தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழகத்தின் மாத இதழான ‘நிமிர்வோம்’ இரண்டாவது இதழ் (பிப்ரவரி) வெளி வந்து விட்டது.

இதழுக்கான பதிவு – அஞ்சல் கட்டணச் சலுகைகளுக்காக செய்யப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகின்றன. அஞ்சல் கட்டண சலுகைக்கான அனுமதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். இப்போது ஓர் இதழை அஞ்சல் வழியாக அனுப்பிட முத்திரைக் கட்டணமாக ரூ.8 செலுத்த வேண்டும்.  நடைமுறையில் இது இதழ் தயாரிப்புக்கான செலவுகளை சுமையாக்கி விடும்.

எனவே, கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது.

எனவே தோழர்கள், கூடுதல் எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று விற்பனை செய்ய தலைமைக் கழக முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– நிர்வாகி, ‘நிமிர்வோம்’

பெரியார் முழக்கம் 16022017 இதழ்

You may also like...