அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்
ஓபிஎஸ் யும், இபிஎஸ் யும் அஇஅதிமுகவை தமிழ்நாடு பாஜகவிடம் விலை பேசி கொண்டிருக்கும் போது முதுகெலும்புடன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் அக்கட்சியின், முன்னாள் அவைத் தலைவர் பொன்னையன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ‘அஇஅதிமுகவை பலியாக்கி தமிழ்நாட்டில் தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறது பாஜக’ என்று கூறியவர் அதன் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கோ, அஇஅதிமுகவிற்கோ, திராவிடக் கொள்கைக்கோ நல்லது அல்ல. என்று கூறியுள்ளார். கட்சியின் தொழில்நுட்ப அணி பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக இரட்டை வேடம் போடுவதையும், தமிழ்நாடு பாஜக கள்ள மவுனம் சாதிப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏதோ மக்கள் பிரச்சனையில் கவலை உள்ளவர் போல தினமும் நாடகம் நடத்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அக்கட்சியின் உண்மையான முகம் என்பதோ வேறு. பார்ப்பனியத்தையும், மதவெறியையும் பாதுகாப்பது தான் பாஜக வின் உண்மையான முகம். காசியிலும், மதுராவிலும் உள்ள...
