தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “யார் தேச விரோதிகள்” கருத்தரங்கம் 5/2/2017 சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே உள்ள கழக தலைமை அலுவலகத்தில் மாலை 5.45 மணிக்கு துவங்கியது. தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமை தாங்கினார். தேன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விவேக் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர்.

கருத்துரை வழங்கிய தோழர்கள் :- பாரி சிவக்குமார் (அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), அன்பழகன் (‘தேசத்தின் குரல்’ பத்திரிகை), மணி (தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு), இராமசாமி (அகில இந்திய மாணவர் பெருமன்றம்),

வீ. மாரியப்பன் (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்), அப்துல், சிவா ஆகியோர் பேசினர் .

சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் இராமு மணிவண்ணண் பேசியதை அடுத்து, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுமார் 1.30 மணி நேரம் உரையாற்றினர். அருண் நன்றியுரை கூற நிகழ்ச்சி 9 மணிக்கு நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 16022017 இதழ்

You may also like...