“தி.வி.க. பெரியார் செயலி” அறிமுகம் : திருப்பூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் காமராசர் 116ஆவது பிறந்த நாள் விழா, ஜூலை 15, 2018 அன்று திருப்பூர் இராயபுரம் திருவள்ளுவர் வீதியில் சிறப்புடன் நடந்தது. காலை முதல் பகுதி வாழ் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலைப் பொதுக் கூட்டம், ‘நிமிர்வு’ கலைக் குழுவின் பறை இசை நிகழ்வோடு தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட பெண், ஆண் கலைஞர்கள் பறை வரலாற்று விளக்கங்களோடு பறையிசை நிகழ்வை நடத்தியது, மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
க. கருணாநிதி தலைமையில் சு. நீதியரசன் வரவேற்புரை யோடு பொதுக் கூட்டம் தொடங்கியது. செல்லதுரை (தே.மு.தி.க.), இராமகிருஷ்ணன், ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி உரை யாற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பகுதித் தோழர்கள் சரவணன் (தி.மு.க.), சரவணன் (ம.தி.மு.க.), சாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பேருதவி புரிந்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்திகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவரையும் சென்றடைய இணையதளம் dvkperiyar.com மற்றும் முகநூல் பக்கம் facebook.com/dvk12 ஆகியவற்றோடு புதியதாக செயலி DVK Periyar என்ற பெயரில் திருப்பூர் கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
கழகத் தலைவர் வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் பெற்றுக்கொண்டார். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இயங்கும் இந்த செயலி (application) தி.வி.க.வின் செய்திகளை உடனுக்குடன் அறியும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது.
கழக இணையப் பொறுப்பாளர் விஜயகுமார், சொந்த முயற்சியில் இதை உருவாக்கியுள்ளார்.
பெரியார் முழக்கம் 19072018 இதழ்