நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017
தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து 1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர்.
தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர்.
கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்.
கூட்டத்தில் பெரியாரிய அறிஞர்கள் மருதவாணன், குப்பு.வீரமணி, தஞ்சை மாவட்ட கழக அமைப்பாளர் பேராவூரணி திருவேங்கடம், திருவாரூர் மாவட்ட கழக செய்லாளர் காளிதாசு, பொதுவுடைமைக் கட்சிகளின் முன்ன்ணித் தலைவர்கள், கல்வியாளர்கள் உட்பட திரளாக கலந்துகொண்டனர்.