Author: admin

தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017

04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 07.04.2017 வெள்ளிக்கிழமை அன்று இரவு 6-00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக்குழுவின் பறை ஜாதிக்கான இசை அல்ல பறை தமிழரின் இசை என்ற முழக்கத்தோடு பறை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நிமிர்வு கலைக்குழுவினர் பறைக்கேற்றவாறு பரதம் ஆடி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து நகர தலைவர் சி.தனசேகரன் தலைமையேற்க,  முருங்கப்பட்டி ரமேசு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. நகர செய்தி தொடர்பாளர்  சி.மோகன்ராஜ் பெரியார் தொண்டர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி குறித்தும் அதை விளக்கியும் உரையாற்ற அவரைத் தொடர்ந்து கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சக்தி பெரியாரியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் உரையாற்றினார். இவர்களைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் சாக்கோட்டை மு.இளங்கோவன், இம்மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  இழிவையும், அடிமைத்தனத்தை யும் ஒழிக்க...

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர். நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து...

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது...

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா? இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சுக் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்....

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஏப்.2ஆம் தேதி மாலை 7 மணியளவில் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி கலந்துரையாடலை ஒருங்கிணைத் தார். தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் சென்னை மாவட்டக் கழக செயல்பாடுகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களை பரப்பும் இயக்கம், பரப்புரைக் கூட்டங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் – இந்து மத எதிர்ப்பு – ஜாதி ஒழிப்புக்காக நடத்திய விவாதங்கள் குறித்து வடசென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவெய்திய கழகத் தோழர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு மாவட்ட கழக சார்பில் ரூ.20,000/- நிதி வழங்கப்பட்டது.  40க்கும் மேற்பட்ட தோழர்கள்...

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானா லும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன...

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017

கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017

திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017

சங்கரன்கோவிலில் 09042017 ஞாயிற்றுக்கிழமை அன்று தோழர் பா.சதாசிவம் அவர்கள் இல்லத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது தோழர்.பால்.பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 14-5-17 அன்று கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நூல் அறிமுகக் கூட்டத்தை சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...

பிராமணியத்தைக் கைவிடாதவர்களை எப்படி உள்ளிழக்க முடியும்?

திராவிடர் கழகத்தை பெரியார் உருவக்கினார், இது ஓர் இயக்கம், திமுகவை அண்ணா உருவக்கினார் அது இயக்கமல்ல ; அரசியல் கட்சி, அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கினார், மதிமுகவை வைகோ உருவாக்கினார்.இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செயல்பகின்றன, பெரியார் இயந்திரங்களோ சாதி ஒழிப்பு சமூக நீதி பெண்ணுரிமைக்காகப் போராடுகின்றன.பெரியாப்பாதையை விட்டு விலகிப்போய் விட்டகட்சிகள் செயல்பாட்டை முன்வைத்து பெரியாரியத்தை விமர்சிக்க கூடாது? பார்ப்பணியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமிர், கிருஸ்தவர்களையும் ஒரே கீழ் கொண்டு வருவதற்கும் பெரியார் தேர்வு செய்த பெயர் திராவிடர் இந்தப் பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளான லும், அதன் கொள்கை அறிக்கைகளிலோ, நடைமுறையிலோ தமிழக உரிமைகள் அல்லாது அண்டை ‘திராவிட” மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கிறது அல்லது தமிழ் மேலாதிக்கத்தைத் திணித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நிச்சயமாக இல்லை பெயரில் அடையாலச் சொல்லாக ‘திராவிடம் ‘ இருப்பது என்பது...

“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”

முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...

பாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

இசுலாமிய அடிப்படைவாதிகளால் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 29.03.2017, புதன்கிழமை மாலை 5.00மணிக்கு சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி நகர துணைத் தலைவர் க.மனோஜ்குமார் தலைமையேற்க, நகர பொறுப்பாளர்கள் இராசேந்திரன், கண்ணன், செந்தில், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, திருச்செங்கோடு நகரகழகத் தோழர் தனலட்சுமி, ராசு வெங்கடேசு (ஈரோடு), திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன் உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நிறைவாக பேசினார். மத தீவிரவாதங்கள் தலைதூக்குவது, தமிழகத்தின் தனித்துவத்தை குலைத்து விடும் என்பதை விளக்கி உரையாற்றினார். பழ. உமாசங்கர் நன்றி கூறினார். மேட்டூரில் – கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்துக் கழகத்தின் சார்பில் 27.3.2017...

காவேரிப்பட்டினம் – அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு : மாவட்டக் கழகம் எதிர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள்  மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர்.  தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம்...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சட்டம் இந்த விதியை கட்டாயப்படுத்தவில்லை. நீதித் துறையில் தலித் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதும்...

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளனர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன – ஜாதிய – இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான...

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 20.3.2017 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல், சென்னை இரண்யா ஆகியோர் உரைக்குப் பின் சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மேட்டூர் டி.கே. ஆர். இசைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்ற கூட்டம் நிறைவுற்றது. குருவையில் : ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “ஆணவ கொலைகளும், அண்மைகால பெண்கள் கொலைகளும்; தீர்வை நோக்கி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரை...

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65 சதவீதம். இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’. இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது. “தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்’’ என்று தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு...

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ நடிகர் சத்தியராஜ், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக ரூ. 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையாக சென்னை மாவட்டக் கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன்,  செந்தில், எப்.டி.எல்., ஆகியோர் நடிகர்சத்யராஜ் இல்லம் சென்று காசோலையைப் பெற்றுக் கொண்டனர். பெரியார் முழக்கம் 06042017 இதழ்

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

கே.தொட்டியப்பட்டியில் ஜாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை சந்தித்து கழகம் ஆறுதல் 04042017

04.04.2017 செவ்வாய்க்கிழமையன்று விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டியில் ஆதிக்க நாயக்கர் ஜாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அருந்ததியின மக்களை திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன்,மதுரை மாவட்டச்செயலாளர் மா.பா.மணிகண்டன்,மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி ஆகியோர் ஜாதிய வன்கொடுமைக்கு ஆளான மக்களை சந்தித்து நடந்த சம்பவங்களை குறித்து விசாரித்தறிந்தனர். பாதிக்கப்பட்ட சமூகமான அருந்ததியின மக்களுக்கான நீதி வேண்டிய போராட்டத்திலும்,தொடர்ச்சியாக அம்மக்களின் உரிமைப்போராட்டங்களிலும் திராவிடர் விடுதலைக் கழகம் என்றென்றும் அம்மக்களோடு துணை நிற்கும் என உறுதியளித்தனர். மேலும் இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படும் வகையில் வழக்கை நடத்திடவும்,உடமைகளை இழந்து நிற்கும் அம்மக்களுக்கு உடனடியாக தக்க நிவாரணம் வழங்க கோரியும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்...

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !

தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது ! தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ! தமிழக அரசே,! பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்கு ! அம்மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடு ! விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டி.இக் கிராமத்தில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதியான நாயக்கர் ஜாதி பகுதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன. கிராமத்திற்கு தள்ளி சுடுகாட்டு பகுதியில் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது.அந்த குடிநீர்த்தொட்டியின் கீழ் உள்ள குழாயில்தான் அருந்ததியின மக்கள் குடிநீர் பிடித்து வந்தார்கள்.ஆதிக்க ஜாதியினர் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்தும் மேலும் தங்கள் தண்ணீர் தேவைக்காக சுடுகாட்டு...

