Category: பெரியார் முழக்கம்

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர்...

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்கும் அதுஅதிகாரத்தைக் கைப்பற்று வதற்கும் உதவியது என்று ‘தினமலர்’ நாளேடு எழுதியுள்ளது. அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.க.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரச்சாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி உருவாக்கிய இயக்கம், ‘கோவில் கட்ட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.க.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ.க., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்: 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை...

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அ றிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன) பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது  சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்...

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரும், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாடு போன்ற துறைகளில் பெரும் பங்காற்றி வருபவருமான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் (ஆ.சி.) அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (னு.டுவை.) வழங்கப்பட்டது. 22.10.2019ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் ஆ.சி.க்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. தமிழியல் ஆய்வுப் புலத்தில் 50 ஆண்டு கால அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்ந்த களஆய்வு, பரந்தபட்ட நூலறிவு, அறிஞர்களுடன் நடத்தும் விவாதங்கள், உழைக்கும் மக்கள் சார்பு ஆகியவை அவருடைய தனித்தன்மை. எந்த விருதையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருக்கு கல்விப்புலம் சார்ந்த இவ்விருதினை வழங்குவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துக் கொண்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.  பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆ. சிவசுப்பிரமணியன் 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தமிழியல்...

கழக ஏட்டிற்கு நன்கொடை

கழக ஏட்டிற்கு நன்கொடை

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் – தமிழன்பு இணையர் தங்கள் மகள் இளந்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு  ரூ.1500/- நன்கொடை அளித்துள்ளனர். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். திருவள்ளுவருக்கு ‘காவி அடையாளம்’ தந்து ஒரு பா.ஜ.க. பிரமுகர் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த சிலை அவமதிப்பு நடந்திருக்கிறது. திருவள்ளுவர் ஓர் இந்து என்றும், திருக்குறள் இந்து மத நூல் என்றும் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருகிறார்கள். திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; இறந்து போன சந்திரசேகரேந்திர சரசுவதி என்ற காஞ்சி மூத்த சங்கராச்சாரி என்ன கூறுகிறார்? “அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை  அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித் தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை… வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள் விஷ்ணு சாமியே அல்ல, சிவன்தான் சாமி, விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்....

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் எவருக்கு உரிமை உடையது என்பது குறித்து தீர்ப்பை வழங்க இருக்கிறது. தீர்ப்பு வருவதால் நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகாமல் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் நடக்கின்றன. தமிழக முதல்வரை அழைத்தும் ஆளுநர் பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டாட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்று சங்பரிவாரங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் நடத்திய இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அயோத்திப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால வரலாறுகள் ஓர் உண்மையை உணர்த்துகின்றன. நீதி – சட்டம் என்ற அமைப்புகளை முடக்கி ‘கும்பல் வன்முறைகளே’ தீர்மான சக்திகளாக செயல்பட்டிருக்கின்றன. 1949ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, இராமன், சீதை பொம்மைகளை மசூதிக்குள் போட்டு மசூதி சுவரில் இராமன் உருவத்தை படமாக வரைந்தார்கள். அப்போதே அத்துமீறி நுழைந்த குற்றத்தின் கீழ்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

யாரெல்லாம் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள் என சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு பாடும் பார்ப்பனர்கள் எல்லாம்  ஜாதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். பெரியார் குறளை எதிர்த்தார் என்று திரிபுவாதம் பேசும் பா.ஜ.க. – சங் பரிவாரங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை சரியான பதில் அளித்திருக்கிறது. வள்ளுவர் – ஓர் இந்து; திருக்குறள் – ஓர் இந்து மத நூல் என்று இப்போது பா.ஜ.க.வினர் பேசுவதற்கு முன்பாகவே அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: பெரியாரை தமிழின விரோதி, தமிழ் மொழி விரோதி, தமிழ் இலக்கிய விரோதி என்று ஒரு கூட்டம் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிற வேளையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டைப் பற்றி, அதனுடைய விளக்கக் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 1949இல் பொங்கலை ஒட்டி நடந்த 2 நாள் திருக்குறள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

