ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர்.
மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற குடும்பத்தினருடன் மாணவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் இவர்கள் அவர்களை பெயர் சொல்லி அழைத்த விதம், அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகளை விவரித்த விதம், மாணவர்கள் இந்த நிகழ்விற்காக மேற்கொண்ட உண்மை உழைப்பை வெளிச்சம் போட்டு காட்டியதோடு, அந்த மக்களின் மத்தியில் நாளையை பற்றி ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கியது.
மாணவர்களை பாராட்டி விடை பெற்றோம் …