இனி மரணத்தை வெல்லலாம்

இனி உயிர்க்கொல்லி நோய் களாலும், முதுமையாலும் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று மரபணு பொறியாளர்களான வெனிசூலா நாட்டைச் சேர்ந்த ஜோஸ் லூயிஸ் கார்டெய் ரோவும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் உட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அண்மையில் இவர்கள் ‘தி டெத் ஆப் டெத்’ (மரணத்தின் மரணம்) என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் இனி மரணம் இல்லாத நிரந்தரமான வாழ்வு, யதார்த்தமாகவும், அறிவியல்பூர்வமாகவும் சாத்தியம் ஆகும். அது எதிர்பார்த்தைவிட இன்னும் வேகமாக சாத்தியம் ஆகப் போகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இனி மனிதர்கள் விபத்துகளில் மரணம்  அடைவது மட்டுமே தவிர்க்க முடியாமல் போகுமே தவிர, ஒரு போதும் இயற்கையாகவோ, நோயினாலோ மரணம் அடைய மாட்டார்கள் என்ற சூழல் வந்துவிடும். பிற புதிய மரபணுக்களை கையாளும் தொழில் நுட்பங்களுடன் நானோ தொழில் நுட்பம், இதில் முக்கிய பங்கு ஆற்றப் போகிறதாம்.

அப்போது, ‘மறு ஜென்மம்’, ‘தலைவிதி’ தத்துவங்களும் முடிவுக்கு வந்துவிடும். அதைப் பேசும் பகவத் கீதை குப்பைக் கூடைக்குத்தான் போகும்!

நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்

You may also like...