கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022
#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில் ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம். தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. பங்கேற்றவர்கள்: மதிமுக – மல்லை சத்தியா பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார் தபெதிக – கு.இராமகிருஷ்ணன் சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ். தமஜக – கே.எம்.சரீப் எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது பியூசிஎல் – கண.குறிஞ்சி ததேமமு – மீ.த.பாண்டியன் மே 17 – திருமுருகன் இளந்தமிழகம் – செந்தில் தமிழர் பாசறை – எழிலரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். #கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்...
