பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்
ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங் களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து… தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் – அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது. பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக்...
