இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை 04062017

வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம்.

இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது.

உலகத்தின் ஆதி மொழியாய் தமிழும், தமிழர்களின் கலாச்சாரமும், நாகரிகமும் வரலாற்று ஆதாரங்களோடு இருக்கையில், நாமே இந்தியை அறிவென்பது, அதை கற்க விடாமல் தடுக்கப்பட்டோம் என்ற ஆரிய பொய் பிரச்சாரத்தை முன்மொழிவதும் தமிழர் அறிவிற்கு ஏற்புடையதா …

இந்தி கற்பது எப்படி அறிவாகும் ? இலக்கிய வளமுள்ள தமிழிலேயே அறிவியல் வளர்ச்சியில்லை, அறிவியல் வளர்ச்சி இல்லாத மொழி மனித வாழ்வியல் வளத்தை மேம்படுத்த எப்படி உதவும் என்ற பெரியாரின் கேள்வியை மனதிலேற்றி இந்தியை அணுகும் போது இந்தி அறிவென்று தமிழர் நாமே ஏற்பது அபத்தமானது, அவமானமானது. இந்தியில் உள்ள அறிவியல் வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என்னென்ன?. சமகால கணினி வளர்ச்சியில் இந்தி மொழியின் பங்கென்ன.? இப்படி எதையுமே ஆராயாமல் ஏற்பது அறிவல்ல அறியாமையே.

இந்தி மொழி திணிப்பு தீவிரப்படுத்துவதன் நோக்கமே மாநில மொழிகளின் ஆதிக்கத்தை மட்டு படுத்தவே. உதாரணமாய் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்படும் மாநில, மத்திய வேலை வாய்ப்புகளில், பதவி உயர்வுகளில் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டு இந்திவாலாக்கள் உண்மைக்கு புறம்பான முறையில் நியமிக்கப்படுகிறார். இது தபால்துறை ஊழியர்கள் நியமனத்தில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. இது மாதிரியான நியமனத்தில் பதவிக்கு வந்தவர்கள் நாம் தினந்தோறும் புழங்கும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் மொழி அறியாமல் நம்மை திணற விடுபவர்கள். இது மறைமுகமாக இந்தியின் தேவையை நமக்கு தெரியாமலே நம்மில் விதைக்கும் முயற்சியே. இதுவும் தமிழர்கள் மீதான, தமிழர்கள் அறிவு மீதான, தமிழர்கள் வளர்ச்சிகள் மீதான சுரணட்லே .

இதை வெறும் மொழி திணிப்பென அணுகினால், நம் அடையாளங்களை, நம் உரிமைகளை ஒவ்வொன்றாய் இழந்து நாம் அடையாளங்களற்று போவாம்.

தொடர்ச்சியாய் தமிழகம் ஏன் புறக்க்கணிக்கப் படுகிறது ? ஆரியத்தின் தமிழர்கள் மீதான வன்மம்தான் என்ன.? காலங்காலமாக ஆரிய விதைப்பிற்கு தமிழகமும், தமிழும், கலாச்சார, பண்பாட்டு அடிப்படையில் எதிராய் இருப்பது ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை காண, நமது மறைக்கப்பட்ட, மழுங்கடிக்கப்பட்ட வரலாறுகளை அறிந்துக்கொள்ள , இந்தி திணிப்பு பற்றி விழிப்புணர்வு கொள்ள கிடைத்ததொரு அறிய வாய்ப்பாய் …

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் …

” தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு ”

இந்தி திணிப்பை எதிர்ப்போம் !
இழந்துவரும் உரிமைகளை மீட்போம் !!

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியும், கழக பொதுச்செயலாளர் தோழர் .விடுதலை ராசேந்திரனும் அழைக்கிறார்கள் …

ஜீன் 4 …

திருவான்மியூரில் மாலை 3 : 00 மணிக்கு கூடுவோம் வாருங்கள் …

வரலாறு அறிவோம் …
ஆரிய விதைப்பை தடுப்போம் …

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

 

You may also like...