‘திராவிடர் விடுதலைக் கழகம்’ அமைப்புக் கூட்டங்கள் எழுச்சி நடை

‘திராவிடர் விடுதலைக் கழக’ம் தொடங்கியவுடன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டலம் வாரியாக கழக அமைப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் உற்சாகத்துடன் கூட்டங்களில் பங்கேற்று வரு கின்றனர். ஆக. 12 ஆம் தேதி அமைப்பு தொடங்கியவுடன்,

ஆக. 17 ஆம் தேதி நெல்லையிலும், ஆகஸ்ட் 18 இல் காலை திண்டுக்கல்லி லும்  மாலை திருச்சியிலும் மண்டல அமைப்புக் கூட்டங்கள் நடந்தன. மாவட்டக் கழகம், ஒன்றிய கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

17.8.2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, பாளையங் கோட்டை ஆதி திராவிடர் மகாசன சங்க கட்டிடத்தில், திராவிடர் விடுதலைக் கழக நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. மாநில பரப்புரை செய லாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நெல்லை மண்டல அமைப்புச் செய லாளர் குமார் வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன் ஆகியோர் உரை யாற்றினர். தோழர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இறுதி யாக கீழ்க்கண்டவர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

குமரி மாவட்ட பொறுப் பாளர்கள் : தலைவர் – சூசையப்பா; செயலாளர் வழக்குரைஞர் வே. சதா; பொருளாளர் – பேபி ஜெயக்குமார்; அமைப்பாளர் – சேவியர்.

திருநெல்வேலி மாவட்டம் : அமைப்பாளர் – சி.ஆ. காசிராசன்; மாவட்ட துணை அமைப்பாளர் – கீழப்பாவூர் அன்பரசு; தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் – கருப்பசாமி.

தூத்துக்குடி மாவட்டம் : தலைவர் – பொறிஞர் சி. அன்புரோசு; துணைத் தலைவர் – வே. பால்ராசு; செயலாளர் – க. மதன்; துணைச் செய லாளர் – ச.கா. பாலசுப்பிரமணியன்; பொருளாளர் – ரவிசங்கர்.

தூத்துக்குடி மாநகர் பொறுப் பாளர்கள் : தலைவர் – சா.த. பிரபா கரன்; செயலாளர் – பால். அறிவழகன்; பொருளாளர் – அமிர்தராசு; கழுகு மலை ஒன்றிய அமைப்பாளர் – கனகராசு; திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் – சந்தனராஜ்; ஆழ்வை ஒன்றிய தலைவர் – நாத்திக முருகேசன்; ஆழ்வை ஒன்றிய செயலாளர் – இரா. உதயக்குமார்.

திண்டுக்கல்லில்

18.8.2012 சனிக் கிழமை அன்று காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி சி.எம். மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழக மதுரை மண்டல கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந் திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக்கண்ணன், மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் இராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் : தலைவர் – க. பெரியார் நம்பி; செயலாளர் நா. நல்ல தம்பி; அமைப்பாளர் – விஜி; தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப் பாளர் – ஜவகர்.

பழனி ஒன்றியம் : தலைவர் – மா. முருகன்; செயலாளர் – சி. கருப்புச் சாமி; அமைப்பாளர் – அ.இளங் கோவன்; துணைத் தலைவர் – மகுடீஸ்வரன்; துணைச் செயலாளர் – முத்துச்சாமி.

பழனி நகரம் :  செயலாளர் – ம. முத்துக்குமார்; அமைப்பாளர் – பத்மநாபன்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம்: தலைவர் – துரை. தங்கவேல்; செய லாளர் சு.சுரேஷ்; அமைப்பாளர் – ரெ. கதிர்வேல்.

ஒட்டன் சத்திரம் நகரம் : தலைவர் – சின்னச்சாமி; செயலாளர் – மூர்த்தி; ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் அமைப்பாளர் – வடிவேல்;  தொப்பம் பட்டி ஒன்றியம் அமைப்பாளர் – மாயவன்; திண்டுக்கல் ஒன்றியம் அமைப்பாளர்  – த. திருப்பதி.

வத்தலக்குண்டு ஒன்றியம் அமைப் பாளர் – ஜெயப்பாண்டி.

தேனி மாவட்டம் : தலைவர் – க. சரவணன்; செயலாளர் – பா.கும ரேசன்.

மதுரை மாவட்டம் : தலைவர் – முருகேசன்; செயலாளர் – பாண்டியன்.

மதுரை மண்டல தமிழ்நாடு மாண வர் கழக அமைப்பாளர் – உதயசங்கர்.

திருச்சியில்

18.8.2012 சனிக் கிழமை அன்று மாலை 5 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அந்தோனியர் அரங்கில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் திராவிடர் விடுதலைக் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக்கண்ணன், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் : மா வட்ட அமைப்பாளர் இரா. காளிதாஸ்

மன்னார்குடி ஒன்றிய அமைப் பாளர் : சேரன் ரமேஷ்

நீடாமங்கலம் ஒன்றிய அமைப் பாளர் – நல்லிக் கோட்டை முருகன்.

கோட்டூர் ஒன்றிய அமைப்பாளர் – பொறியாளர் அணுராஜ்

அரியலூர் மாவட்ட அமைப் பாளர் – திருமானூர் கார்த்தி.

பெரம்பலூர் மாவட்டம் : தலைவர் – துரை. தாமோதரன்; அமைப்பாளர் – பழனி முருகன்;  ஒன்றிய அமைப்பாளர் – செந்தில் குமார். நகர அமைப்பாளர் – இராஜேஸ்குமார்.

தஞ்சை மாவட்ட அமைப் பாளர்: கு. பாரி

திருச்சி மாவட்டக் காப்பாளர் – டாக்டர் எஸ்.எஸ். முத்து; தலைவர் – மீ.இ. ஆரோக்கியசாமி; செயலாளர் – கந்தவேல் குமார்; அமைப்பாளர் –

நா. குணராஜ்; பொருளாளர் – மனோகரன்.

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – செந்தில்

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – ஞான சண்முகம்

திருவெறும்பூர் ஒன்றிய அமைப் பாளர் – இராசு

திருவரங்கம் நகர அமைப்பாளர் – அசோக்

தமிழகம் முழுவதும் அமைப்புக் கான பயணம் தொடர்ந்து நடக்கிறது.

பெரியார் முழக்கம் 23082012 இதழ்

You may also like...