டெலிகிராப் இதழ் தோழர் ஃபாரூக் படுகொலை செய்தி

டெலிகிராப் இதழ் (Telegraph India) இசுலாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட தோழர் பரூக் குறித்து எழுதியுள்ள கட்டுரை : https://www.telegraphindia.com/117…/…/7days/story_143977.jsp

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்”

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்” நாள் : 07.04.2017. வெள்ளி. நேரம் : மாலை 6 மணி. இடம்: தர்மபுரி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஆந்திரமாநில செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு சுட்டுபடுகொலை செய்யப்பட்ட அப்பாவி20 தமிழக கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 20 தமிழர்கள் படுகொலையான வழக்கில் தமிழக அரசு தலையீடு செய்யக் கோரியும் புலம் பெயரும் தமிழக கூலிதொழிலாளர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தக் கோரியும் 07.04.2017 தர்மபுரியில் பொதுஉரையாடல் நடைபெற உள்ளது.  

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 02042017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 2.4.17 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் உமாபதி தலைமையில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நடந்து. இதில் குறிப்பாக புரட்சி பெரியார் முழக்கம் சந்தா உயர்த்துதல், நிமிர்வோம் இதழ் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்தல் மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம் நடத்துதல் என பல்வேறு தளங்களில் பெரியரியலை முன்னெடுப்பதை கலந்தாலோசிக்க பட்டது.

பெரியார் மறைவு – தலைவர்கள் இரங்கல் தொகுப்பு

பெரியார் இறந்த போது பல தலைவர்களும் பத்திரிக்கைகளும் வெளியிட்ட இரங்கல் செய்தியை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டார். கடைசியில் அவர் ஆசிரியர் குறிப்பாக எழுதியது முக்கியமான ஒன்று. பெரியார் மறைவுக்குப் பின்னர் அவரைப் பற்றிய பலரின் கருத்துரை * கவர்ச்சி மிக்கத் தலைவர். எப்பொழுதுமே போராடியவர் – குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. * ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர் – தலைமை அமைச்சர், இந்திராகாந்தி * நாடு மாபெரும் புரட்சியாளரை இழந்து விட்டது. வாழ்க்கை முழுவதும் இந்து குமுகாயத்தில் புரட்சியான மாறுதலை உண்டாக்கியவர் பெரியார் – நடுவணரசு அமைச்சர். செகசீவன்ராம். * இடைவிடாமல் சாதிக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய வீரர் – நடுவணரசு அமைச்சர். சி.சுப்பிரமணியம் *ஈ.வெ.இரா. ஆர்வமிக்க குமுகாயச் சீர்திருத்தக்காரர் – தமிழக ஆளுநர். கே.கே.சா. *குமுகாயச் சமநிலைக்காக அரும்பாடுபட்ட பெரியாரைத் தமிழகம் என்றும் மறக்காது –...

கோவை ஃபாரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணி

கோவை பரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணியின் தீர்க்கமான பேச்சுக்கு நன்றி.. இஸ்லாத்தை மறுத்து, கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காரணத்திற்க்காக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழக அன்பு சகோதரர் பாரூக் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அண்ணன் கொளத்தூர் மணியின் ஒரு மணி நேர பேச்சை முழுமையாக நேற்று கேட்டேன். பரூக்கின் கொலையை செய்தவர் பரூக்கோடு கடந்த சில மாதங்களாக திட்டமிட்டே உடன் சுற்றித் திரிந்த ஒரு இஸ்லாமியர் என்றும், கொலையை செய்த பிறகும், மருத்துவமனையில் வந்து அழுது நாடகம் ஆடி இருக்கும் அளவுக்கு குரூரர் என்ற செய்தியும் கேட்டு அதிர்ச்சி தான்.அந்த திடீர் இஸ்லாமிய நண்பர் மீதான சந்தேகம் இருந்ததையும் பரூக் உணர்ந்தே இருந்திருக்கிறார் என்பது இன்னும் கூடுதல் அதிர்ச்சி. பரூக்கின் உடல் பிணக்கூராய்வு நேரத்தில் நானூறு வெகுஜன மக்கள் குறிப்பாக பெரியார் திராவிட கழகர்கள் மருத்துவமனை முன்பு கூடி...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி உரை 14042011 சேலம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும்...

