Category: பெரியார் முழக்கம் 2018

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

பரப்புரைப் பயணத்தில் விற்பனையாகிறது கழகத்தின் புதிய வெளியீடுகள்!

பரப்புரைப் பயணத்தில் விற்பனையாகிறது கழகத்தின் புதிய வெளியீடுகள்!

சலுகை விலையில் 6 புத்தகங்களின் தொகுப்பு ரூ.150/- இடஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி அம்பேத்கர்-காமராசர் ஒரு வரலாற்றுப் பார்வை – கொளத்தூர் மணி கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்பு தமிழை இழிக்கும் வேத மரபு – விடுதலை இராசேந்திரன், வாலாசா வல்லவன் மத்திய அரசு பணிகளில் தமிழர் உரிமைப் பறிப்பு – கு. அன்பு காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள் – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 23082018 இதழ்

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

“தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின்” சென்னை மாவட்ட பரப்புரைக் குழு 20.08.2018 அன்று காலை 9.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து பரப்புரைப் பயண முழக்கத்தோடு பயணத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கிண்டி கத்திபாரா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மா.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயணத்தின் முதல் பரப்புரைப் பயணக் கூட்டம் நங்கநல்லூர் சுரங்க பாதை அருகே காலை 11 மணிக்கு “விரட்டு” கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத் தோடு தொடங்கப்பட்டது. அருள்தாஸ், தமிழர் உரிமை பாடல்களைப் பாடினார். இரண்டாவது கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு பரப்புரைப் பயணம் தொடங்கியது. பரப்புரைப் பயண தோழர்களுக்கு நங்கநல்லூர் பகுதியை சார்ந்த குகனாந்தன் மதிய உணவை தோழர்களுக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு, மாலை 3 மணிக்கு பரப்புரைப் பயணம் கோவிலம்பாக்கம் பேருந்து...

சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு சிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்

சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு சிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்

ராஜீவ் கொலை வழக்கில் நீதி மன்றங்களால் நிரூபிக்க முடியாத குற்றச் சாட்டுகளுக்குப் பிறகும் 26 ஆண்டு களாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்து உறுதி தளராது சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் பேரறிவாளன். டெல்லி அதிகார பீடத்தில்  ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் தங்கள் அதிகாரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது முழுமையான அதிகாரச் செல் வாக்கையும் முறைகேடாகப் பயன் படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் வழியாக இவர்களின் விடுதலைக்கான தடையைப் பெற்று உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது நடுவண் ஆட்சி. நாட்டைக் கெடுத்ததே நேரு வின் குடும்பம் என்று பேசி வரும் பா.ஜ.க.வும், சங்பரிவாரங்களும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் நேரடி தொடர் பில்லாத சிறைவாசிகளின் விடுதலையை உறுதியாக மறுக்கின்றன என்றால் பார்ப்பன அதிகார வர்க்கம் ஆட்சிகளை தங்களின் பார்ப் பனிய திசையில் செலுத்திக் கொண்டிருக்...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச் சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப் பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு...

நன்கொடை

நன்கொடை

கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெங்கட் – இராஜேஸ்வரி இணையரின் குழந்தைக்கு “அறிவுக் கனல்” என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயரிட்டார். அதன் நினைவாக இயக்க நிதியாக ரூ. 1000 கொடுத்தனர். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

தபோல்கர் கொலை: மதவெறியர் கைது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது

தபோல்கர் கொலை: மதவெறியர் கைது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது

2013ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கரை சுட்டிக் கொன்ற ‘சிவசேனை’ முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா வில் நடப்பது இந்துத்துவ பாசிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சிவசேனை ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து கருநாடக அரசு மேற்கொண்ட தீவிரப் புலனாய்வு காரணமாக இதுவரை சிக்காமல் பதுங்கி நின்ற ‘சங்பரிவார்’ குடும்பங்கள் சிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய படுகொலைகளை நடத்தும் ‘சங்பரிவார்’ கொள்கையாளர்கள் ஒவ்வொரு வன்முறை நிகழ்த்தும் போதும் ஏதேனும் ஒரு புதிய இந்துத்துவா பெயரை சூட்டிக் கொள்வது வழக்கம். காந்தி கொலையில் கோட்சே கும்பல் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது. அவரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சார்ந்த கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரியில் கோலாம்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்துத்துவா எதிர்ப்பாளர். மாவீரன் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் நூலாக எழுதியவர். 2015 ஆகஸ்ட்டில் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் துணைவேந்தரும் சிறந்த இலக்கியவாதி யுமான முனைவர் கல்புர்கி...