நீலச் சட்டைப் பேரணி  டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

நீலச் சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

கோவையில், புரட்சியாளர்  அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க உள்ள  நீலச்சட்டைப் பேரணிக்கும், சாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைக்கப்படும் தலைவர்களின்  நாள் ஒதுக்கல் போன்ற சில காரணங்களால்,  கோவை நீலச்சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் நாள் என இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 2019, டிசம்பர் 22 என மாற்றிப் பதிவிடுமாறும், பயண ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 31102019 இதழ்

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

கீழடியிலும் சிந்துவெளியிலும் விளையாட்டுப் பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து  பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசினார். அவரது பேட்டியிலிருந்து: கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட் டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004இல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரிய வில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது....

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும். ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான  மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை...

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 16.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் ஓ.டி முருகன் கோவில் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா –  திருக்குறள் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ,  தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர், சௌ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இல.குமார் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அ.சி.சின்னப்பத் தமிழர் (தமிழ்வழிக் கல்வி இயக்கம்), ஆவடி நாகராசன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சிவ செந்தமிழ்வாணன் (தமிழ் தேசக் குடியரசு இயக்கம்), க.சூரியா (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), என்.கே.மூர்த்தி (டாக்டர் கலைஞர் பத்திரிக்கையாளர் சங்கம்), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக பூ.இராமலிங்கம், (திராவிடர் கழகம்) ...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

  09.10.2019 அன்று ஜாதி  ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை யொட்டி  பரமக்குடி யிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செய லாளர் சந்திர போஸ் ஆகியோர் காலை 10:30 மணிக்கு புகழஞ்சலி செலுத்தினர். உடன் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி, ஆய்வு மாணவர் மாளவிகா, பொன்னான்டி உள்ளிட்ட மதுரை மாவட்டக் கழகத்  தோழர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு  தியாகி இமானுவேல் பேரவை மானாமதுரையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜாதி ஒழிப்பு கருத்தரங்’கிற்கு  தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், கழகத் தலைவர் கொளத்தூர்...

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

கிராமப்புற மாணவர்களை பயற்சிக் கல்லூரி நோக்கி துரத்துகிறது ‘குரூப் 2’ தேர்வுக்கு தமிழ் வினாத்தாள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வினாத்தாள் நீக்கப்பட்டாலும் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு இடம் பெற்றுள்ளது என்றும் ஆழமான தமிழ் அறிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் விளக்கம் தந்துள்ளது. சரி… புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது…? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான். ஆனால், தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இனி தமிழில் அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெற முடியாது இதனால் அதிகம்...

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

புரட்சிகர சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை நகர்ப்புற தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி ஓராண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது மோடி ஆட்சி. ஹிட்லர் ஆட்சியில் நடந்த அதே அடக்குமுறைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன. “புனே அருகே பீமா-கோரேகான் பகுதியில் மாவோயிஸ்ட்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புலனாய்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரதமரைக் கொலை செய்யும் முயற்சி யில் பங்கிருக்கிறது,” இப்படி சொல்கிறது காவல் துறை. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ் உள்ளிட்ட 9 செயல் பாட்டாளர்கள், கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். பேஷ்வா பார்ப்பனர்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட...

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

கொங்கு மண்டலத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்த தூண்களில் ஒருவரான மு. கண்ணப்பன் வரலாறு நூலாக வெளி வந்திருக்கிறது. 39 தலைப்புகளில் ஏராளமான தகவல்களைத் திரட்டி சுவைபட எழுதியிருக்கிறார், நூலாசிரியர் வழக்கறிஞர் ஒ. சுந்தரம். மு. கண்ணப்பன், இயக்கத்தில் மாணவப் பருவத்திலே இணைத்துக் கொண்டு 23 வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவராகி, 1953லேயே இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மாணவர்களைத் திரட்டிப் போராடி பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 1956ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, ‘தி.மு.க. தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டுமா?’ என்று நடத்திய வாக்கெடுப்பில், போட்டியிடக் கூடாது என்று வாக்களித்த 4203 தோழர்களில் மு. கண்ணப்பனும் ஒருவர்.  ‘ஓட்டுக்காக இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று, தான் கருதியதாக மு. கண்ணப்பன் கூறுகிறார். 1962இல் அண்ணா அறிவித்த விலைவாசி உயர்வு எதிர்ப்புக்கான மறியலில் பங்கேற்று, 4 மாத...