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜைகளை நடத்தும்  அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் சாலைகளை ஆக்கிரமித்து பந்தல்களைப்போட்டு ‘குண்டர்’களைப்போல் செயல்படுகிறார்கள் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். 17 ஆம் தேதி பாலியல் தொழிலாளர்களான பெண்களின் அமைப்பான ‘தர்பார் சமன்வே மகிளா கமிட்டி’ துர்கா பூஜை நடத்துவதற்கு கல்கத்தா காவல்துறை போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சானிப் சட்டர்ஜி துர்கா பூஜைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அப்போது சாலையின் குறுக்கே பெரிய பந்தல்களைப் போட்டு பூஜைகள் நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்? அமைச்சர்கள் குண்டர்களைப்போல் செயல் படுகிறார்கள் என்று குறிப்பிட்டதோடு இத்தகைய துர்கா பூஜை கொண்டாட்டங்கள் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.   பெரியார் முழக்கம் 26092013 இதழ்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.  பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்: இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று...

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

25ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி. ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேசுவரன் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி யுள்ளன. இது இலங்கையை ஆளும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் வழங்கிய தீர்ப்பு என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமில்லை; போருக்குப் பிறகு ராஜபக்சே தமிழர் பகுதியில் மேற்கொண்ட ‘புனரமைப்பு’ நட வடிக்கைகளை ஊதிப் பெருக்கியும் அரசு செயல்பாடுகளால் தமிழர்கள் ராஜபக்சே ஆட்சியின் மீது கொண்டிருந்த வெறுப்பு குறைந்துவிட்டது என்றும் திட்டமிட்டு சில பார்ப்பன ஏடுகள் பரப்பிய கருத்துகள் உண்மையல்ல என்பதையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மாற்றம் தமிழர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டு வரப் போவதும் இல்லை...

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.9.2013 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுத்து நாட்டின் பொருளா தாரத்தை சரி செய்யக் கோரி திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மண்டல அமைப்புச் செயலாளர் விஜயன், செயலவைத் தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் க.அகிலன், மாநகர செய லாளர் ஜீவா நகர் குமார், மாநகர அமைப்பாளர் நீதி ராசன், மாநகரத் தலைவர் சண்முகம், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன், மணிகண்டன், நகுலன், பிரசாத், மதுரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் கழகம் ராஜா, பாண்டித்துரை, சௌந்தர், விக்னேஷ், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பெரியாரின் 135 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக இந்நிகழ்வுக்கு...

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நீதிமன்றங் களே துணை போவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ். சந்துரு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வோரை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘தி இந்து’ (செப். 22) தமிழ் நாளிதழில் இது குறித்து அவர் எழுதியது: மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தபோல்கரின் படுகொலை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடெங்கும் மூடர் கூடங்கள் உருவாவதை தடுக்க சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மராட்டியத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை அரசே தண்டித்த வரலாறுகளும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந் தில் மக்கள் பெருக்கத்துக்கு எதிராக குடும்பக் கட்டுப்பாட்டை அன்னிபெசன்ட் அம்மையார் வலியுறுத்தினார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சிறையில் அடைத்தனர். 1925 இல் டார்வினின் பரிணாம...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

