வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017
கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது.
வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.