மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017

தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ராஜேந்திரன்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்தும், அடுத்தடுத்த நாட்களிலும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்

18766106_1952191798398044_638127217877999689_n 18767538_1952191921731365_4965632473193413019_n 18767932_1952191845064706_8075145173242236870_n 18881811_1952191855064705_5735615166137439055_n 18893120_1952191991731358_8514418646785026325_n

You may also like...