. உணர்வுள்ள இந்துக்களே பெரியார் திராவிடர் கழகத்தை விரட்டியடிக்க ஒன்று கூடுவோம்…. இடம் : ஈரோடு நாள் : 2⃣3⃣–0⃣4⃣–2⃣0⃣1⃣7⃣ தலைமை: காவிப்படைத் தளபதி திரு.தொல்காப்பியன் ஜி மாநிலத் துணைத்தலைவர், அகில பாரத இந்து மகாசபா. அழைக்கின்றார் அகில பாரத இந்து மகாசபாவின் தமிழ் மாநிலத் தலைவர் காவித்தளபதி கலியுலக கல்கி K.இராஜசேகர் ஜி அவர்கள்…. அழைப்பில் மகிழ்வது; அ.விஜயகுமார். மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர், மாவட்டத்தலைவர், திருப்பூர் மாவட்டம் @@@@ வாருங்கள் தமிழர்களே !! அய்யா தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கிறார்களாம்… கடும்...
மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017
செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா,...
தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017
04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...
வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்
‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு : நிர்வாகி, ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்
ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்
நாள் : 16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம் : கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு : கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம். அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்
தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017
சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017
05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன் நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.
வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017
கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து 1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....
திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017
சங்கரன்கோவிலில் 09042017 ஞாயிற்றுக்கிழமை அன்று தோழர் பா.சதாசிவம் அவர்கள் இல்லத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது தோழர்.பால்.பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 14-5-17 அன்று கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நூல் அறிமுகக் கூட்டத்தை சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...
பிராமணியத்தைக் கைவிடாதவர்களை எப்படி உள்ளிழக்க முடியும்?
திராவிடர் கழகத்தை பெரியார் உருவக்கினார், இது ஓர் இயக்கம், திமுகவை அண்ணா உருவக்கினார் அது இயக்கமல்ல ; அரசியல் கட்சி, அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கினார், மதிமுகவை வைகோ உருவாக்கினார்.இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செயல்பகின்றன, பெரியார் இயந்திரங்களோ சாதி ஒழிப்பு சமூக நீதி பெண்ணுரிமைக்காகப் போராடுகின்றன.பெரியாப்பாதையை விட்டு விலகிப்போய் விட்டகட்சிகள் செயல்பாட்டை முன்வைத்து பெரியாரியத்தை விமர்சிக்க கூடாது? பார்ப்பணியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமிர், கிருஸ்தவர்களையும் ஒரே கீழ் கொண்டு வருவதற்கும் பெரியார் தேர்வு செய்த பெயர் திராவிடர் இந்தப் பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளான லும், அதன் கொள்கை அறிக்கைகளிலோ, நடைமுறையிலோ தமிழக உரிமைகள் அல்லாது அண்டை ‘திராவிட” மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கிறது அல்லது தமிழ் மேலாதிக்கத்தைத் திணித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நிச்சயமாக இல்லை பெயரில் அடையாலச் சொல்லாக ‘திராவிடம் ‘ இருப்பது என்பது...
“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”
முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல் 11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...
காவேரிப்பட்டினம் – அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு : மாவட்டக் கழகம் எதிர்ப்பு
கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர். தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம்...
“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”
இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...
