Category: தலைமை கழகம்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

பிராமணியத்தைக் கைவிடாதவர்களை எப்படி உள்ளிழக்க முடியும்?

திராவிடர் கழகத்தை பெரியார் உருவக்கினார், இது ஓர் இயக்கம், திமுகவை அண்ணா உருவக்கினார் அது இயக்கமல்ல ; அரசியல் கட்சி, அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கினார், மதிமுகவை வைகோ உருவாக்கினார்.இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செயல்பகின்றன, பெரியார் இயந்திரங்களோ சாதி ஒழிப்பு சமூக நீதி பெண்ணுரிமைக்காகப் போராடுகின்றன.பெரியாப்பாதையை விட்டு விலகிப்போய் விட்டகட்சிகள் செயல்பாட்டை முன்வைத்து பெரியாரியத்தை விமர்சிக்க கூடாது? பார்ப்பணியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமிர், கிருஸ்தவர்களையும் ஒரே கீழ் கொண்டு வருவதற்கும் பெரியார் தேர்வு செய்த பெயர் திராவிடர் இந்தப் பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளான லும், அதன் கொள்கை அறிக்கைகளிலோ, நடைமுறையிலோ தமிழக உரிமைகள் அல்லாது அண்டை ‘திராவிட” மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கிறது அல்லது தமிழ் மேலாதிக்கத்தைத் திணித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நிச்சயமாக இல்லை பெயரில் அடையாலச் சொல்லாக ‘திராவிடம் ‘ இருப்பது என்பது...

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது ! தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ! தமிழக அரசே,! பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்கு ! அம்மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடு ! விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டி.இக் கிராமத்தில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதியான நாயக்கர் ஜாதி பகுதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன. கிராமத்திற்கு தள்ளி சுடுகாட்டு பகுதியில் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது.அந்த குடிநீர்த்தொட்டியின் கீழ் உள்ள குழாயில்தான் அருந்ததியின மக்கள் குடிநீர் பிடித்து வந்தார்கள்.ஆதிக்க ஜாதியினர் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்தும் மேலும் தங்கள் தண்ணீர் தேவைக்காக சுடுகாட்டு...

தோழர் ஃபாரூக் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 26032017

26-03-2017 ஞாயிறு மாலை 4.00மணிக்கு 16-03-17 அன்று இசுலாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்ட தோழர்,பாரூக் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் தோழர் சூசையப்பா தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் தமிழ் மதி,ஜாண் மதி,நீதி அரசர்,மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,இரமேஸ் பாபு,சுனில்,இராஜன் ,சாந்தா,சமூக ஆர்வலர் போஸ்,அருள்ராஜ்,பேரின்ப தாஸ்,இளங்கோ,ஆன்றன் தமிழ்செல்வன்,ஆர்மல் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் இசுலாமிய மத வெறியர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவுச் செய்தனர். பின்பு பெரியார் தொழிலாளர் கழக அலுவலகத்தில் வைத்து இரங்கல் உரை தோழர் தமிழ் மதி நிகழ்த்தினார் செய்தி தமிழ்மதி  

தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும்…. கருத்தரங்கம் சென்னை 26032017

மனிதநேயப் போராளி … தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும் …. கருத்தரங்கு சென்னை இராயப்பேட்டையில் 26032017 நடைபெற்றது. கருத்தரங்கம் தோழர் ஃபாரூக்கின் படத்திறப்போடு துவங்கியது. கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் … நாத்திகர்கள் மேடைகளில் நமது தோழமை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அவர்களது உரையை துவங்கும் போது ” உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பிரார்த்தித்தவனாக .. உங்கள் முன் பேச துவங்குகிறேன் ” என்றே துவங்குவர். அது நாத்திகர்களின் மேடை மற்றும் நம் கொள்கைக்கு மாறானது என்ற போதும், அது தோழர்களின் கருத்துரிமை என்றும், அதற்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்றும் ., தோழமை அமைப்புகளின் கொள்கை உணர்விற்கு நாத்திகர்கள் மேடை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்தோடு நடந்துக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார் … இந்த கருத்தை கருத்தரங்கிற்கு வந்திருந்த...

