‘புதுவைப் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்’ சார்பில் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்கள்
பெரியாரின் ஆணையை ஏற்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957 நவம்பர் 26ஆம் தேதி எரித்து சிறைக் கொடுமைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய கருஞ்சட்டை மாவீரர்கள் நினைவாகவும் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கமும், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், 19.12.2021 அன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரி, அரியாங்குப்பம் ஜோதி கல்வி மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்வில், ஜோதி கல்வி மய்யத்தின் ஆசிரியர் மா.ச. தமிழரசன் தந்தை அய்யா சங்கரபாணி படம் திறக்கப்பட்டது.
பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் இளைஞரணித் தலைவர் சா. இலாரன்ஸ் நிகழ்விற்கு தலைமை வகித்தார். சு.ஆனந்தி, ச.தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோதி கல்வி மய்யத்தின் ஆசிரியர் மா.ச. தமிழரசன் வரவேற்பு கூறினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.சக்திவேல் தொடக்கவுரை யாற்றினார். திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் – சிவ. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் சு.பாவாணன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கை கட்சி நிறுவனர் – இரா.மங்கையர் செல்வன், இறுதியாக திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் அமைப்பாளர் அ.ச.தீனா நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெரியார் படிப்பகம் பொறுப்பாளர் கு.சபரி நன்றி கூறினார். முன்னதாக பெரியாரிய குடும்பத்தின் இளைஞர்கள் சிறுவர்கள் சிலம்பாட்டம் நடத்திக் கொள்கைப் பாடல்களையும் பாடினர்.
நிகழ்வில், கழக வார ஏட்டிற்கு 50 சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் வழங்கினர்.
பெரியார் முழக்கம் 23122021 இதழ்