பொது நன்மைக்குப் பாடுபடுபவர்கள் யார்?

நான் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். பொதுவாழ்வில் எந்தவிதமான இலாபத்தையும் கருதாமல், எந்தப் பெருமையும், சட்டசபை, ஜில்லாபோர்டு என்பதாக எதையும் கருதாமல் கை நட்டப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு உள்ளதையும் விட்டுவிட்டு, உள்ளபடி, பொதுநன்மை என்கிறதையே இலட்சியமாக கொண்ட யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகத்தார் என்கிற இந்த ஒரு கழகத்தாரைத் தவிர வேறு யாருமேயில்லை. மற்றவர்களெல்லாம் பாடுபடுகிறார்களென்றால் அந்தப் பாட்டை எலெக்ஷனுக்கும் மற்ற வாழ்வுக்கும் கொண்டுபோய் விற்று விடுகிறார்கள்; பலர் அதனாலேயே வயிறு வளர்க்கிறார்கள். மற்றும் எடுத்துப்பாருங்கள், ஒவ்வொருவரும் பொதுவாழ்வுக்கு வந்த போது அவர்களுக்கிருந்த யோக்கியதை, அந்தஸ்து, செல்வம் முதலியவைகளை அவர்கள் இன்றைக்கு இந்த பொதுவாழ்வின் பெயரால் எல்லாத் துறைகளிலும் எத்தகைய பெருமையான வாழ்வு நடத்துகிறார்கள் என்பவைகளை !

– பெரியார் – புரட்சிக்கு அழைப்பு 1954

 

பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

You may also like...