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

புதுடில்லியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து, அக்.9 முதல் ‘சதுர்வேதா சாவர்க்கர் மகாயக்ஞா’ என்ற யாகம் நடத்தியுள்ளனர். நான்கு வேதங்களைப் பரப்புவதற்கு இந்திய நாகரிகம் வேத நாகரிகமே என்பதை உணர்த்தவும், வீட்டு நிகழ்வுகளில் வேத சடங்குகளைப் பின்பற்ற வைக்கவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித் துள்ளது. மத்திய அமைச்சர் இதில் பங்கேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்ற பாரம்பரிய  அமைப்பு, வேதகலாச்சார அடிப்படையிலான இந்து தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களை உறுப்பினராக சேர்க்க ஆர்.எஸ்.எஸ். மறுத்து வருவதோடு அதன் துணை அமைப்புகள் எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதப் பெயரையே சூட்டியுள்ளது. 1939ஆம் ஆண்டு வரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்து வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிறகு இதை பார்ப்பனர்களின் “தெய்வீக மொழி”யான சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை...

டிசம்பர் 22 – கோவையில்  நீலச் சட்டைப் பேரணி

டிசம்பர் 22 – கோவையில் நீலச் சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 22 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20.10.2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க,  உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம். கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் டிச 15 இல் இருந்து டிச 22 ஆக மாற்றப்பட்டுள்ளது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு – ஒரே சந்தை – ஒரே வரி’ என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, ‘ஒரே நாடு – ஒரே ஆட்சி’ என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவே இருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்பவைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு- கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கிவருகின்றன. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லா வற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது...

தேசத் துரோக வழக்கு:  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி கண்டனம்

தேசத் துரோக வழக்கு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: தனி மனிதர்கள் மீது மதத்தின் பெயரால் கும்பலாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காந்தியாரைக் கொன்ற கோட்சேயை புகழ்ந்து தென்னாட்டுக் கோட்சே என்று எச்.இராஜாவிற்கு சுவரொட்டி அடிக்கப்படுகிறது. எது தேசதுரோகம் என்று தெரியாத நிலை உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரிகம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத் தொல்லியல் துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம் பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7...

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

கற்றலும் கற்பித்தலும் இனிமையான மகிழ்வூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும் என்று நாம் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுமே ‘தேர்வு’ என்ற ஒற்றைச் சொல்லால் முறியடிக்கப்பட்டு விடுகிறது –  பேராசிரியர் யஷ்பால் (யஷ்பால் குழு அறிக்கை, 1993 – முன்னுரை) ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. (தற்போது 3 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு எனக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்). இந்த அறிவிப்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உலகில் எங்குமே இல்லாத பேரிடரை நமது மண்ணில் செயற்கையாக உருவாக்கும் பின்விளைவைக் கொண்டது. பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எனும் ஒரே தேர்வை முன்பு ஆங்கிலேய அரசு வைத்திருந்தது. அதை முடித்தால் கல்லூரி (பி.யூ.சி.) போய்விடலாம். ‘கோத்தாரி கல்விக் குழு’ பி.யூ.சி.யை மேல்நிலை வகுப்பாக்கிப் பள்ளிக் கல்வியில் இணைத்தபோது பிளஸ் 2 தேர்வு உருவானது. இப்படியாக, பள்ளியில் இரண்டு பொதுத்...

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி)நேரலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக தனியார்அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் என அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அப்படியிருந்தும், அண்மையில் சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடி பங்கேற்றபட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தொடக்க நாள்,விஜயதசமி நிகழ்ச்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே. சிங் ஆகியோரும், கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந் தினராகவும் கலந்து...

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு  அவமானம்!

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு அவமானம்!

