காஷ்மீர் அத்துமீறல் : சர்வதேச விசாரணை கோருகிறது – அய்.நா.

காஷ்மீர் பகுதிகளில் இந்திய இராணுவம் நடத்தி வரும் ‘பெல்லட் குண்டு’ வீச்சு அடக்குமுறை சட்டத்தின் கீழ் நடக்கும் கைதுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை ஆணையம் 2018 ஜூன் 14ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறல்களையும், இந்த விசாரணைக்கு உள்ளாக்கக் கோருகிறது இந்த அறிக்கை. நடுவண் ஆட்சி, இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிவிட்டது. காங்கிரஸ் கட்சியும் இதில் பா.ஜ.க.வுடன் இணைந்து அய்.நா.வின் அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அய்.நா. அறிக்கையைத் தொடர்ந்தே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே கூட்டணியில் இருந்த பா.ஜ.க.  ஆதரவை விலக்கிக் கொண்டு ஆளுநர் ஆட்சிக்கு வழி திறந்துள்ளது.

நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்

You may also like...