சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!
இந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர் களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டுவரவேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத்துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார் ராம்தேவ் அமர வைக்கப்பட் டுள்ளார். ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது. சூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும் நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன. முக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில்...
