கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஏப்.2ஆம் தேதி மாலை 7 மணியளவில் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி கலந்துரையாடலை ஒருங்கிணைத் தார். தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் சென்னை மாவட்டக் கழக செயல்பாடுகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களை பரப்பும் இயக்கம், பரப்புரைக் கூட்டங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் – இந்து மத எதிர்ப்பு – ஜாதி ஒழிப்புக்காக நடத்திய விவாதங்கள் குறித்து வடசென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவெய்திய கழகத் தோழர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு மாவட்ட கழக சார்பில் ரூ.20,000/- நிதி வழங்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழவேந்தன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 13042017 இதழ்