கோடைக்கால விடுமுறை  “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாள் : 10.5.2017 முதல் 14.5.2017 (5 நாட்கள்) இடம் : பெங்களுர் . குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம் குழந்தை 1க்கு : Rs.1500/= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) குறிப்பு : Rs1500/= செலுத்த இயலாதவர்கள் Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

கேரளாவில் யுக்திவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டம் எர்ணாகுளம் 22032017

கேரளாவில் 22032017 அன்று காலை 10 மணிக்க யுக்திவாதிகள்(பகுத்தறிவாதிகள்) சார்பில் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டில் தோழர் பாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் ! கழகத் தலைவர் அவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று ஆற்றிய உரை.(காணொளி) ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள ராணி வாணி மஹாலில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் கெளசல்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை மக்கள் விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! 29012017

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……. நாள் : 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை.மாலை 6.00 மணி. இடம் : பேருந்து நிலையம் அருகில்,நங்கவள்ளி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் சிவகாமி, அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொளத்தூரில் முப்பெரும் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 138 வது பிறந்த நாள் விழா ! பெரியார் படிப்பகம் திறப்பு ! தமிழர் திருநாள் ! நாள் : 28.01.2017 சனிக்கிழமை. இடம் : பேருந்து நிலையம்,கொளத்தூர். படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுபவர் : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? – பசு கவுதமன்

முன் வெளியீட்டுத்திட்டத்தில் அதிரடி விலைக் குறைப்பு ! ரூபாய் 2000 மட்டுமே ! ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?” பெரியாரின் 1925 முதல் 1973 வரையிலான முழுமையான பதிவுகள். ஐந்து தொகுதிகள் – 4000 பக்கங்கள் – விலை 4000/= முன் வெளியீட்டுத்திட்டத்தில் ரூபாய் 2000 மட்டுமே ! தோழர் பசு.கவுதமனின் பல்லாண்டு பெரும் முயற்சியில் பெரியார் எழுதியபடியே பெரியாரின் எழுத்துக்களுக்கான ஒரு செம்பதிப்பு !

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...

நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

திமுக தலைவர் கலைஞர் உடல்நலத்தை கழகத் தலைவர் விசாரிப்பு சென்னை 02012017

கலைஞரின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவர் இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இன்று சென்றார்கள். அப்போது திமுக பொருளாளர் வரவேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பொன்முடி இருந்தார்கள்.      

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி...

மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

அய்யா!       வணக்கம். அண்மையில் வந்துபோன வர்தா புயல் தந்த பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். அரசு உடனடி நடவடிக்கைகள் செய்ததும் சென்னை மாநகராட்சி தொய்வின்றிச் செய்யும் பணிகளும் நம்மை மீட்டுள்ளன.  முழுமையாக மீளவேண்டியுள்ளது என்பது வேறு செய்தி.        புலம்பெயர்ந்து இங்கே வாழ்ந்து வரும் ஈழத் தமிழரின் முகாம்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருக்கக் கூடும்.எவ்வித  மீட்புப்  பணிகளும் குறிப்பாக கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக்  கொண்டு வர விழைகிறோம்.        இப்போதுவரை அங்கே மின்சாரம் மருந்துக்கும் இல்லை. அதனால் தண்ணீரை மேலேற்ற முடியவில்லை. குடிப்பதற்கோ கழுவிக்கொள்வதற்கோ  தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். சில தன்னார்வலர்கள் உதவியால் ஏதோ அடிப்படைத் தேவைகளை சிக்கனமாய் நிறைவு செய்துகொள்ளும் அவலநிலை. இரவெல்லாம் இருண்ட வனவாழ்வு வாழ்கின்றனர். மரங்கள் வீடுகள் மேல் விழுந்ததை அப்புறப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை....

”வேத மரபு மறுப்பு மாநாடு” சேலம் 24122016

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில்… ”வேத மரபு மறுப்பு மாநாடு” கருத்தரங்கம் – பேரணி – பொதுமாநாடு. நாள் : 24.12.2016 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம்,போஸ் மைதானம்,சேலம். ✪ கழகத்தலைவருக்கு ஊர்தி வழங்குதல், ✪ கட்டமைப்பு நிதி வழங்குதல், ✪ புரட்சிப்பெரியார் முழக்கம் சந்தா ஒப்படைத்தல். ✪ ”நிமிர்” – கழக மாத இதழ் வெளியீடு

கழகத் தோழர் பாரூக் விடுதலை !

