பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.9.2013 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுத்து நாட்டின் பொருளா தாரத்தை சரி செய்யக் கோரி திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மண்டல அமைப்புச் செயலாளர் விஜயன், செயலவைத் தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் க.அகிலன், மாநகர செய லாளர் ஜீவா நகர் குமார், மாநகர அமைப்பாளர் நீதி ராசன், மாநகரத் தலைவர் சண்முகம், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன், மணிகண்டன், நகுலன், பிரசாத், மதுரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் கழகம் ராஜா, பாண்டித்துரை, சௌந்தர், விக்னேஷ், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பெரியாரின் 135 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக இந்நிகழ்வுக்கு காவல்துறை இந்துக்கள் மனது புண்படுகிறது என்று அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. காவல்துறையினர் முழு அளவில் வந்திருந்தனர். 6 பெண்கள் உள்பட 73 பேர் நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 26092013 இதழ்

You may also like...