துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜைகளை நடத்தும்  அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் சாலைகளை ஆக்கிரமித்து பந்தல்களைப்போட்டு ‘குண்டர்’களைப்போல் செயல்படுகிறார்கள் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். 17 ஆம் தேதி பாலியல் தொழிலாளர்களான பெண்களின் அமைப்பான ‘தர்பார் சமன்வே மகிளா கமிட்டி’ துர்கா பூஜை நடத்துவதற்கு கல்கத்தா காவல்துறை போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சானிப் சட்டர்ஜி துர்கா பூஜைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

அப்போது சாலையின் குறுக்கே பெரிய பந்தல்களைப் போட்டு பூஜைகள் நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்? அமைச்சர்கள் குண்டர்களைப்போல் செயல் படுகிறார்கள் என்று குறிப்பிட்டதோடு இத்தகைய துர்கா பூஜை கொண்டாட்டங்கள் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 

பெரியார் முழக்கம் 26092013 இதழ்

You may also like...