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டம் கருத்து உரிமையைப் பறிக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் வைகோ மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்தது. கலைஞர்கள், ஆய்வாளர்கள் என்று 49 பேர் பிரதமருக்கு, கும்பல் கொலையைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கடிதம் எழுதிய ஆளுமைகள் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால், பழமையான அந்தக் காலனிய சட்டத்தின் மீது மறுபடியும் வெளிச்சம் விழுந்திருக்கிறது. தேசத் துரோகச் சட்டமானது அரசியல், கலாச்சார ரீதியான எதிர்ப்பை ஒடுக்கு வதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நுழைக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கையை அல்லது வெறுப்பைப் பரப்புவதைக் குற்றமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தி, பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. வைகோவுக்கு எதிராக மட்டுமல்ல, சமீப காலம் வரை அது தொடர்ச்சியாகப் பலர் மீது...

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

குஜராத் மாநிலம் சபர்மதியில் 1917 முதல் இயங்கிவரும் காந்தி ஆசிரமத்தை, குஜராத் பாஜக அரசு கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இது ஆசிரமத்தை சீர்குலைக்கும் செயல் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், ஆசிரமம் அமைந்துள்ள 32 ஏக்கர் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சூறையாடும் திட்டமும் இதன் பின்னணியில் இருப்பதாக காந்தியவாதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடந்த 1917-ஆம் ஆண்டு, குஜராத்மாநிலம் சபர்மதியில் அமைக்கப்பட்டது,சபர்மதி ஆசிரமம் ஆகும். இது அன்றையகாலத்தில் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. மயானம் மற்றும் சிறைச்சாலைக்கு இடையிலான தரிசு நிலத்தில், அமைக்கப்பட்டிருந்த இந்த ஆசிரமத்தில், மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை வசித்து வந்தார். காந்தியின் படுகொலைக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில், ஒரு மேல்நிலைப்பள்ளி, தலித் பெண்கள் தங்கும் விடுதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. குஜராத் காந்தி கிராமத்யோக் சார்பில்கதர்த் துணிகள் உள்ளிட்ட பல்வேறுகைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன்,...

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...

ஓம் ‘ரபேல்’ நமஹ!

ஓம் ‘ரபேல்’ நமஹ!

பிரான்ஸ் துறைமுக நகரான போர்டோவில் பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் விஜயதசமி. முதல் ரபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் எப்படி பெற்றுக் கொண்டார்? விமான டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வைத்தாராம். இந்தி மொழியில் ‘ஓம்’ என்று விமானத்தில் எழுதி பூஜை செய்திருக்கிறார். “உள்ளே இருக்கிற 250 ‘ஸ்பேர்பார்ட்ஸ்’ல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம் பழத்திலேயடா, ஓடப் போவுது?” என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் கேட்பார். பிரான்ஸ் தேசத்தில் விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் இந்தக் காட்சியைப் பார்த்து திக்குமுக்காடியிருப்பார்கள். தேங்காய், பூ, எலுமிச்சை எல்லாம் ரபேல் போர் விமானத்தைவிட சக்தி வாய்ந்ததா? இது என்ன புதிய கதை என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். சரசுவதி பூஜையின்போது குழந்தைகள் பாட நூல்களை வைத்து பூஜை செய்யச் சொல்லுவார்கள்....

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 8.10.2019 அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் கீழ் நாஞ்சில் நாடு பகுதியிலுள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. குடந்தைப் பகுதியில் கழகத்தில் இணைந்த தோழர்கள் தரங்கம்பாடி நன்னிலம் பகுதி மற்றும் மயிலாடுதுறைத்  தோழர்கள் ஆதரவாளர்கள் 68 பேர் கலந்து கொண்டனர். பெரியார் யுவராஜ் கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் இளைய ராஜா பயிற்சி முகாம் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  தஞ்சை தோழர் பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் அணுகுமுறை பெரியார் இயக்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து  வகுப்புகள் எடுத்தனர். பயிற்சியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்கமாக பதில் அளித்தனர். மாலை 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்தது. மயிலாடுதுறை...

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக்கிடக்கிறார்கள் தொழிலாளர்கள். ‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’ மேற்கு...