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே  அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

‘நீட்’டின் மற்றொரு கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு தமிழ்நாடு  அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இடம் கிடைத்தவர்கள் இரண்டு பேர். ஆக 100 சதவீதம் அதிகரித்துவிட்டது என ‘புள்ளி விவரப் புலிகள்’ மார் தட்டலாம். ஆனால் எதார்த்தம் மிக மிக மோசம். தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த இடங்கள் 5660. இதில் அரசுப் பள்ளியில் படித்த பெரும் பொருட் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்கள் பெற்ற இடம் இவ்வளவுதான். ‘நீட்’ தேர்வு வருகைக்கு முன்பு 2016இல் 30 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பிடித்தனர். இப்போது தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்தப் பிறகே சி.பி.எஸ்.ஈ. அனுமதித்தது. அதிலும் 49 கேள்விகள் தவறானவை. மாணவர்கள் விடையளிக்க முடியாததால் சுமார்...

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது. கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து...

ரூ.2 இலட்சம் கொடுத்தால் யாரும் வாங்கலாம்: விலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்

ரூ.2 இலட்சம் கொடுத்தால் யாரும் வாங்கலாம்: விலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்

நீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி உள்ளிட்ட அனைத்து விவரங் களும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதாவது, 2018ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில், 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களும் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன; ரூ. 2 லட்சம் தந்தால், அந்த 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களையும் குறிப்பிட்ட இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் ஆகிய வற்றை குறிவைத்து, இந்த டேட்டாக்கள் விற்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றும், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், சீட் கிடைக்காமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களை தங்கள் கல்லூரிகளில் சேருமாறு அழைக்க வும், இத்தனை லட்சம் கொடுத்தால் நீங்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று பேரம் பேசவும், தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் களின் தரவுகள் பயன்பட்டிருக்கின்றன. அதேபோல நீட் தேர்வில் வெற்றி பெறாதவர்களை...

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு  (Current a/c) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 i.f.c. Code : kvbl0001257 தொடர்புக்கு:  7299230363 பெரியார் முழக்கம் 16082018 இதழ்

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

பெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்!

பெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்!

குண்டர் சட்டத்தைத் தகர்த்து விடுதலை யானவுடன், மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி, 2017ஆம் ஆண்டு தோழர்களுடன் நேராக இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் படிப்பக வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட வந்தார். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வரவேற்று மாலை அணிவிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது சட்ட விரோதமாகக் கூடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக காவல்துறை தோழர் திருமுருகன் காந்தியை கைது செய்துள்ளது. முதலில்  அவர் மீது ‘தேசத் துரோக’ வழக்கைப் பதிவு செய்து வெளிநாட் டிலிருந்து அவர் திரும்பும் வரை காத்திருந்து பெங்களூர் விமான நிலையத்தில் கருநாடக காவல்துறை கைது செய்து, சென்னை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தது. சைதை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார் திருமுருகன் காந்தி. ஜெனிவாவில் உள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி திருமுருகன் பேசியிருக்கிறார். இது தேச விரோதம்...

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

பார்ப்பன-மேல்சாதி இந்திய ஆளும் வர்க்கம் வன்னெஞ்சத்துடன், இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உயிருடன் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எழுவரின் விடுதலை, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் இழுத்தடிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இராசிவ் காந்தி 1991 மே 21 அன்று திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரான இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய...

