பாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்
இசுலாமிய அடிப்படைவாதிகளால் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 29.03.2017, புதன்கிழமை மாலை 5.00மணிக்கு சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி நகர துணைத் தலைவர் க.மனோஜ்குமார் தலைமையேற்க, நகர பொறுப்பாளர்கள் இராசேந்திரன், கண்ணன், செந்தில், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, திருச்செங்கோடு நகரகழகத் தோழர் தனலட்சுமி, ராசு வெங்கடேசு (ஈரோடு), திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன் உரையாற்றினர்.
திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நிறைவாக பேசினார். மத தீவிரவாதங்கள் தலைதூக்குவது, தமிழகத்தின் தனித்துவத்தை குலைத்து விடும் என்பதை விளக்கி உரையாற்றினார். பழ. உமாசங்கர் நன்றி கூறினார்.
மேட்டூரில் – கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்துக் கழகத்தின் சார்பில் 27.3.2017 அன்று பெரியார் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு தலைமையேற்றார். ஆதித் தமிழர் பேரவை வீர சிவா, திராவிடர் கழகம் சந்திரசேகரன், திராவிட பண்பாட்டு நடுவம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கி. முல்லைவேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ. அன்பு, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மா. சிவக்குமார், கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்வில் நங்கவள்ளி, ஆர்.எஸ்., இராசிபுரம், கொளத்தூர், காவலாண்டியூர், தார்க்காடு, தண்டா காவேரி கிராஸ், சேலம் கேம்ப் பகுதி, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
தக்கலையில் பாரூக்குக்கு வீரவணக்கம் – 26-03-2017 ஞாயிறு மாலை 4.00மணிக்கு 16-03-17 அன்று இசுலாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்ட பாரூக் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் சூசையப்பா தலைமையில் தமிழ் மதி, ஜாண் மதி, நீதி அரசர், மஞ்சு குமார், இராஜேஸ் குமார், இரமேஸ் பாபு, சுனில், இராஜன், சாந்தா, சமூக ஆர்வலர் போஸ், அருள்ராஜ், பேரின்ப தாஸ், இளங்கோ, ஆன்றன் தமிழ்செல்வன், ஆர்மல் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் இசுலாமிய மத வெறியர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவுச் செய்தனர். இரங்கல் உரை பெரியார் தொழிலாளர் கழக அலுவலகத்தில் தமிழ் மதி நிகழ்த்தினார்.
பெரியார் முழக்கம் 06042017 இதழ்