தமிழில் பெயர்கள்
2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்ப்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அதுபோலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தால் அதிலே மதக் கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர சோழ பாண்டியர்கள் என்பவர்களான முற்ப்பட்ட மூவேந்தர் களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை. நாளாக ஆக மத ஆதிக்கம் குறைந்துவிட்டது.
மேல்சாதியினர் இராமன், கிருஷ்ணன், இலட்சுமி, பார்வதி என்று வைத்துக் கொண்டனர். கீழ்சாதியினர் கருப்பன், மூக்கன், வீரன், கருப்பாயி, காட்டேரி, பாவாயி, என வைத்துக் கொண்டனர். கீழ் சாதியினர் சாமி, அப்பன் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. சாமி, அப்பன் என்று கீழ் சாதியினர் பெயர் சூட்டினால், அவரை உயர்சாதியினர் சாமி என்று அழைக்க வேண்டி வரும், அதனால் அப்படிச் சென்னார்கள். அதை மீறி இராமசாமி, கந்தசாமி என்று யாராவது பெயர் வைத்திருந்தால் அவரை ராமா, கந்தா என்று அழைத்தார்கள்.
விடுதலை 24.03.1953
பெரியார் முழக்கம் 24022022 இதழ்