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு; 6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள். எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை. 1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும்...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜூலை 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜூலை 2018 இதழ்

தலையங்கம்-ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் ‘தலித்’துகளை புறக்கணிக்கும் கிரிக்கெட் வாரியம் ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறல்- ஒரு விரிவான அலசல் தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் – அய்.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 09082018 இதழ்

மேட்டூர் பகுதியில்  விளக்கக் கூட்டங்கள்

மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பரப்புரைப் பயணத்துக்கு  கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

பரப்புரைப் பயணத்துக்கு கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 03.08.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் வரும் ஆக°ட் 20 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் “கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின்” நோக்கத்தை குறித்தும், பயணத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செய லாளர்) ஒருங்கிணைத்தார். ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு தனசேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர்) மற்றும் கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை கூறினர். இறுதியாக தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

பா.ஜ.க. தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கட்சியின் தேசிய மாவட்ட நிர்வாகிகள் பார்ப்பன-பனியா உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவினர்களிடமே இருக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்சாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளையும் இவர்கள் பின்பற்று கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. பாஜக உருவாகி 38 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அக்கட்சி பொறுப்பில் இன்றளவிலும் முன்னேறிய சமூகத்தினரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. குறைந்த அளவில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளவில்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் பொறுப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன கட்டமைப்பு குறித்த ஒரு...

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் ஆறாவது சந்திப்பு, 30.07.2018 அன்று மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் இமானுவேல் துரை, ‘யோகக் கலை’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் மற்றும் ‘திராவிடர் இயக்க சாதனைகள்’ குறித்து ஜெயபிரகாஷ் ஆகியோர் விரிவாகப் பேசினர். ‘நிமிர்வோம்’ டிசம்பர் 2017 மற்றும் சனவரி 2018 மாத இதழ்களை குறித்தும் தங்களது கருத்துகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு சிறப்புரையாற்ற வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “கலைஞரின் 50 ஆண்டு கால வரலாறு” குறித்து தனது ஆழமான கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன். அவர் தலைமையில் 1948இல் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். அனைவருக்கும் தரமான உயர் கல்வி என்ற இலக்கோடு 1956இல் பல்கலைக்கழக மானியக் குழுவாக (யு.ஜி.சி.) அது சட்டபூர்வமாக நிலைபெற்றது. மாணவர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முன்வைத்த சி.டி.தேஷ்முக், மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவத் திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் ஊதியத்துக்கு யூ.ஜி.சி.யின் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். இப்படிக் கல்வியாளர்களாலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் யு.ஜி.சி. ஆனால், தற்போது அது கலைக்கப்பட விருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn டிக ஐனேயை – ழநுஐ) என்ற புதிய கல்விக் கழகம் வரப்போகிறது. அப்படியானால் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரி களுக்கும் தொடர்பில்லாதவர்கள் இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்க உரிமைகொண்டவராவர். கோரிக்கையின் தொகுப்பு இந்திய உயர்கல்வியின்...

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

திருப்பூர் அருகே திருமலை கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பாப்பாள், உள்ளூர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பால் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு – ஜாதி எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து வந்தன. பிறகு மீண்டும் பாப்பாளின் சொந்த ஊரான திருமலைக் கவுண்டன் பாளையத்துக்கே மாற்றப்பட்டார். இப்போது ஜாதி வெறியர்கள் பாப்பாள் குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாக பாப்பாள் கணவர் பழனிச்சாமி, போலீ° பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். பாப்பாள் நியமனத்துக்குப் பிறகு சில ஜாதி வெறியர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மதிய உணவை பள்ளியில் சாப்பிடக் கூடாது என்று கூறி, வீட்டிலிருந்தே உணவு தயாரித்துக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்களாம். இதே போன்று, திருச்சி  புத்தூரிலிருந்து ஒரு தலித் அர்ச்சகர் சந்திக்கும் ஜாதிக் கொடுமைகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த கே.சிவசங்கரன் (34)...

விடை பெற்றார்!

விடை பெற்றார்!

1924 -2018 கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும்! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்! பெரியார் முழக்கம் 09082018 இதழ்

விடை பெற்றார் கலைஞர் !

