தோழர் முனியாண்டி படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் உருக்கமான பேச்சு
“இனி யார்கிட்ட சண்ட போடப்பேறன்னு தெரியலையே…”
“எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்ள சண்ட வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மதிரி எங்க வீட்டுக்காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டக்கி போவேன். அப்ப கூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்ட போடறதுக்கூட ஆள் இல்லையே.
இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியத நினச்சா எனக்கு ஒடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையும் பெரியார் கத்துக்கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரையும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக்கோங்கனு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது.
என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட எந்த சம்பிரதாயமும் பண்ணாமதான் அடக்கம் செய்யணும்னு சொன்னேன். ஆனா அவங்க பெரும்பான்மையா இருந்ததால என்னால எதுவும் பண்ண முடியல. இப்ப கூட உனக்கு யார் சொந்தக்காரங்க அப்படின்னு யாராவது கேட்டா நான் நம்ம தோழர்களைத்தான் சொல்லுவேன். எனக்கு இந்த கருஞ்சட்டை சொந்தமே போதும்.
இனிமே திக-வோ, திவிக-வோ எந்த கருப்பு சட்டை கூட்டம் நடந்தாலும் சரி நானும் என் பசங்களும் குடும்பத்தோடு கலந்துப்போம்”
நேற்று மறைந்த “மனிதநேயர்” தோழர். முனியாண்டி அவர்களின் படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் தோழர்.இந்துமதி அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கமான பதிவு.
தோழர் பூரணாசுரன் சு பதிவில் இருந்து