‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்
‘இனமுரசு’ நடிகர் சத்தியராஜ், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக ரூ. 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையாக சென்னை மாவட்டக் கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செந்தில், எப்.டி.எல்., ஆகியோர் நடிகர்சத்யராஜ் இல்லம் சென்று காசோலையைப் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் 06042017 இதழ்
