‘மனு சாஸ்திர’ நூலுக்கு விளம்பரம்!

பார்ப்பன பாசிச கருத்தாக்கமான மனுசாஸ்திரத்தை இப்போதும் புதிய புதிய பதிப்புகளாக அச்சிட்டு பார்ப்பனர்கள் பரப்பி வருகிறார்கள். ‘சூத்திர’ இழிவுகளை நிலைநிறுத்தும் இந்த மனுசாஸ்திரத்தை பெருமைப்படுத்தி, ‘துக்ளக்’ ஏடு மதிப்புரைகள் எழுதி வருவதை ஏற்கனவே வெளியிட்டோம். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு ஏடான ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் (ஆகஸ்ட்) மனுதர்ம நூலுக்கு வெளி வந்துள்ள விளம்பரம்:

மனுதர்மத்தை பெருமைப்படுத்தி பார்ப்பனர்கள் எழுதுவதும், அதற்கு விளம்பரம் தந்து புதிய பதிப்புகளை வெளியிடுவதும் வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்; அடிமைகள்; விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்று அச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழன் “சொரணையற்று” குறட்டைவிட்டுத் தூங்குகிறான்!

 

பெரியார் முழக்கம் 23082012 இதழ்

You may also like...