நீலச் சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்
கோவையில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க உள்ள நீலச்சட்டைப் பேரணிக்கும், சாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைக்கப்படும் தலைவர்களின் நாள் ஒதுக்கல் போன்ற சில காரணங்களால், கோவை நீலச்சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் நாள் என இறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் 2019, டிசம்பர் 22 என மாற்றிப் பதிவிடுமாறும், பயண ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் 31102019 இதழ்