விடை பெற்றார்  ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

மாணவர்களைவிட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். கோரக்பூர் ஐ.ஐ.டி.யில்  நடைபெற்ற 64ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: 2017இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர்.அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், மாணவர்களைவிட மாணவியர்  அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற...

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடு களுக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ. 355 கோடியே 78 லட்சம் செலவாகி இருப்பதாகவும் பிரதமர்அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந் தது. இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி, 2014 முதல் கடந்த நான்காண்டுகளில் 84 நாடுகளை சுற்றி வந்திருப்பதாகவும், இதற்காக சுமார் ரூ. ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி மொத்தம் 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை சுற்றி வந்துள்ளார். 2015-16இல் மட்டும் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2016-17இல் 18 நாடுகளுக்கும், 2017-18இல் 19 நாடுகளுக்கும் பயணம் செய்துள் ளார்.இதற்காக 2014-15இல் ரூ. 93 கோடியே 76 லட்சமும், 2015-16இல்...

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள்ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்பேரவை அலுவலகத் திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவதாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.ஆனால், மாந்திரீக பூஜையெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப் பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளைஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர்...

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பார்ப்பனரல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08ஆம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பார்ப்பனரல்லாத  ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப் படுவது இதுவே முதன்முறை. இது குறித்து இந்து சமய அற நிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு கோயிலுக் கும் ஒரு ஆகமவிதி உள்ளது. அந்தக் கோயில்களின் ஆகமவிதிகளுக்குட் பட்டே அர்ச்சகர் நியமனம் நடை பெறும். கோயில் செயல் அதிகாரி நேர்காணல் கண்டு ஆகம விதிகளுக்குட்பட்டு அர்ச்சகர்களைத் தேர்வு செய்வார்கள். எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டுதான்...

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கை யாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… தமிழக முதலமைச்சராக இருந்த சி.என்.அண்ணா துரை 1969-ல் மறைந்தார். மு.கருணாநிதி முதலமைச்சராக அடுத்து பதவிக்கு வந்தார். இந்தியை எதிர்த்தவர்கள், டெல்லிக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியவர்கள், இளைஞர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆற்றொழுக்காக அடுக்கு மொழியில் பேசுகிறவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். முந்தைய அரசுகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தங்களால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள்....

தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு முகவரிப் பட்டியலுக்குரிய முழுமையான சந்தாத் தொகையை வழங்காத தோழர்கள். மீதமுள்ள தொகையை உடனடியாக அனுப்பி உதவ வேண்டுகிறோம். இதுவரை ‘சந்தா’ சேர்க்காத தோழர்கள், ‘சந்தா’ சேர்த்து இதழ் பரவிட ஒத்துழைக்க வேண்டுகிறோம்.  – நிர்வாகி 98414 89896 பெரியார் முழக்கம் 26072018 இதழ்

உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி

உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி

உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீசார் பசுவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அனுப்பி வைத்த சம்பவம் இராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் மேவாத் மாவட்டத்தில் உள்ள கோல்கோவான் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான் (31). இவர் தனது நண்பர் ஒருவருடன் இரண்டு பசுமாடுகளை ஹரியானாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ராம்கர் பகுதியில் உள்ள லலாவண்டி கிராமத்துக்கு வந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பசுக்களை அங்கிருந்து கடத்திச் செல்வதாக நினைத்து அவர்களை கடுமையாகத் தாக்கியது. இதில் காயமடைந்த அக்பர்கான் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உயிருக்குப் போராடிய 31 வயது இளைஞரான அக்பன் கானுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மாடுகளை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்ல முன்னுரிமை கொடுத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 12.41 மணிக்கு சம்பவம்...

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிரி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சத்துணவு சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமைக்கு எதிராகக் களமிறங்கின. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளை யத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து...

பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ

பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ

துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை குழாய்களில் இறங்கி அடைப்பைச் சரி செய்வதைத் தடுக்கவும், இதனால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்கவும் தமிழகத்தில் முதன்முறையாகக் கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சீரமைக்க ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு பரிசோதனை முயற்சியும் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008-09-ம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125 கி.மீட்டர் நீளத்துக்குக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை துப்புரவுப் பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்வார்கள். அப்போது விஷவாயுக்கள் தாக்கி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு பாதிக்கப்படுவர். இதையடுத்து பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் குழாய்களில் துப்புரவுத் தொழிலாளிகள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது....

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சைப் பதறச் செய்யும் கொடுமையை செய்த அனைவரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு கொடூர சம்பவம் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில் வதந்திகளை பரப்பி அதன் மூலம் இலாபம் அடைவதையே  தங்கள் வேலைத் திட்டமாக வைத்துள்ள காவி வெறி கும்பல் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இந்த குற்றத்தை செய்துள்ள கும்பவில் ஒருவர் என  “பால சுப்ரமணியன்” எனும் பெயர் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்கள். இந்தப் படத்தில் உள்ள நபருக்கும் எமது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் கழகத் தோழருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை. இவர் கருப்புச்சட்டை அணிந்திருப்பது போன்று காட்டி...

கடவுள் எங்கே? காட்டுங்கள் ! பிலிப்பைன்ஸ் அதிபர் சவால்

கடவுள் எங்கே? காட்டுங்கள் ! பிலிப்பைன்ஸ் அதிபர் சவால்

பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். “கடவுளை எனக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுங்கள் அல்லது கடவுளுடன் செல்பியாவது எடுத்துக்காட் டுங்கள். உடனடியாக நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொண்டு பதவி விலகி விடுகிறேன்” என்று கூறியுள்ளார். பாலினீஸிய பெருந்தீவுகளை ஒருங்கிணைத்து உருவான நாடு பிலிப்பைன்ஸ். பசிபிக் கடல் தொழில் மற்றும் குறுகியகாலப் பயிர் விவசாயம் என்று தொழில் செய்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களுக்கென்று இயற்கையான பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பரவி இருந்த புத்த மதமும் அங்கு ஒரு மதமாக இருந்தது. இவர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றக் கொள்கை வடிவிலான நம்பிக்கையான ஒன்றாகவே இருந்தது. காலனி ஆதிக்கம், அய்ரோப்பியர்களின் வருகை தொடர்ந்ததால் கிறித்துவம் மற்றும் இசுலாம் பரவியது. இருப்பினும் அந்த மதங்கள் மற்ற நாடுகளில் ஆழமாக இருக்கும் நிலையில் கடவுள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பான நம்பிக்கைகள்...

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் அக்ராவரம் கிராமத்தில் உப்ரபள்ளி ஆற்றின் அருகில் ஊரின் தெருவில் சென்றதற்காக 22.07.2018 அன்று 40 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜெயபிரகாஷ், ஜெயச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.  களத்தில் இறங்கிய கழகத் தோழர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

தாழ்த்தப்பட்ட – பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக  தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும்  2.7.2018 அன்று  திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில்  தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக   விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக்  கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால்  ஏற்படுகின்ற தீமைகள்  குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று  விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம்...

கையால் மலம் எடுக்கும் இழிவைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

கையால் மலம் எடுக்கும் இழிவைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம்-2015ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், கையால் மலம் அள்ளும் அவல நிலையைப் போக்க, அதனால் ஏற்படும் மலக்குழி மரணங்களைத் தடுக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டத்தில் சூலை 9, 2018 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி அளவில் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவை, அருந்ததியர் சனநாயக முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏஐடியூசி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சார்பில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

