ஆத்தூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

06.01.2017 திங்கள்கிழமை மாலை 5.00 மணியளவில், ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்த தலித் சிறுமி ‘நந்தினி’யை இந்துமுன்னணி கழிசடைகளால் மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதைக் கண்டித்து, ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் ந.மகேந்திரன் தலைமையில் நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் இராமர், சபரிநாதன்,  ஆகியோர் கலந்து கொண்டு நந்தினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்கி கண்டன உரையாற்றினர்.

பிடல் சேகுவேரா ராசிபுரம் பகுதியில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.  சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இறுதியாக ஆத்தூர் தி.வி.க பொறுப்பாளர் கணபதி கூறினார்.

பெரியார் முழக்கம் 16022017 இதழ்

You may also like...