 ‘வினாயகன்’ சிலை பால் குடிப்பதாக புரளி. கோயில்களில் பக்தர்கள் கூட்டம். – செய்தி பால் குடித்த வினாயகன், சிறுநீர் கழித்தானா? தீண்டாமையில்லாத கிராமமாக பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிங்கா நல்லூரை தமிழக அரசு தேர்வு செய்து பரிசு வழங்குகிறது. – செய்தி எப்படியோ தீண்டாமை இல்லாத ஒரு கிராமத்தை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து விட்டீர்களே! மகத்தான சாதனை போங்க! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு எல்லாம் சட்டங்களைக் கொண்டு வர முடியாது.          – ‘துக்ளக்’ சோ அப்போ, மூடநம்பிக்கைகளைப் பாது காப்பதற்கு சட்டம் கொண்டு வரலாமா? மயிலாடுதுறை – மயூரநாதசாமி கோயில் கோபுரத்தில் தங்கக் கலசம் திருட்டு; போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது.          – செய்தி கவனம்! மோப்ப நாய் மாமிசம் சாப்பிடாத ‘சைவ’மாகவும், ‘அக்மார்க்’ இந்துவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை அனுமதிக்காது. வினாயகன் சிலை வைப்பதில் தகராறு; கோவையில் சிவசேனை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விசுவ இந்து பரிஷத்தினர்...

பெண் சில கேள்விகள்… பழநிபாரதி

முதன் முதலாக பெண்ணை வருணிக்கத் தேர்ந்தெடுத்த வார்த்தை எது? ஆதாமின் முத்தம் ஏவாளின் எந்த பாகத்திற்கு முதலில் கிடைத்திருக்கும்? பெண்ணின் கூந்தலுக்கு முதன் முதலில் சூட்டப்பட்ட பூ எது? பெண் முதன் முதலில் எதற்காக ஆடைக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள்? பெண்ணின் கண்ணீர் முதன் முதலில் எதன் பொருட்டு சிந்தப்பட்டிருக்கும்? வரதட்சிணையால் வதைக்கப்பட்ட முதல் முதிர்கன்னி மாத விலக்கும் நின்றுபோனதை யாரிடம் சொல்லியிருப்பாள்? தாளிணிப்பாலுக்குப் பதில் கள்ளிப் பால் ஊட்டப்பட்ட முதல் பெண் சிசு எது? ஆண்களின் தேசத்தில் கேள்விகளுக்குள் சிக்கிய பெண்ணை மீட்க எந்தப் பெண் முதன் முதலில் போராளியானாள்? அவளின் கடைசி வாரிசிடம் கொடுத்து கிழித்தெறியச் சொல்லுங்கள் இந்தக் கவிதையை நிமிர்வோம் மார்ச் 2017 இதழ்

நிமிர்வோம் பிப்ரவரி 2017 இதழ் வாசகர் கடிதஙகள்

நன்னன் நேர்காணல் நிமிர்வோம் இதழில் பேராசிரியர் நன்னன் அவர்களின் பேட்டி -இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. பெரியார் இயக்கம் எதிர் நீச்சலில் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்ற வரலாற்றை -இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பேராசிரியர் நன்னன் –மொழியியல் அறிஞர் என்ற பார்வை மட்டுமே எங்களிடம் இருந்தது. அவர் பெரியாரியச் சிந்தனையில் ஆழமானப் பற்றுகொண்டு -அந்த நெறியை வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பதை பேட்டியிலிருந்து அறிந்தோம். -வே.கண்ணன், வில்லிவாக்கம் மேக்நாட் சாகா பஞ்சாங்கமும்அறிவியலும் பஞ்சாங்கம் அறிவியலுக்கு எதிரானது என்பதை விஞ்ஞானி மேக்நாட் சாகா அறிக்கையிலிருந்து வெளி யிட்டிருந்தது மிகவும் சிறப்பு. ‘நிமிர்வோம்’ கட்டுரையை படித்தபிறகு தேவிகாபுரம் சிவா நூலை தேடிப்போய் வாங்கிப் படித்தேன். கல்வியில்மிகச்சிறந்தமாணவனாகஇருந்தாலும் -சமூகத்தின் தீண்டாமைக் கொடுமையை அவர் அனுபவித்திருக்கிறார். காலில் செருப்பு அணியாமலே சொந்த ஊருக்குநடந்தேசென்றிருக்கிறார். சொந்தகிராம மான சியாத்தாலி (இப்போது வங்கதேசம்) யில் சரசுவதி கோயிலுக்கு வழிப்படச் சென்ற அவரை பார்ப்பன அர்ச்சகர் விரட்டி அடித்த போதுதான்...

