மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடு களுக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக

ரூ. 355 கோடியே 78 லட்சம் செலவாகி இருப்பதாகவும் பிரதமர்அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந் தது. இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி, 2014 முதல் கடந்த நான்காண்டுகளில் 84 நாடுகளை சுற்றி வந்திருப்பதாகவும், இதற்காக சுமார் ரூ. ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி மொத்தம் 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை சுற்றி வந்துள்ளார். 2015-16இல் மட்டும் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2016-17இல் 18 நாடுகளுக்கும், 2017-18இல் 19 நாடுகளுக்கும் பயணம் செய்துள் ளார்.இதற்காக 2014-15இல் ரூ. 93 கோடியே 76 லட்சமும், 2015-16இல் ரூ. 117 கோடியும், 2016-17இல் ரூ. 76 கோடியே 27 லட்சமும், 2017-18இல் ரூ. 99 கோடியே 32 லட்சமும் செல விடப்பட்டு உள்ளது. அதாவது, 2014 ஜூன் 15 முதல்2018 ஜூன் 10 வரை பிரதமர் மோடி விமானத்தில் பய ணம் செய்த வகையில் ரூ. 387 கோடியே 26 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானத்தைப் பராமரிக்க கடந்த4 ஆண்டுகளில் ரூ. ஆயிரத்து 88 கோடியே 42 லட்சம் செலவாகியுள்ளது; பிரதமர் மோடி மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்காகத் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட ஹாட்லைனுக்காக ரூ. 9 கோடியே 12 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று வி.கே. சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, மோடி சுற்றிப்பார்த்த நாடுகளின் எண்ணிக்கை, இன்னும் சில நாட்களில் 87 ஆக உயரப்போகிறது. அவர் ஜூலை 23 முதல் 27 வரை ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, தென்னாப் பிரிக்கா, ருவாண்டா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எப்படி யும் ஆட்சி முடிவதற்குள் ‘சதம்’அடித்து விடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பெரியார் முழக்கம் 02082018 இதழ்

You may also like...