உக்கம்பருத்திக்காட்டில் கழகத்தின் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம்
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளை கழக சார்பில் 24, 25.05.2017 ஆகிய இரண்டு நாள்கள் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதல்நாள் முதல் வகுப்பு “மதவாத அரசியல்” (முஸ்லிம், மாட்டுகறி, சமஸ்கிருதம்) எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி வகுப்பு எடுத்தார். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு “பெரியாருக்கு முன்னும் பின்னும்; நீதிகட்சி சாதனைகள்” குறித்து புலவர் செந்தலை கவுதமன் வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு “தி.வி.க. உங்களிடம் எதிர்பார்ப்பது” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “இடஒதுக்கீடு – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் பால்.பிரபாகரன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். இரவு 8.30 மணிக்கு முதல் நாள் வகுப்பு முடிவுற்றது. இரவு உணவுக்கு பின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 25.5.17 அன்று காலை “உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம்” குறித்து மருத்துவர் எழிலன் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து “ஜாதி தோற்றம், இருப்பு, ஒழிப்பு” எனும்...
