இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 07.04.2017 வெள்ளிக்கிழமை அன்று இரவு 6-00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக்குழுவின் பறை ஜாதிக்கான இசை அல்ல பறை தமிழரின் இசை என்ற முழக்கத்தோடு பறை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நிமிர்வு கலைக்குழுவினர் பறைக்கேற்றவாறு பரதம் ஆடி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து நகர தலைவர் சி.தனசேகரன் தலைமையேற்க,  முருங்கப்பட்டி ரமேசு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. நகர செய்தி தொடர்பாளர்  சி.மோகன்ராஜ் பெரியார் தொண்டர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி குறித்தும் அதை விளக்கியும் உரையாற்ற அவரைத் தொடர்ந்து கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சக்தி பெரியாரியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் உரையாற்றினார். இவர்களைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் சாக்கோட்டை மு.இளங்கோவன், இம்மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  இழிவையும், அடிமைத்தனத்தை யும் ஒழிக்க தந்தை பெரியார் தன் வாழ்நாளில் எத்தனை எத்தனை போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினார் என்று விளக்கவுரையாற்றினார். இறுதியாக நகர துணைச்செயலாளர் ரா. தங்கராசு நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 13042017 இதழ்

You may also like...