வாசகர்களிடமிருந்து…
மே 2018 ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த ‘சுயமரியாதை-சமதர்மக் கட்டுரைகள்’ மிகவும் சிறப்பு. ‘பணக்காரன்-ஏழை’ முரண்பாடுகளைக் கோட்டையாக இருந்து பாதுகாப்பதே இந்தியாவின் ‘மேல்ஜாதி-கீழ்ஜாதி’ அமைப்புதான் என்று 1931ஆம் ஆண்டிலேயே பெரியார் எவ்வளவு சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. இந்தியாவில் ‘வர்க்கப் போராட்டம்’ என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ஜாதிய ஒடுக்குமுறை காரணமாக நடக்கும் மோதல்களுக்கு முகம் கொடுக்கும் காலகட்டத்திலேதான் இருந்து கொண்டிருக்கிறோம். “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற பகத்சிங் நூலை தமிழில் மொழி பெயர்த்த ப. ஜீவானந்தம் மீது தேசத் துரோக வழக்கை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டபோது அதற்கு ‘மன்னிப்புக் கேட்டு’ எழுதச் சொன்னது நான்தானே தவிர, ப.ஜீவானந்தம் அல்ல என்று பெரியார் எழுதியதைப் படித்தபோது அவரது நேர்மை வியக்க வைத்தது. இத்தகையத் தலைவர்களை இப்போது பார்க்க முடியுமா? – தமிழ்நேசன், திருச்சி ஜாதி-மதப் பண்பாட்டை எதிர்க்காமல், ஆணாதிக்க எதிர்ப்பு மட்டுமே சமத்துவத்தை உறுதி செய்யாது என்ற...