நன்கொடை

நன்கொடை

கழகத் தோழர் பெரியார் யுவராஜ்-லீலாவதி, ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு மணவிழா மயிலாடுதுறையில் செப்.22 2019இல் நடந்தது. மண விழா மகிழ்வாக, மணமக்கள் கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.5000 நன் கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிய காந்தி, ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இளம் வயதிலிருந்தே மீறி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை காந்தி பிறந்த ஜாதி தடை செய்திருந்தாலும், காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். அவரது சொந்த ஜாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். “ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் போவதாக – ஜாதித் தலைவர்கள் கூறினாலும், அப்படி விலக்கினாலும் எனது வெளி நாட்டுப் பயணத்தைத் தடுக்க முடியாது” என்றார் காந்தி. பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny).” அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி...

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் (சூத்திரர் தவிர) மேலே உள்ள மூன்று வர்ணப் பிரிவினரும் பூணூல் போடும் உரிமை பெற்றவர்கள். காந்தியும் இளம் வயதில் அதற்குரிய சடங்குகள் நடத்தப்பட்டு ‘பூணூல்’ போடப்பட்டவர்தான். இது குறித்து தனது சுயசரிதையில் “நானும் பூணூல் போட் டிருந்தேன். அந்தப் பூணூல் தொலைந்து போனபோது அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் வரவில்லை. ஆனால் புதிய பூணூலை அணிவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும் (But I know that I did not go for a fresh one). காந்தியின் குடும்பம் வைசியர் பிரிவு. கழுத்தில் துளசி மாலை அணிவது கட்டாயம். “நான் இங்கிலாந்து போக முடிவு செய்தவுடன், துளசி மாலையை கழற்றிவிட்டேன்”. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் துளசி மாலையை அணியும் பழக்கத்தை காந்தி கைவிட்டு விட்டார். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150  ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

காந்தி 150 ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங் கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார்.  அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி என்னை யாரும் – எனது கருத்துகளிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. (The Vedas could not supply that need). “எனக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த...

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் – இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்: ‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple)...

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு: “இப்போது நடந்து முடிந்துள்ள இத் திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் (The rule should be on the part of the Ashramam to discountenance marriage between the parties of the some caste and to encourage those...

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் – மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரி லுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதி யினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். “தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் – ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு உட்ஜாதியில் திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார்....

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்று அரசாணை உள்ளது. எனவே அந்த அரசாணையை அரசு அதிகாரிகள் முறையாக காப்பாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  5.10.2019  அன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  கழகத் தோழர்கள்  நிர்மல், வெங்கட், கிருஷ்ணன், இயல் ஆகியோர் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

மதத்தின் பெயரால் நடத்தப்படும் கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி திரைத் துறை, கலைத் துறையைச் சார்ந்த 42பேர் மோடிக்கு கடிதம் எழுதியதால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் ‘தேச பக்தர்கள்’ எப்படி பேச வேண்டும்? இப்படித்தான்! டிசம்பர் 31, 2021க்குள் இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜேஸ்வர் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் “இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களையும் ஒழித்து விடுவோம்; இது நாங்கள் எடுத்துள்ள உறுதி” என்றும் அவர் பேசியுள்ளார். மேற்கு உ.பி.யில் வாழும் இவர் தொடர்ந்து இனவெறுப்பு இன அழிப்புக் கருத்துகளைப் பேசி வருபவர். ‘லவ் ஜிகாத்’ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் இவரைத் தான், மீண்டும் “தாய் மதம் திரும்புதல்” என்ற இயக்கத்துக்கு  ஆர்.எஸ்.எஸ். தலைவராக நியமித்தது. ‘தர்ம ஜக்ரான் சமிதி’ என்ற அமைப்பின்...

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும்  7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சுமார் 400 நாட்கள் ஓடிவிட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சரவைக்கு  அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக்கிய பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு அது. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடன்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது. தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தன்னிச்சையாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட அனுமதித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கான உரிமைஅமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஆளுநரின் முடிவை நிறுத்தியது. அதற்குப் பிறகு தி.மு.க. அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது ஆளுநர் பாத்திமா பீவி அதற்கு ஒப்புதல் வழங்கினாரே தவிர, தற்போது ஆளுநர் செய்ததுபோல் கிடப்பில் போடவில்லை. காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் 617 சிறைவாசிகளை விடுதலை செய்ய...

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை...