பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்
ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக அதிகாரத்துக்கு வந்தவுடனே தனது அடக்குமுறைகளை ஏவத் தொடங்கிவிட்டது. உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், புக்கர் பரிசைப் பெற்றவருமான அருந்ததி ராய் மீது உஃபா சட்டத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். அவர் மட்டுமின்றி காஷ்மீர் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் என்பவர் மீதும் இந்த சட்டத்தை ஏவுவதற்கான வேலைகளை செய்துவருகின்றனர். அப்படி என்ன குற்றத்தை செய்துவிட்டார் அருந்ததிராய்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காஷ்மீர் விவகாரம் குறித்து நடைப்பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அருந்ததி ராய் பேசினார். அப்போது காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை அங்கு பதிவு செய்தார். பேராசிரியர் சேக் சவுகத் உசைனும் இதே கருத்தை தான் பதிவுசெய்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டவிரோதமாக அங்கு எதுவும் பேசப்படவிடவில்லை. தேச விரோத சட்டங்கள் பாயும்...
