‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

கிராமப்புற மாணவர்களை பயற்சிக் கல்லூரி நோக்கி துரத்துகிறது

‘குரூப் 2’ தேர்வுக்கு தமிழ் வினாத்தாள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வினாத்தாள் நீக்கப்பட்டாலும் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு இடம் பெற்றுள்ளது என்றும் ஆழமான தமிழ் அறிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

சரி… புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது…? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான்.

ஆனால், தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இனி தமிழில் அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெற முடியாது இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, அநேகமாக, தமிழ் வழிப் பயின்ற கிராமத்து இளைஞர்கள்தாம். இதுதான், மறுபக்க உண்மை.

இவ்விரு உண்மைகளையும் சமன் செய்து பார்த்து, பாடத் திட்ட மாற்றம் குறித்த தீர்ப்புக்கு வருவதுதான் நியாயம் ஆகும். பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி’ கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.

முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமத்து எல்லைகளைத் தாண்டிச் செல்லாதவர்கள், கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலக வாசற் கதவுகளில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிற சாமான்யர்களின் பிள் ளைகள், கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். இது, மாற்றம் அன்று; மிகப் பெரிய ஏமாற்றம்.

பொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) – 10 அலகுகள் கொண்டுள்ளது.

பொது அறிவியல் பகுதியில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் – கடைசி இடம் பிடித்து இருக்கிறது.

இந்தியாவின் புவியியல் – போக்குவரத்து – தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் – குறிப்பாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல் பயனுள்ள பல தலைப்புகள் உள்ளன.

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் – தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் – மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

முதன்மைத் தேர்விலும் இந்தப் பாடங்களே இடம் பெற்றுள்ளன. ஆனால் கடுமையான ‘சுமைகள்’ மாணவர்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் – வெறுமனே ‘நிர்வாகம்’ அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்!’ என்று ஒரு தலைப்பு – ‘தமிழகத்தில் மின்னாளுகை!’ குறித்து ஒரு தலைப்பு.

இடையே, நடப்பு நிகழ்வுகள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் தமிழ்த் தேர்வு எழுத வேண்டும். இவை முறையான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை. கிராமப்புற சாமான்ய இளைஞர்களுக்கு இது பெரும் சுமை.

இந்திய ஆட்சியியல் – லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியனவும் அடங்கும். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்’’ஆகாதவை.

‘விரிவான எழுத்துத் தேர்வு’ பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி தருகிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்’, ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்’ எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்?

தமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா?

தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசு வதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன…? பக்கத்தில் ஒரு தமிழ் – ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா..? இல்லைதானே…? பிறகு…? நம்முடைய பார்வையில், தமி ழக அரசுப் பணிக்கான போட்டித் தேர் வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது. ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. நம்முடைய கிராமத்து இளைஞர்கள் இதனால் எவ்வளவு தடைகளை சந்திப்பார்கள்?

ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளையே தக்க வைத்து இருக்கலாம். அல்லது தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி’ மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்’ அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.

‘உள்ளூர் மொழியில் உலக அறிவு’ என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்’ திசையில் பயணித்து இருக்கிறது.

கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை. ‘வழிகாட்டுதல்’ தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.

புதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி….?

‘வடிகட்டுகிற’ பணிதான் ஆணையத் தேர்வுகளின் பிரதான நோக்கம். ‘தேர்வு செய்வது’ அல்ல.

– கல்வியாளர்

பெரியார் முழக்கம் 24102019 இதழ்

 

You may also like...