சென்னை, ஈரோட்டில்  காமராஜர் பிறந்தநாள் விழா

சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ்  பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது. ‘மதச்சார்பின்மை’யைப் பின்பற்றும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் சாத்தியமா என்ற கேள்வி, கடந்த பல ஆண்டுகாலமாகவே சமூக ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தக் கேள்விகளுக்கு விடை தருவதாக இந்த ஆய்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சமூக ஆய்வாளர்களிடையே இரண்டு கருத்துகள் முன் வைக்கப்பட்டு வந்தன. தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வளர மதங்களின் பல்வேறு செயல்பாடுகள் மறையத் தொடங்கிவிடும் என்று ஒரு சாரார் கூறி வந்தனர். மதத்தை நம்பிக் கொண்டு உழைப்பவர்களின் கலாச்சாரத்தால் ‘முதலாளித்துவம்’ வளர்ச்சியடையும் என்று மற்றொரு சாரார் கூறி வந்தார்கள். “மதத்துக்கும் உடைமைகளுக்கும் (சொத்து) உள்ள தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விவாதங்கள்...

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 17.7.2018 அன்று சென்னையில் தலைமைக் கழகத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தலைமைக் குழு உறுப்பினர்கள் ஈரோடு இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, பால் பிரபாகரன், கோபி. இளங்கோவன், தபசி குமரன், இரா. உமாபதி, அன்பு தனசேகரன், மேட்டூர் சக்தி, அய்யனார், சூலூர் பன்னீர் செல்வம், பாரி சிவக்குமார், பரிமளராசன் ஆகியோர் கலந்து  கொண்டனர். கழக செயல்பாடுகள், கட்டமைப்பு நிதி, கழக அமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. ‘தமிழர் கல்வி உரிமைப் பயணம்’, பரப்புரை இயக்கத்தை ஆகஸ்டு 20 தொடங்கி 26இல் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. குடியாத்தம், கீழப்பாவூர், மேட்டூர், திருப்பூர், சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு பெரம்பலூர் நோக்கிப் புறப்படும். பெரம்பலூரில் ஆக.26இல் மாநாடு நிறைவு விழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 26072018 இதழ்

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...

தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்குக் கொட்டிய ஜாதி வெறியர்கள்

தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்குக் கொட்டிய ஜாதி வெறியர்கள்

பள்ளியில் சமைத்த மதிய உணவை தலித் மாணவி தொட்டு விட்டதாகக் கூறி அதனை நாய்க்குக் கொட்டிய அராஜகம் நடந்துள்ளது. இராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர் கமலா வைஷ்ணவ், தலித் மாணவியை மிக மோசமான முறையில் திட்டி அவமானப்படுத்தியதுடன், தலித் மாணவி தொட்ட உணவு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, உணவு முழுவதையும் நாய்க்குக் கொட்டி யுள்ளார். பள்ளி உதவியாளரின் இந்த தீண்டாமையால் தலித் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனிடையே, மதிய உணவை நாய்க்கு கொட்டப்பட்டதை வீடியோ எடுத்திருந்த ஒருவர், அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியதால்,...

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

திருப்பூர் – கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறையில், 2017 ஜூன் 11, 12 தேதிகளில் நடத்திய பெரியார் பயிலரங்கில் வினோதினி – மணி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். முதலாம் ஆண்டு மணவிழாவின் மகிழ்ச்சியாக பெரியாரியல் பயிலரங்கை நடத்த விரும்பி அதற்கு நிதி உதவி அளிக்க வினோதினி முன் வந்தார். ஏற்கனவே ஜாதி மறுப்பு திருமணம்செய்து கொண்ட கோவை கழக இணையர்கள் நிர்மல் – இசைமதி மணவிழா நாளும் ஏறத்தாழ இதை ஒட்டியே வருவதால் தோழர் நிர்மல், பயிலரங்கத்துக்கு தங்கள் மணவிழா மகிழ்வாக நிதி உதவி செய்ய முன் வந்தார். உடனே பயிலரங்கம் ஏற்பாடானது.  பொள்ளாச்சி கழகத் தோழர் வெள்ளியங்கிரி இத் தகவலை பலத்த கரவொலிக்கிடையே பயிலரங்கில் அறிவித்தார். கழகத் தோழர் கோவை நிர்மல், “இனி ஒவ்வொரு ஆண்டும் மணவிழா நாளில் இத்தகைய பயிலரங்கை வினோத்-மணி இணையருடன் இணைந்து நடத்துவோம்”...