கழக தோழர் முகமது பாரூக் அவர்கள் மீது புனையப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரை குழு (Advisory board) 30.11.2016 அன்று தள்ளுபடி செய்து பிறப்பித்துள்ள ஆணை ! குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட கழக தோழர் பாரூக் அவர்கள் இன்று 07.12.2016 சேலம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தோழருக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கறுப்பாடை அணிவித்து வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,சேலம் மாவட்ட செயலாளர் தோழர் சேலம் டேவிட்,கோவை மாவட்ட அமைப்பாளர் நேருதாஸ்,சூலூர் பன்னீர் செல்வம்,நங்கவள்ளி கிருஷ்ணன் உள்ளிட்ட கழக தோழர்கள் நிர்வாகிகள் தோழர் பாரூக் அவர்களுக்கு சேலம் சிறைவாயிலில் வரவேற்பளித்தனர்.

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு. தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே! இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல்...

டிச.24 சேலம் மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்!

பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர்விடுதலைக் கழகம் வேத மரபு மாநாட்டை நடத்துகிறது. “வேத மரபை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்” என்பதே மாநாட்டின் முழக்கம். வேத பார்ப்பனிய மரபு சமூகத்தை ஒடுக்கி வந்த வரலாறுகளை பல்வேறு கருத்தாளர்கள் விரிவாகப் பேச இருக்கிறார்கள். வேதங்கள் கற்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்பான சிந்தனைகள் சமூகத்தில் உருவாகியே வந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பனியம் அந்த எதிர்ப்புகளை சூழ்ச்சியால், அழிப்பால், இருட்டிப்பால், ஊடுருவலால் வீழ்த்தியது என்பதே கொடூரமான வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘இந்து’ என்ற பெயரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது பார்ப்பனியம். வேத பார்ப்பனிய மரபுகளால் அடிமைகளாக்கப்பட்டு, உருக்குலைக்கப்பட்ட மக்களை தனது கட்டுப்பாட்டில் உறுதிப்படுத்திக் கொண்டது. அதற்கு சட்டப் பாதுகாப்பையும் தேடிக் கொண்டது. இந்து மதம்  என்ற பெயரில் நமது மக்கள் மீது பார்ப்பனியம் திணித்த அடக்குமுறைகளை எதிர்க்கும் போதெல்லாம், “பார், பார்- இந்துக்களின் விரோதிகளைப் பார்” என்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வெகுமக்களை...

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...

டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...

மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு – FASR நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து 19 : 11 :2016 சனிக்கிழமையன்று காலை 10 : 00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ” கண்டன ஆர்ப்பாட்டம் ” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றுகிறார். சென்னை மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

சென்னையில் முற்றுகைப்போராட்டம் ,கைது !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 26.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக பொதுச்செயலாளர் தோழர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை.முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இம்முறைக்கப்போராட்டத்தின் போது சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று !உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே ! என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முற்றுகையில் ஈடுபட்ட கழக தோழர்கள் கைதுசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார்கள். இம்முற்றுகைப் போராட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,மாவட்ட தலைவர் வேழவேந்தன்,மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார்,கழக வழக்கறிஞர் அருண் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.  

களை கட்டும் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் காவலாண்டியூர் 10112016

திராவிடர் விடுதலைக் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் கிளை : காவலாண்டியூர்  தி.வி.க ஆதரவாளர்கள் 1. திரு.ராமு போர்வெல் காண்ட்ரக்டர் கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000/= 2. திரு.ராஜா தி.மு.க. (ஜல்லிமேடு) கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000 | = 3.வளர்மதி விஸ்வநாதன் கண்ணாமூச்சி ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 4. திரு.சத்தியானந்தம் நெடுஞ்செழியன் நகர் செட்டியார் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 5. திரு.இராஜா நஞ்சுண்டபுரம்.காவலாண்டியூர் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 6. திரு. கார்த்திக் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 7. திரு.சேகர் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 8. திரு.கண்ணன் பழ வியாபாரி காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000 | = தோழர்கள்… 1. க ஈசுவரன ஒ். செயலாளர் தி.வி.க.காவலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 2. இரா.விசயக்குமார் கபிலன் ஸ்டுடியோ காலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 3. காவை . இளவரசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் காவலாண்டியூர் ரூ. பத்தாயிரம்...