ஜக்கி அவர்களே… பதில் சொல்லுங்கள்!

ஜக்கிவாசுதேவ் -தொலைக்காட்சிகளுக்கு பேட்டிஅளித்துவருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் -கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன் மேய்ச்சல் பகுதியில்தானே இந்த மய்யம் கட்டப்பட்டிருக்கிறது....

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, , துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள்  குறித்த தகவல்களை மனிதவளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார்.  இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மகாசிவராத்திரியன்று அரித்துவாரைச் சார்ந்த அச்சுயதானந்தா என்ற பார்ப்பன சாமியார், தன்னை துவாரகபீட சங்கராச்சாரியாக அறிவித்துக் கொண்டார். ஏற்கெனவே சுவாமி சுவரூபானந்தா என்பவர் உள்ளிட்ட இரண்டு சங்கராச்சாரிகள், இந்த மடத்தில் இருக்கிறார்கள். புதிதாக...

பறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்!

பார்ப்பனர்களின் இந்து மத, சாதிய, பார்ப் பனிய ஆதிக்கம் பெரும்பான்மை மக்கள் மீது மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செயல்பட்டுள்ள ‘பறவைகளின் மீதான பார்ப்பனியத்தின் நுண் அரசியல்’ இக்கட்டுரையின் பேசு பொருளாக அமைந்துள்ளது. பறவைகள், விலங்குகள், புழுப் பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்குரிய, புறச் சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல் பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமானபெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். கால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின் காலடித் தடங்களில் இருந்து வெளிவரும் புழுப்பூச்சிகளை பிடித்துண்ணும் பறவையை கண்டவுடன், ‘மாடு மேய்ச்சான்’, மாடு விரட்டி’, ‘உண்ணி கொக்கு’ என பொருத்தமான பெயர்களை தமிழர்கள் வட்டாரத்திற்கேற்ப சூட்டி மகிழ்ந்தனர். அதுபோலவே, இன்றைய தலைமுறை வியக்கும் விதமாக பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருந்தனர். அதில் பல பெயர்கள் சாதிய மேலாதிக்கத்திற்குள்ளாகியுள்ளது. தமிழில் பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்கள் அமைந்திருக்க, தட்டான்கள்(Dragonfly),...

கைதாகும் தலைவர்கள் அன்றும் இன்றும்..

தமிழ்நாட்டில் முதல்வர்கள், முதல்வராக வருவதற்கு துடிப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிறைக்குப் போகிறார்கள். அதற்காக வெட்கப் படுவது இல்லை, இது ஒருபுறம் ஆனால் கொள்கைக்காக, அடக்குமுறைகளை எதிர்த்து சிறை சென்ற தலைவர்கள் தமிழகத்தில் உண்டு. அதிலும் பெரியார் சிறை சென்ற வரலாறுகள் கைகால்விலங்குகளோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளே கடும் வேலை வாங்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஏனைய தலைவர்களோடு பெரியார், இதிலும் தனித்துவமாக நிற்கிறார், கொள்கைக்காக சிறைக்கு போவது கூட தியாகம் அல்ல என்கிறார் பெரியார். 1932ம்ஆண்டுசோவியத்ரஷ்யாவுக்குபயணம் சென்று திரும்பிய பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் ‘இன்றைய ஆட்சி’ ஏன் ஒழியவேண்டும் என்று எழுதியகட்டுரைக்காக,அவர்மீதுஅடக்குமுறை சட்டம் பாய்ந்தது. அந்தக் கட்டுரை ஏழை எளிய மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கும், பார்ப்பன மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும், மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது என்ற கருத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பெரியாரும் குடிஅரசு பதிப்பாளர் என்ற முறையில் அவரது சகோதரி கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அடக்குமுறைகள்...