காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்
சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு:
“இப்போது நடந்து முடிந்துள்ள இத் திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் (The rule should be on the part of the Ashramam to discountenance marriage
between the parties of the some caste and to encourage those between parties belonging to different sub-castes).”
1945 ஆகஸ்டு 19ஆம் தேதி காந்தி ‘சேவா கிராம ஆஸ்ரமத்தில்’ ஏ.ஜி. டெண்டுல்கர் என்ற பார்ப்பனருக்கும், இந்துமதி என்ற ‘தீண்டப்படாத’ப் பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைத்தார். காந்தி ஆஸ்ரமங்களில் ஒரே சமையல் அறைதான். ஒரே வரிசையில் அமர்ந்து அனைவரும் சாப்பிடுவர்.
பெரியார் முழக்கம் 10102019 இதழ்