கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன.

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும் குழுவினர் பாடி கூட்டத்தை மகிழ்வித்தனர். திருவல்லிக் கேணி பகுதி கழகத் தோழர்கள் சோ. தமிழரசு, சு. பிரகாசு, செ. செந்தில் விழாவுக்கு முறையே தலைமை, முன்னிலை, வரவேற்புரை வழங்கினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஒருங்கிணைத்தார். விழாவுக்கான விளையாட்டு போட்டிகளை ஜன.8 அன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர். கிருட்டிண குமார் தொடங்கி வைத்தார்.

கானா ஜெகன் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. சாவு வீட்டில் மட்டும் பாட அனுமதிக்கப்பட்ட எங்களை பொது விழாவுக்கு அழைத்துப் பாட வைத்த இந்த அமைப்புக்கு நன்றி செலுத்து கிறேன். அந்த மகிழ்வுக்காக நடனம் ஆடுங்கள் என்று பலத்த கரவொலிக் கிடையே அறிவித்தார்.

தோழர்கள், பொது மக்கள் இணைந்து விழாவின் நிறைவாக பாடல்களுக்கு நடனமாடிய காட்சி, அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தது.

சென்னை செனாய் நகரில்…

சென்னை செனாய் நகரில் கழகத் தோழர் ஆ.வ.வேலு தொடர்ந்து நடத்தி வரும் தமிழர் திருநாள் விழா, இவ் வாண்டு ஜன.14 அன்று பச்சையப்பன் கல்லூரி பின்புறத்திலுள்ள வைத்திய நாதன் வீதியில் அதிர்வு பறை இசை நடன நிகழ்ச்சிகளோடு நடந்தது. திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். டேவிட் பெரியார் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

மயிலையில்

மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் பாலம் அருகே ஜன.15ஆம் தேதி தமிழர் திருநாள் விழாவை பகுதி கழகத்தினரும் மகளிர் குழுவினரும் இணைந்து நடத் தினர். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. அதிர்வு குழுவினர் மயிலைப் பகுதியில் வீதி வீதியாகத் தோழர் களுடன் பறை இசை முழங்கிச் சென்றனர்.

நங்கவள்ளியில்…

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் விழா ஜனவரி 29, மாலை 6 மணியளவில் விரட்டு கலை பண்பாட்டு மய்யத்தின் கலை விழாக் களோடு தொடங்கியது.  இரவு 10 மணி வரை நடந்த கொள்கை பரப்பும், கலை நிகழ்வுகளைப் பார்க்க பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். நிகழ்வுக்கு த. கண்ணன் (நகர செயலாளர்) தலைமை தாங்க, த. மனோஜ்குமார் (துணைத் தலைவர்) வரவேற்புரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப் பாளர் வீ.சிவகாமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினர். நகர துணைச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

காவலாண்டியூரில்…

மேட்டுர் காவலாண்டியூரில் தமிழர் திருநாள் புத்தாண்டு விழா, ஜன.16 அன்று விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் எழுச்சியுடன் நடந்தன. பெரியார் விளையாட்டுக் குழு தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து நடத்திய விழாவில் விரட்டு கலை பண்பாட்டு மய்யத்தின் கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பெரியார் விளையாட்டு குழுவைச் சார்ந்த தோழர்கள் சசிகுமார், சேகர், மாணவர் கழகத் தோழர்கள் பிரபு, தணிகைச் செல்வன், கழகப் பேச்சாளர் காவை இளவரசன், காவலாண்டியூர் ஒன்றிய செயலாளர் ஈசுவரன் ஆகி யோர் முன்னின்று ஏற்பாடுகளை செய்தனர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் அ.இ.அ.தி.மு.க. வைச் சார்ந்த பழனிச்சாமி விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

கழக கட்டமைப்புக்கு நிதி வழங்கியோருக்கு விழாவில் சிறப்பு செய்யப்பட்டது.

ஈரோட்டில் பொங்கல் விழா

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று  லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நண்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மாலை 6-30 மணிக்கு மா. ஜெய பாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற, ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) தலைமை யிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி,  தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையிலும்,  சித்தோடு முருகேசனின் பகுத்தறிவுப் பாடலுடன்  கூட்டம் துவங்கியது.

தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப் புரையாற்றினர். விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் புத்தகப் பரிசுகளை திருப்பூர் துரைசாமி (பொருளாளர்) சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

தமிழிசைப் பாடல்களுக்கு சென்னி மலை ஆசிரியர் சுப்பிரமணி, ரகு ஆகியோர் பரத நாட்டியம் நடைபெற்றது. இறுதியாக இரா. கமலக் கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.

இக்கூட்டத்தினை அண்ணாநகர் மக்களோடு இளங்கோ , சம்பத் மற்றும் அடேங்கப்பா மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தினர்.  கூட்டத்தில் சித்தோடு நட்ராஜ், பிரபு, கதிர், ரமேஷ் , பிரபு , கிருஷ்ணமூர்த்தி, பிரசாந்த், ஈரோடு  சிவானந்தம், இராசன்னா, பவானி வினோத், வேல்முருகன், ஜெகன், காவலாண்டியூர் சித்துசாமி , ஈசுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 02022017 இதழ்

You may also like...